Pages

Search This Blog

Tuesday, May 29, 2018

இரும்புத்திரை - யார் இவன் தூணிலும் துரும்பிலும்

யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்துக் கொண்டு
பார்ப்பவன்
வான் கடல் 
மண்ணிலும் மனதிலும்
காதை வைத்துக் கொண்டு
கேட்ப்பவன்

காதோரம் 
வாய் வச்சு
காதோட நீ பேசு
சத்தம் போட்டா 
வார்த்தை எல்லாம்
அவன் சிறையிலே 
சேத்திடிச்சு

எங்க போய் ஒழிஞ்சாலும்
ஏதோ ஒன்னு பாக்குது
யாரு கிட்ட பேசினாலும் 
ஏதோ ஒன்னு கேக்குது
அடிமையாக்க ஓங்கிருந்தா
அடிதடினு இறங்கலாம்
ஆசையத்தா காட்டி 
இப்போ
கால வாறி வெட்டுறான்

யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்துக் கொண்டு
பார்ப்பவன்
வான் கடல் 
மண்ணிலும் மனதிலும்
காதை வைத்துக் கொண்டு
கேட்ப்பவன்

வேசத்த இழந்தாச்சி 
வானம் பாத்து கைய கட்டு 
உத்தமன் தான் இல்லையின்னு 
வங்கியில வட்டி கட்டு 

எப்பெப்பயோ செஞ்சதெல்லாம் 
எங்கெங்கேயோ பதியுது 
கோட்ட விட்டு தோத்த பின்தான்
ஆட்டமே புரியுது

எங்கிருந்து அடிக்கிறானு 
தேடி பாக்கப் போயிதான்
உருவமெல்லாம் 
மிருகமாத்தான்
கற்ப்பனைல சிரிக்கிறான்
யார் இவன்
யார் இவன்

கருவிய கையில
பிடிச்சி 
கனவு கூச்சம் 
காசயெல்லாம் பொதச்சி 
ரகசியம் பூட்டி தான் அடச்சி
யாருக்கும் தெரியாம மறச்சி

இலவச விளம்பரம்னு 
அதன் வசம் இழுத்துச்சு 
எல்லை இல்லா ஆசப்படுனு
கூச்சமில்லாம சொல்லிச்சு 
சாக்கு இப்போ இருக்குது 
சாவி இன்னும் பொருந்துது 
போட்டிருக்க பூட்டியிருக்க வச்ச
சரக்கு மட்டும் கரையுது



Irumbu Thirai - Yaar Ivan

இரும்புத்திரை - அழகே பொழிகிறாய் அருகே

அழகே...
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்துப் போனாய்
உன் காற்றில் ஆடினேன்

அழகே...
ஒளி விழும் மெழுகே
இமையில் உன் இறகே
வருடிப் போனாய்
கண்மூடி காதல் 
நான் ஆனேன்
நீ வீசிடும் 
சிறு மூச்சை
உள்வாங்கினேன் 
மலர் ஆனேன்
உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும்
அன்பில் வாழ்கிறேன்

அழகே
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்துப் போனாய்
உன் காற்றில் ஆடினேன்

சிப்பிக்குள் ஒட்டிக்கொள்ளும் 
முத்துப் போல 
திட்டுக்குள் ஒட்டிக்கொள்ளும் 
அன்பு பார்த்தேன்
வெயிலில் வீழ்த்து 
விட்ட துளி போல
உன் கடை விழி 
காணலில் காய்கிறேன் 

திண்ட திண்டாடி வீனாவேன் 
உன்னை கொண்டாடி தேனாவேன் 
கண்ணா கண்ணாடி 
நானாவேன்
நில் என் முன்னாடி 
நீ ஆவேன்

அழகே...
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்துப் போனாய்
உன் காற்றில் ஆடினேன்

அழகே...
ஒளி விழும் மெழுகே
இமையில் உன் இறகே
வருடிப் போனாய்
கண்மூடி காதல் 
நான் ஆனேன்

நீ வீசிடும் 
சிறு மூச்சை
உள்வாங்கினேன் 
மலர் ஆனேன்
உன் மடி வீழ்ந்தேன்
நீ ஏந்தும்
அன்பில் வாழ்கிறேன்

அழகே
அழகே...
பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே
இணைந்துப் போனாய்
உன் காற்றில் ஆடினேன்



Irumbu Thirai - Azhagae Azhagae

ஜூங்கா - ஆகாயம் தாண்டியும் கூட்டிப்போ கூடவே

நீ யாரோ யாரோ
நீ யாரோ!
நின்றாய் யாதுமாய்...
நீளாதோ இந்நாள் தூரமாய்!

போகாத சாலை
பொன் வேளை!
வான் காணா வானிலை!
நேராத ஏதோ நேரலை!

நீ யாரோ யாரோ
நீ யாரோ!
நின்றாய் யாதுமாய்...
நீளாதோ இந்நாள் தூரமாய்!

