தேன் காற்று வந்தது
தேம்பாவணியாய் கொஞ்சுது
என்னைத் தீண்டத் தானே வந்தது
அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது
தேன் காற்று வந்தது
தேம்பாவணியாய் கொஞ்சுது
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது
அது என்னை என்றோ தீண்டித் தீண்டிக் கொன்றது
இந்த ஒரு நாள் வருமா
இல்லை ஒடிந்தே விழுமா
என பல நாள் பல நாள்
பாதி கனாவில் எழுந்தேன் தகுமா
நான் பனியா பனியா
நீ வெயிலின் துளியா
நான் கரையும் கரையும் வரை நீ
வரை நீ வாகைத் தொடவா
தேன் காற்று வந்தது ....
என் கனக கனக மனம் உலக உலக கணம்
எடையிட முடியாது
இங்கு நான் உனதெனில் ஆகணும் எனில்
முதுகில் கோது
உன் அழகு அழகு முகம் பழக பழக சுகம்
ஒரு துளி திகட்டாது
உன் அன்பெனும் குணம் ஆயிரம் வரம்
நிகரும் ஏது
இருவரும் நடந்தால் தரையினில் இரு கால்
சுமப்பது நீ அல்லவா
தேன் காற்று வந்தது ...
நான் அலையும் அலையும் அலை
கரையை அடைவதில்லை
கடலிலும் இடமில்லை
ஒரு காதலன் நிலை மாபெரும் அலை
முடிவே இல்லை
நான் பொழியும் பொழியும்
மழை பெருகும் பொழுது பிழை
திரும்பிட வழி இல்லை
ஒரு காதலின் நிலை மழை எனும் கலை
விளையாட்டு இல்லை
ஒ நீ விடி விலக்கு முகத்திரை விலக்கு
அதன் பின் நான் கிறுக்கு
ஒ தேன் கற்று வந்தது ...
Gethu - Thaen Kaatru