Pages

Search This Blog

Wednesday, October 16, 2013

உன்னாலே உன்னாலே - Hello Miss இம்சையே

Hello Miss இம்சையே ஆனந்தத் தொல்லையே
அக்கரைப் பச்சையே பெண்ணே
விழியென்ன பாசியா விழுவோமே ஜாலியா
ஏமாறும் ராசியா ஆணே

அங்கிட்டுக் கொஞ்சம் இங்கிட்டுக் கொஞ்சம்
பார்த்தது எல்லாம் பொய்யா
கற்கண்டுப் பேச்சும் பூச்செண்டு வீச்சும்
நம்பிவிடாதே பையா
அம்மான் மகளே அம்மான் மகளே
அன்பாய் அழகாய் வீசும் புயலே
அம்மான் மகளே அம்மான் மகளே
என்னை அசத்தும் ஆழ்வார் குழலே

அன்புக்கு நீங்கள்தான் அஸ்திவாரம்
வம்புக்கும் நீங்கள்தான் அடிவாரம்
நட்பென்று சுற்றுவீர் முதல்வாரம்
சட்டென்று பார்வைகள் இடம் மாறும்
அழகான அலர்ஜி நீங்கள்
ஆனாலும் Energy நீங்கள்
Time என்ன கேட்டால் வழியுற மனமே
ஒருமுறை பார்த்தால் அலையுற தினமே
(Hello Miss)

கண்களால் முதலில் புன்னகைப்போம்
பின்புதான் கண்களில் மழை வடிப்போம்
உங்களை நம்பித்தான் கையை பிடிப்போம்
அய்யய்யோ தப்பென்று கண்கள் துடைப்போம்
உதட்டோடு உதட்டுச்சாயம்
ஆண்நெஞ்சில் ஆறாக்காயம்
கொஞ்சலும் ஏனோ கெஞ்சலும் ஏனோ
நீயோ நானோ மிஞ்சலும் நோ நோ
(Hello Miss)

Unnale Unnale - Hello Miss Imsaiyae

உன்னாலே உன்னாலே - இளமை உல்லாசம்

இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ
இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடிப்போச்சோ

பழைய வார்த்தை இல்லாமல் திணறினோம்
புதிய பாடல் பாடத்தான் விரும்பினோம்
அழகுப்பூக்கள் முகம்பார்த்து மயங்கினோம்
இனி சாரல்தான் பூத்தூறல்தான் அத்துமீறல்தான்

ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே
ஓ வான்பறவைகள் பறவைகள் காதல்வானில் கலந்ததே

ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே
ஓ வான்பறவைகள் பறவைகள் காதல்வானில் கலந்ததே

Unnale Unnale - Ilamai Ulasam

உன்னாலே உன்னாலே - வைகாசி நிலவே

வைகாசி நிலவே வைகாசி நிலவே
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன

வெட்கத்தை உடைத்தாய்
தீக்குள்ளே அடைத்தாய்
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடித் தத்தளிக்கும் நேரம்

விழியில் இரண்டு விலங்கு இருக்கு
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும்வரை
ஓ என் செய்வாய் நாளும் எனை
(வைகாசி நிலவே)

தூவானம் என தூறல்கள் விழ
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பியதே
கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு
காதல் கைகூடட்டும்
இதோ எனக்காக விரிந்தது இதழ்
எடுக்கவா தேனே
கனி எதற்காக கனிந்தது
அணில் கடித்திடத்தானே
ஹோ காலம் நேரம் பார்த்துக்கொண்டா
காற்றும் பூவும் காதல் செய்யும்
(வைகாசி நிலவே)

நூலாடையென மேலாடையென
பாலாடை மேனிமீது படரட்டுமா
நானென்ன சொல்ல நீ என்னை மெல்ல
தீண்டித் தீவைக்கிறாய்
அனல் கொதித்தாலும் அணைத்திடும்
புனல் அருகினில் உண்டு
அணை நெருப்பாக இருக்கையில்
எனை தவிப்பதுகண்டு
ஹோ மோகத்தீயும்
தேகத்தீயும் தீர்த்தம் வார்த்துத் தீராதம்மா
(வைகாசி நிலவே)
(வெட்கத்தை உடைத்தாய்)

Unnale Unnale - Vaigasi Nilavae

உன்னாலே உன்னாலே - ஜூன் போனால்

ஜூன் போனால் ஜூலைக் காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூப்பூத்தால் தேன் வருமே
பெண்பார்த்தால் தீ வருமே
என்னாச்சு தோணலியே
(check it up,check it up)
ஏதாச்சு தெரியலியே
நட்பாச்சு லவ்வில்லையே
லவ்வாச்சு நட்பில்லையே

நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழாமொத்தக்கூத்துக்கள் யாருக்காக
மொத்தபூமியும் கூத்துக்காகத்தான் அன்பே
(நேற்று என்பதும்)
(ஜூன் போனால்)

அறைக்குள்ளே மழைவருமா வெளியே வா குதூகலமா
இந்த பூமிப்பந்துஎங்கள் கூடைப்பந்து
அந்த வானம் வந்துகூரை செய்ததின்று
கரையிருக்கும் நிலவினை சலவை செய்
சிறையிருக்கும் மனங்களை பறவை செய்
எந்த மலர்களும் கண்ணீர் சிந்திக் கண்டதில்லையே
(ஜூன் போனால்)

