Pages

Search This Blog

Tuesday, November 5, 2013

சின்ன தம்பி - குயில புடிச்சி கூண்டில்

குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ....

குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்

ஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலி கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாலை நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மேலே எனக்கென்ன கோபம்
ஓலை குடிசையில இந்த ஏழ பொறந்ததுக்கு
வந்தது தண்டனையா
இது தெய்வத்தின் நிந்தனையா
இதை யாரோடு சொல்ல

குயில புடிச்சி கூண்டில் அடச்சி ....

எல்லார்க்கும் தலைமேல எழுத்தொண்ணு உண்டு
என்னான்னு யார் சொல்லக் கூடும்
கண்ணீரக் குடம் கொண்டு வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாரார்க்கு எதுவென்று விதி போடும் பாதை
போனாலும் வந்தாலும் அது தான்
ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கோழை என்றே இருந்தேன் போனது கை நழுவி
இதை யாரோடு சொல்ல

குயில புடிச்சி கூண்டில் அடச்சி ....

Chinna thambi - Kuyila pudichu

சின்ன தம்பி - உச்சந்தல உச்சியில

உச்சந்தல உச்சியில உள்ளிருக்கும் புத்தியில பாட்டு
இது அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லி தந்ததில்ல நேத்து
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா என்னுதில்ல
சாமிகிட்ட கேளு

கண்மாயி நெறஞ்சாலும் அதை பாடுவேன்
நெல்லு கதிர் முத்தி முளைச்சாலும்
அதை பாடுவேன்
புளியம் பூ பூத்தாலும் அதை பாடுவேன்
பச்ச பனி மேலே பனி தூங்கும்
அதை பாடுவேன்
செவ்வானத்த பார்த்தா சின்ன சிட்டுகள பார்த்தா
செம்மறிய பார்த்தா சிறு சித்தெறும்ப பார்த்தா
என்னை கேட்காமலே பொங்கிவரும்
கற்பனைதான் பூத்து வரும் பாட்டு தமிழ் பாட்டு

தெம்மாங்கு கிளிகண்ணி தேன் சிந்துதான் இன்னும்
தாலாட்டு தனிப்பாட்டு எசப்பாட்டுதான்
என் பாட்டு இது போல பல மாதிரி
சொன்ன எடுப்பேனே படிப்பேனே குயில் மாதிரி
தாயாலதான் வந்தேன் இங்கு பாட்டாலதான் வளர்ந்தேன்
வேறாரையும் நம்பி இங்கே வல்லே சின்ன தம்பி
இங்கு நான் இருக்கும் காலம் மட்டும்
கேட்டிருக்கும் திக்கு எட்டும் பாட்டு எந்தன் பாட்டு

Chinna thambi - Uchanthala uchiyila

சுறா - சிறகடிக்கும் நிலவு

வரிகள்:

சிறகடிக்கும் நிலவு கரம பிடித்தது என்னை
பார்த்தவுடன் உன்னை தந்துவிட்டேன் என்னை
இருவருக்கும் மட்டும் வேண்டும் ஒரு பூமி
காவலுக்கு வேண்டும் காதல் எனும் சாமி

சிறகடிக்கும் ...

சரணம் ௧

என் வீட்டில் எல்லா புறமும் உன் வாசம் ஏன்  தந்தாய்
என் வீட்டில் எல்லா புறமும் உன் வாசம் ஏன் தந்தாய்
சில நேரம் யாரைக் கேட்டு எனக்குள்ளே நீ சென்றாய்
என் கால்கள் தனியாக உன் பின்னே செல்கிறதே
என் நெஞ்சம் துணையாக  உன் வழியில் கிடக்கிறதே
சூரியனை தின்ற மல்லிகையும் நீதான்
வெண்ணிலவை தோளில் சுமந்தவனும் நீ தான்

சிறகடிக்கும் ...

சரணம் ௨

ஆகாயம் தாண்டிட நெஞ்சம் ஈப்போது நினைக்கிறதே
ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே
அழகான தவறுகள் கூட நீ செய்ய பிடிக்கிறதே
அறியாத குழந்தை போல என் மனது குதிக்கிறதே
ஏதேதோ வேண்டும் என்று அடம பிடித்து கேட்கிறதே
பட்டியலை எழுது தருகிறேன் நானே
ஒட்டுமொத்த தேவை நீ ஒருவன் தானே

சிறகடிக்கும் ...

