Pages

Search This Blog

Wednesday, October 16, 2013

உன்னாலே உன்னாலே - வைகாசி நிலவே

வைகாசி நிலவே வைகாசி நிலவே
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன

வெட்கத்தை உடைத்தாய்
தீக்குள்ளே அடைத்தாய்
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடித் தத்தளிக்கும் நேரம்

விழியில் இரண்டு விலங்கு இருக்கு
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும்வரை
ஓ என் செய்வாய் நாளும் எனை
(வைகாசி நிலவே)

தூவானம் என தூறல்கள் விழ
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பியதே
கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு
காதல் கைகூடட்டும்
இதோ எனக்காக விரிந்தது இதழ்
எடுக்கவா தேனே
கனி எதற்காக கனிந்தது
அணில் கடித்திடத்தானே
ஹோ காலம் நேரம் பார்த்துக்கொண்டா
காற்றும் பூவும் காதல் செய்யும்
(வைகாசி நிலவே)

நூலாடையென மேலாடையென
பாலாடை மேனிமீது படரட்டுமா
நானென்ன சொல்ல நீ என்னை மெல்ல
தீண்டித் தீவைக்கிறாய்
அனல் கொதித்தாலும் அணைத்திடும்
புனல் அருகினில் உண்டு
அணை நெருப்பாக இருக்கையில்
எனை தவிப்பதுகண்டு
ஹோ மோகத்தீயும்
தேகத்தீயும் தீர்த்தம் வார்த்துத் தீராதம்மா
(வைகாசி நிலவே)
(வெட்கத்தை உடைத்தாய்)

Unnale Unnale - Vaigasi Nilavae

Followers