Pages

Search This Blog

Tuesday, November 5, 2013

சுறா - தமிழன் வீர தமிழன்

பல்லவி:

தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்
அனலை போல இருப்பான்
அடிமை விலங்கை உடைப்பான்
தன் நிழலை கூட மிதித்தால்
நெற்றி கண் திறப்பான்

தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்

சரணம் ௧

இவனை தீண்ட நினைத்தால்
இரும்புக் கையால் அழிப்பான்
இருளை போக்க இவனே
விளக்கை போல் வருவான்
தர்மம் காக்க என்றும்
தன்னை தானே தருவான்
அதர்மம் அழிக்க இவனே
ஆயுதம் ஆகிடுவான்

தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்

சரணம் ௨

எரிமலை போலே எழுவான்
எதிரியும் இவனை தொழுவான்
புயலை போல வந்து
போர்க்களம் வென்றிடுவான்
தனியே நின்று ஜெயிப்பான்
தரணியில் என்றும் நிலைப்பான்
இவனைப் போல ஒருவன் இனிமேல் யார் வருவார்

தமிழன் வீர தமிழன்
தலைமை தாங்கும் ஒருவன்
துயரம் நேர்ந்த இடத்தில்
தோழன் தோள் கொடுப்பான்
அனலை போல இருப்பான்
அடிமை விலங்கை உடைப்பான்
தன் நிழலை கூட மிதித்தால்
நெற்றி கண் திறப்பான்

Sura - Thamizhan Veera Thamizhan

Followers