Sura - Siragadikkum Nilavu

சுறா - வாங்க கடல் எல்லை

பல்லவி

வாங்க கடல் எல்லை நான் சிங்கம் பெத்த பிள்ளை
சீறி பாயும் என்னை நீ சீண்டி பாக்காத
பஞ்சவர்ண கூட்டம் நீ பாரிஜாத தோட்டம்
ஆடு புலி ஆட்டம் ஆடிப் பாப்போமா
அரச்ச சந்தனத போல மயக்க வைக்கிரியே ஆள
வயசு பொண்ணு இருக்கு பூத்து
வந்து மஞ்சதண்ணியை ஊத்து
எம்மா எம்மா எம்மா மோப்பம் இடாதே
என்னை பார்த்து என்னை பார்த்து ஏப்பம் இடாதே
யமாய் யமாய் யமாய் சக்கரகட்டி
கமாய் கமாய் கமாய் பண்ணி வித்தையை காட்டு

சரணம் ௧

பூக்காரனே உன் காதிலே பூவைக்க வா சிலு சிலு சிங்காரி
என் காதிலே பூவைக்கவே யாரும் இல்லை அடடா மன்மதா
மழை மழை மேனி தான் குழு குழு கேணி தான்
மொத்தமாக அத்தனையும் உனக்குத்தான்
கொபழிக்கும் சுந்தரி கோபக்கார போக்கிரி
கூப்பிடாத சூரியனை ராத்திரி
கரும்பு தின்ன ஒரு கூலி
இருப்புக்கிள்ளை இங்க வேலி
புடவை கட்டி வந்த தேனீ
பொழுது போயிடுச்சு போ நீ
குண்டு மான்க குண்டு மான்க தோப்புக்கு வாயா
கொத்து கொத்தா காசிருக்கு சாப்பிடு போயா
அடேங்கப்பா அடேங்கப்பா ஆசையை பாரு

சரணம் ௨

படகோட்டியே பட்டு மெத்தை நான் போடவா
அடியே வேனாண்டி
பாய் போடவா பக்கத்திலே ஆளும் உண்டு
தொடு தொடு மச்சானே
புது புது மோகம் தான்
புயல் அடிக்கிற வேகம் தான்
வேகத்துக்கு வேகத்தடை போடுடா
முண்டகண்ணு மோகினி எங்க போச்சு தாவணி
மாராப்புக்கு வேற ஆள பாரு நீ
நெருப்புக்கு பாம்ப போல நீ இல்லியா
இருக்க கட்டிக்க கிளிய
கொக்கி போதுதேடி கொலுசு
தாங்க முடியலியே ரவுசு
ஊருக்குள்ளே எத்தனையோ ஆம்பிள்ளை பார்த்தேன்
கோட்டை தாண்டி ஓடி வந்த பொம்பிளை நானே
கோடு போட்டு வாழுகிற ஆம்பிளை நானே

யமாய் யமாய் யமாய் சக்கரகட்டி
கமாய் கமாய் கமாய் வித்தையை காட்டு
யம்மா யம்மா யம்மா மோப்பம் இடாதே
என்னை பார்த்து என்னை பார்த்து ஏப்பம் இடாதே

Sura - Vanga Kadal Ellai

சுறா - நான் நடந்தால் அதிரடி

நான் நடந்தால் அதிரடி
என் பேச்சு சரவெடி
என்னை சுற்றும் காதல் கொடி நீ

நீ நடந்தால் அதிரடி
உன் பேச்சு சரவெடி
உன்னை சுற்றும் காதல் கொடி நான்

நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்
நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்
என் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா
உன் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா

சரணம் ௧

உள்ளத்தில் கூச்சல் நீ
உள்ளுக்குள் காய்ச்சல் நீ
ரத்தத்தில் காதல் நீச்சல் நீ

மினிமினி கூட்டம் நீ தான்
வெண்பனி மூட்டம் நீ தான்
மகனி தோட்டம் நீ தானே
நீ தான் நிலவு பெத்த மகள்
நீ தான் நிலவின் அத்தை மகன்
முந்தானை வீடு
மூங்கில் காடு
பத்து விரலாலே தீ முட்டுவேன்
ஏன் இந்த வேகம்
வேண்டாம் மோகம்
காமன் வீட்டுக்குள் நான் பூட்டுவேன்

சரணம் ௨

மன்மத அம்பு நீ
முறுக்கிய நரம்பு நீ
இரவினில் வம்பு தும்பு நீ
வண்ணத்து பூச்சி நீ தான்
கண்களில் பேச்சு நீ தான்
காதலின் சாட்சி என்றும் நீ
நான் தான் முரட்டு ஜல்லிக்கட்டு
கை நீட்டும் தூரம்
காட்சி மாறும்
பூவைக் கண்டாலே போதை ஏறும்
முன் பின்னே என்றும்
ரோஜா கூட்டம்
நானோ உன் கையில் பொம்மலாட்டம்

நான் நடந்தால் அதிரடி
என் பேச்சு சரவெடி
என்னை சுற்றும் காதல் கொடி நீ

நீ நடந்தால் அதிரடி
உன் பேச்சு சரவெடி
உன்னை சுற்றும் காதல் கொடி நான்

நான் யார் ஜொலிக்கும் நட்சத்திரம்
நான் உன்னை ரசிக்கும் முத்துச்சரம்
என் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா
உன் பேரை கேட்டால் வெடிக்கும் தோட்டா
கண்ணாலே காட்டாதே எனக்கு டாட்டா

