Pages

Search This Blog

Friday, January 24, 2014

ராஜகுமாரன் - சின்ன சின்ன சொல்லெடுத்து

சின்ன சின்ன சொல்லெடுத்து சொந்தம் சொல்ல நீ போ தூது
சொன்ன சொல்லில் குற்றமில்லை சுத்தம் என்று நீ போய் கூறு
தனியாக மாமன் துணை தேடி வாட
தெரியாமல் நானும் பரிகாரம் தேட

சரணம் 1

கண்ணீர் கரைந்துருகும் கன்னி மெழுகானேன்
நானே நீ பாரடி
மன்னன் மனம் கலங்க மண்ணில் சருகானேன்
பூவே நீ கூறடி
நித்திரையை நானும் மூடி நித்தம் ஒரு கானம் பாடி
உத்தமியாய் தேடி தேடி கத்தும் ஒரு வானம் பாடி
உன்னுதட்டில் பொய்யை வைத்து முள்ளில் தைத்த பூவாய் ஆனேன்
என் மனதில் பாசம் வைத்து கல்லில் செய்த தேராய் போனேன்
அலை மேல் படகாய் ஆனேன்

சின்ன சின்ன சொல்லெடுத்து ...

சொல்லால் விழைந்ததின்ற சொந்தக்கதை தானே
பூவே நீ கேளடி
பெண்ணே வருத்தமில்லை நெஞ்சில் என்ன பாரம்
நீயே போய் கூறடி
கன்னிமையை மீறும் ஈரம்
கன்னி இவள் கோபம் கூறும்
வெண்ணிலவை மூடும் மேகம் விட்டு விலகாதோ தூரம்
வண்ணக்கிளி போனபின்னே தன்னந்தநியானேன் நானே
எண்ணி எண்ணி ஆவதென்ன கண்கள் உறங்காதோ மாமா
உயிர் போய் உடலானேன்

சின்ன சின்ன சொல்லெடுத்து ...

Rajakumaran - Chinna Chinna Sol Eduthu

Followers