Pages

Search This Blog

Wednesday, October 16, 2013

உன்னாலே உன்னாலே - ஜூன் போனால்

ஜூன் போனால் ஜூலைக் காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூப்பூத்தால் தேன் வருமே
பெண்பார்த்தால் தீ வருமே
என்னாச்சு தோணலியே
(check it up,check it up)
ஏதாச்சு தெரியலியே
நட்பாச்சு லவ்வில்லையே
லவ்வாச்சு நட்பில்லையே

நேற்று என்பதும் கையில் இல்லை
நாளை என்பதும் பையில் இல்லை
இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
தோழாமொத்தக்கூத்துக்கள் யாருக்காக
மொத்தபூமியும் கூத்துக்காகத்தான் அன்பே
(நேற்று என்பதும்)
(ஜூன் போனால்)

அறைக்குள்ளே மழைவருமா வெளியே வா குதூகலமா
இந்த பூமிப்பந்துஎங்கள் கூடைப்பந்து
அந்த வானம் வந்துகூரை செய்ததின்று
கரையிருக்கும் நிலவினை சலவை செய்
சிறையிருக்கும் மனங்களை பறவை செய்
எந்த மலர்களும் கண்ணீர் சிந்திக் கண்டதில்லையே
(ஜூன் போனால்)

இருப்போமா வெளிப்படையாய் சிரிப்போமா மலர்க்குடையாய்
சிற்பி விரல்களோ சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே
ரொம்பக்காதலை இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே ராமனில்லை
(ஜூன் போனால்)

Unnale Unnale - June Poonaal

Followers