Sura - Naan Nadanthal Athiradi

சுறா - வெற்றி கொடி ஏத்து

இது நீச்சல் போட்டு வந்த எங்கள் வீட்டுப் பிள்ளை
வெற்றி என்னும் சொல்லை இவன் விட்டு வைத்ததில்லை
குளிரும் பனிமலை குமுறும் எரிமலை
ரெண்டும் கலந்த இதையம்
ஏழை எங்கள் வாழ்வில் இவனே காலை உதயம்


வெற்றி கொடி ஏத்து வீசும் நம்ம காத்து
காலம் நம்ம கையில் தான்டா
கட்டுமரம் போல ஒட்டி இருப்போமே
நம்மை வெல்ல யாரும் இல்லடா
ஒரு தாய் மக்கள் ஒன்றாய் என்றும் நிற்கவேண்டும்
நாளை உலகம் நம்மை பார்த்து கற்க வேண்டும்
ஈரகுச்சி என்று நம்மை எண்ணும் பேர்க்கு
தீக்குச்சி என்று சொல்லி உரசிக்காட்டு


காக்கைக்கெல்லாம் கூடுண்டு
இங்கு ஏது ஏழைக்கொரு வீடு
காற்றை கேட்டால் கூராதோ எந்த நாளும்
நாம் படும் பாடு செரிக்கும் சந்தோஷங்கள்
வந்தே தீரும்
சாதிக்கும் கைகள் சேர்ந்தால்
பிறர்க்காக வாழும் நெஞ்சம்
தனக்காக வாழும் கொஞ்சம்
எனக்கந்த நெஞ்சத்தை தேவன் தந்தானே
உனக்குள்ளே என்னை விதைத்தேன்
எனக்குள்ளே உன்னை விதைத்தேன்
ஹேய் ஹேய் ஹேய் ,ஹேய் ஹேய் ஹேய் ,
ஹேய் ஹேய் ஹேய் .
உனைப்போல என்னை நினைப்பேன்
உனக்கென்று என்னை தந்தேன்
கொண்டுப்போடா

வெற்றி கொடி ஏத்து
வீடும் நம்ம காத்து
வருங்காலம் நம்ம கையில் தாண்டா
கட்டு மரம் போல ஒட்டி இருப்போமே
நம்மை வெல்ல யாரும் இல்லடா

நானும் நீயும் முயன்றால்
சுத்தமாகும் நம்முடைய நாடு
உனக்கொரு மாளிகை கட்டிப் பார்க்க
நம்மை விட்டால் யாரு
என்னோடு வெறும் ஏரம் உள்ள்பேர்கள்
பினோடு வந்தால் போதும்
புது படகை போட்டு வைப்போம்
பொய்மைக்கு வெட்டு வைப்போம்
ஏனென்ற கேள்வியை கேட்டு வைப்போம் டா
இருந்தாகா தென்றல் காற்று தான்
எழுந்தாகா சூறை காற்று தான்
ஹே ஹே ஹே பிறந்தாச்சு நல்ல வேளை தான்
இனி நம்ம காட்டில் என்றும் அட மழை தான்

வெற்றி கொடி ஏத்து வீசும் நம்ம காத்து
வருங்காலம் நம்ம கையில் தாண்டா
கட்டுமரம் போல ஒட்டி இருப்போமே
நம்மை வெல்ல யாரும் இல்லடா

Sura - Vetri Kodi Yethu

சுறா - தமிழன் வீர தமிழன்

பல்லவி:

தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்
அனலை போல இருப்பான்
அடிமை விலங்கை உடைப்பான்
தன் நிழலை கூட மிதித்தால்
நெற்றி கண் திறப்பான்

தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்

சரணம் ௧

இவனை தீண்ட நினைத்தால்
இரும்புக் கையால் அழிப்பான்
இருளை போக்க இவனே
விளக்கை போல் வருவான்
தர்மம் காக்க என்றும்
தன்னை தானே தருவான்
அதர்மம் அழிக்க இவனே
ஆயுதம் ஆகிடுவான்

தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்

சரணம் ௨

எரிமலை போலே எழுவான்
எதிரியும் இவனை தொழுவான்
புயலை போல வந்து
போர்க்களம் வென்றிடுவான்
தனியே நின்று ஜெயிப்பான்
தரணியில் என்றும் நிலைப்பான்
இவனைப் போல ஒருவன் இனிமேல் யார் வருவார்

தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்
அனலை போல இருப்பான்
அடிமை விலங்கை உடைப்பான்
தன் நிழலை கூட மிதித்தால்
நெற்றி கண் திறப்பான்

Sura - Thamizhan Veera Thamizhan

Followers