இருப்போமா வெளிப்படையாய் சிரிப்போமா மலர்க்குடையாய்
சிற்பி விரல்களோ சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே
ரொம்பக்காதலை இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே ராமனில்லை
(ஜூன் போனால்)

Unnale Unnale - June Poonaal

உன்னாலே உன்னாலே - முதல்நாள்

முதல்நாள் இன்று எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனலேற்றலாம்

என் உள்ளம் பாடுகின்றது
யார் சொல்லிக் கற்றுக்கொண்டது
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா
நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா
ஓஹோ Jaane Jaan
(முதல்நாள் இன்று)

திசைதோறும் கூறுகின்ற உண்மை
குளிர்போலே காதல் மிக மென்மை
தீண்டுகையில் தித்திக்காதோ சொல் உள்ளம்
முழுதாக மூழ்கியதும் இல்லை
மூழ்காமல் மிதந்ததும் இல்லை
காதல்கடல் விழுந்தவர் காணும் நிலை
ஓ ஓ ஓ வெகுதூரம் வந்தேன்
காதல் கிருமிகள் நெருங்காமல்
முதல்நாள் இன்று எதுவோ ஒன்று
லேசாக எனை மாற்றலாம்
அங்கங்கு அனலேற்றலாம்

இளம்நெஞ்சில் காதல்விதை தூவு
இல்லையேல் நீ தன்னந்தனித் தீவு
வாழ்க்கை ஒரு சுமையாகாதோ சொல்லு ஹோ
உதட்டாலே காதலெனும் சொல்லை
உரைத்தாலே கூட வரும் தொல்லை
வாழும்மட்டும் விழிகளின் தூக்கம் கெடும்
சுகமேது வாழ்வில் காதல் வலியை சுமக்காமல்
(முதல்நாள் இன்று)

உப்புக்கல் வைரம் என்றுதான்
காட்டிடும் காதல் ஒன்றுதான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம்தான் மிச்சம் மிச்சம்
ஓஹோ கோரியே ஓசனா சோனா
ஓசனா சோனா ஓசனா சோனா ஓசனா சோனா

Unnale Unnale - Mudhal Naal

உன்னாலே உன்னாலே - உன்னாலே உன்னாலே

முதல்முதலாக முதல்முதலாக
பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே
தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன்வசமாக வா வா வா அன்பே

உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய் தாழ நின்றேனே

ஒரு சொட்டுக்கடலும் நீ ஒரு பொட்டுவானம் நீ
ஒரு புள்ளிப்புயலும் நீ பிரமித்தேன்
ஹோ ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்
(முதல்முதலாக)
(முதல்முதலாக)

ஒரு பார்வையின் நீளத்தை ஒரு வார்த்தையின் ஆழத்தை
தாங்காமல் வீழ்ந்தேனே தூங்காமல் வாழ்ந்தேனே
நதிமீது சருகைப்போல் உன்பாதை வருகின்றேன்
கடைத்தேற்றிவிடுவாயோ கதிமோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய் நான் மாறிப்போனேனே
சுத்தமாய் சுத்தமாய் தூள்தூளாய் ஆனேனே
(முதல்முதலாக)

நீ என்பது மழையாக நான் என்பது வெயிலாக
மழையோடு வெயில்சேரும் அந்த வானிலை சுகமாகும்
சரியென்று தெரியாமல் தவறென்று புரியாமல்
எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான்
என்வசம் என்வசம் இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே என்காதல் கார்மேகம்
(உன்னாலே உன்னாலே)

Unnale Unnale - Unnale Unnale

பச்சைக்கிளி முத்துச்சரம் - காதல் கொஞ்சம்

காதல் கொஞ்சம் காற்றுக் கொஞ்சம்
சேர்த்துக்கொண்டு செல்லும் நேரம்
தூரம் எல்லாம் தூரம் இல்லை
தூவானமாய் தூவும் மழை

அலுங்காமல் உனை அள்ளி
தொடுவானம்வரை செல்வேன்
விடிந்தாலும் விடியாத பொன்காலையைக்
காணக் காத்திருப்பேன்
(காதல் கொஞ்சம்)

எதிர்காலம் வந்து என்னை முட்டுமோ
தன் கையை நீட்டி நீட்டி என்னை கட்டிக்கொள்ளுமோ
கொஞ்சம் மிச்சமுள்ள அச்சம் தள்ளுமோ
என் துணிச்சலின் விரல்தொட இனி கிள்ளுமோ
அறியாத புதுவாசம் அகமெங்கும் இனி வீசும்
அதில்தானே கரைந்தோடும் நம் வாழ்வின் வனவாசம்
(காதல் கொஞ்சம்)

கையில் வந்த முத்துச்சரம் சிந்தாமல்
என் உள்ளங்கையின் வெப்பத்திலே ஒட்டிக்கொள்ளுமே
எழில்கொஞ்சும் பச்சைக்கிளி வந்தாலும்
என் வேடந்தாங்கல் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளுமே
தேய்கின்ற நிலவோடு தேயாத கனவோடு
தோள் சேர்த்து நடப்பேனே என் தூரம் கடப்பேனே
(காதல் கொஞ்சம்)

Pachaikili Muthucharam - Kaadhal Konjam

Followers