என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிறைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ
அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் காணாத தென் நிலா'
என்னவென்று .....
தெம்மாங்கு பாடிடும் சின்ன விழி மீன்களும்
பொன் ஊஞ்சல் ஆடிடும் கன்னி கருங் கூந்தலும்
முத்தாடும் மேடை பார்த்து வாடி போகும் வான் பிறை
முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தீர்க்கும் தாமரை
வண்ண பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க தாளாமல் நாணுவா
புது பூ கோலம் தான் காலில் போடுவா
என்னவென்று......
கண்ணோரம் ஆயிரம் காதல் கதை பேசுவாள்
முந்தானை சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாய மேகம் ஆகி ஆசை தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடி பாடி போடுவாள்
அதிகாலை மூச்சு அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்
Raajakumaaran - Ennavendru Solvathamma