போகாத சாலை
பொன் வேளை!
வான் காணா வானிலை
நேராத ஏதோ நேரலை!

அண்மையில் நீ பார்த்து நிற்கின்ற நேரம்...
மென்மையாய் கைகோர்த்துப் போகவே...!
மெதுவாய் மேல்நாட்டு மேகம் ஏங்கும்...  
நகரா நாள் வேண்டுமே வேண்டுமே!

ஆகாயம் தாண்டியும் கூட்டிப்போ கூடவே!
ஆளில்லாத் தீவுகள் 
கூட்டிப்போ கூடவே!
காணாத வேறிடம் 
கூட்டிப்போ கூடவே!
வாழாத ஓரிடம் 
கூட்டிப்போ கூடவே!

நிகழாத சூழல்...
நிகர் இல்லாத முதல் காட்சியே!
அழகே நீ தந்தாய் 
என் வாழ்வையே!
ஒளி பாயும் காலம்...
குளிர் ஏதேதோ ஆசை கூட்டுதே!
அடைந்தேனே உன்னை...
அடையாளமே! 

பாதாதி கேசம் தோன்றாத மாற்றமே!
பாராத தேசம் வாராத வாசமே!

ஆகாயம் தாண்டியும்...
கூட்டிப்போ கூடவே!
ஆளில்லாத் தீவுகள்...
கூட்டிப்போ கூடவே!
காணாத வேறிடம்...
கூட்டிப்போ கூடவே!
வாழாத ஓரிடம்... 
கூட்டிப்போ கூடவே!

நீ யாரோ யாரோ
நீ் யாரோ!
நின்றாய் யாதுமாய்...
நீளாதோ இந்நாள் தூரமாய்!
போகாத சாலை!
பொன் வேளை!
வான் காணா வானிலை!
நேராத ஏதோ நேரலை!

உன்னுடன் நான் சேர்ந்து போகின்றபோது...
உண்மையில் தோள்சாயத் தோன்றுதே!
உணர்வில் நீ பூத்து நிற்கின்றபோது...
உணரா ஒரு வாசமே வாசமே!

ஆகாயம் தாண்டியும்...
கூட்டிப்போ கூடவே!
ஆளில்லாத் தீவுகள்...
கூட்டிப்போ கூடவே!
காணாத வேறிடம்...
கூட்டிப்போ கூடவே!
வாழாத ஓரிடம்... 
கூட்டிப்போ கூடவே!



Junga - Aagayam Thaandiyum Kootipoo Koodavae

நிமிர் - எப்போதும் உன் மேல் நியாபகம்

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்
அருகில் வா
என அழைக்கவா
விரல் கோர்க்கனும்
தோள்சாய்க்கனும்

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்

அந்தி வெயில் அடங்கையில்
நானும் நீயும் பேசனும்
சத்தமிடும் வளையலை
சங்கம் வைத்து தீர்க்கனும்
பக்கத்துல வந்து
வெட்கத்தையும் தந்து
சொக்க வைத்தாய் அன்று
சேலைப் போல நானும்
தோளில் சரியனும்

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்
அருகில் வா
என அழைக்கவா
விரல் கோர்க்கனும்
தோள்சாய்க்கனும்

என்ன இது உயிரிலே
ஊஞ்சல் ஒன்று ஆடுதே
எங்கிருந்தோ உடலையும்
காய்ச்சல் வந்து மூடுதே
பத்து விரல் தேயும்
நித்திரையும் போகும்
எத்தனை நாள் இந்த வாதை?
தென்றல் கூட கருணைக்
கொண்டு தழுவுதே

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்
அருகில் வா
என அழைக்கவா
விரல் கோர்க்கனும்
தோள்சாய்க்கனும்

எப்போதும் உன் மேல் நியாபகம்
என் உள்ளத்தை ஈர்த்தப் பூமுகம்
அன்றாடம் உன்னை பார்க்கனும்
என் அன்பெல்லாம் கொட்டி தீர்க்கனும்



Nimir - Epodhum Unmael Nyabagam

நிமிர் - கீதாரக் கிளியே கண்ணனின் கீதாரக் கிளியே

கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவாரத் தமிழே

எது நீ ?
உயிரோ?
உடலோ?
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ?
நினைவோ?
உயிர் உருக்கிடும்

கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவாரத் தமிழே

ஆசைப் பொழுதினிலே
ராதை நீங்காதிருப்பாள்
காலை விடியும் வரை
பேதை தூங்காதிருப்பாள்

மூச்சோடு சேரும்
உன் சுவாசம் அழகு
ஒரு நாளோடு தீரா
உன் மோகம் அழகு
இரு விழியால் பேசாதே
ஒரு விழியால் பேசு
இடிகளை நீ வீசாதே
மழையை வீசு
மனம் நனைந்திட

கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவாரத் தமிழே
கொஞ்சிடும் தேவாரத் தமிழே

எது நீ
உயிரோ?
உடலோ?
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ?
நினைவோ?
உயிர் உருக்கிடும்

கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவாரத் தமிழே

மாயக் கரு விழியால் ஆளை
வெல்வாயடி
பேசும் சிறுமொழியால் காதல்
சொல்வாயடி
ஆதார தீயே
உன் பார்வை அழகு
சிறு சேதாரம் ஆகா
உன் காதல் அழகு

பெருகியதே காதல் தான்
கடல் அலையைப் போல
வழிகிறதே தேடல் தான்
நதியைப் போல
உன்னை நினைக்கையில்

கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவாரத் தமிழே

எது நீ ?
உயிரோ?
உடலோ?
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ?
நினைவோ?

கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவார தமிழே.....



Nimir - Geedhaara Kiliye

நிமிர் - ஏனடி ஏனடி என்னைத் தொட்டு

ஏனடி ஏனடி
என்னைத் தொட்டு ஏன் இன்று
மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல்
நீயாகிறேன்

கனவிலும் காணாத
பெண்ணா இவள்
அய்யோ அய்யோ மனம்
திண்டாடுதே
முதல் முறை பெண்ணாக
நான் காண்கிறேன்
இதோ இதோ மனம்
கொண்டாடுதே

ஏனடி ஏனடி
என்னைத் தொட்டு ஏன் இன்று
மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல்
நீயாகிறேன்

விழியில் பேசிப் போவாய்
சொல்லாமல் நான் பார்க்கையில்
புயலை வீசி போகின்றாய்
விரலோடு காதல் சேர்த்தால்
யாரடியோ நீதான்
உனக்குள்ளே உன்னைத்தான்
நான் தேடினேன்

யாரடியோ
நீ யாரடியோ
எனக்குள்ளே நான் இன்று
போராடினேன்
தேடும் கண்கள் தேடும்
அது உன்னை மட்டும்
பாடும் நெஞ்சம் பாடும்
உன் பேரை மட்டும்
போதும் பெண்ணே போதும்
நீ நெஞ்சை கொன்றாய்
போதும் கண்ணே போதும்
நீ என்னை வென்றாய்

ஏனடி ஏனடி
என்னைத் தொட்டு ஏன் இன்று
மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல்
நீயாகிறேன்

மலரைப் போலே மெலிதாய்
நெஞ்சோடு நீ தோன்றினாய்
நிலவை போலே ஆனாயே
வானம் ஆனேன் ஏனோ

காதலியோ நீதான்
நிஜமெது ?
நிழலெது ?
சொல்வாயடி
தேவதையோ என் தேவதையோ
இனி முதல் எனை என்று
காணபேனோ நான்

தேடும் கண்கள் தேடும்
அது உன்னை மட்டும்
பாடும் நெஞ்சம் பாடும்
உன் பேரை மட்டும்
போதும் பெண்ணே போதும்
நீ நெஞ்சை கொன்றாய்
போதும் கண்ணே போதும்
நீ என்னை வென்றாய்

ஏனடி ஏனடி
என்னைத் தொட்டு ஏன் இன்று
மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல்
நீயாகிறேன்

கனவிலும் காணாத
பெண்ணா இவள்
அய்யோ அய்யோ மனம்
திண்டாடுதே
முதல் முறை பெண்ணாக
நான் காண்கிறேன்
இதோ இதோ மனம்
கொண்டாடுதே

ஏனடி ஏனடி
என்னைத் தொட்டு ஏன் இன்று
மின்னல் அடித்தாய்
நீயடி நீயடி
நினைவிடம் சொல்லாமல்
நீயாகிறேன்



Nimir - Yaenadi Yaenadi

நிமிர் - பூவுக்கு தாப்பா எதுக்கு

பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?
பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?

வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு
வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு

கிளி ஆக ஆசை எனக்கு
இலவச வெயில் வந்து விழுமே
என்னை இதமாய் தொடுமே
பூங்காத்தையே
வனம் வடிக்கட்டி அனுப்பிடுமே
மழை மழை மழை துளி விழுமே
என் மர்மம் தொடுமே

தலை ஈரத்தை
ஒரு துண்டு மேகம் துவட்டிடுமே
ஓடை எங்கள் தாய்ப்பால்
இந்த ஊரும் மண்ணும் தாய்மடி
இங்கே இல்லை நோய் நொடி
இந்த இடம் நல்ல இடம்
இது எந்தன் தலை நகரம்

பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?
பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?

வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு
வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு

சொத்து சுகம் தேடுகிற மனசா
இந்த சொகமே வருமா ?
பணம் காசெல்லாம்
இந்த பனி துளி விலை பெருமா?
வெட்டவெளி பொழப்புக்கு தானே
மனம் ஏங்கி கிடக்கு
ஆகாயமே

இங்க அக்கம் பக்கம் வந்து கிடக்கு
பட்டாம்பூச்சி பிடிக்க
நாம் பதுங்கி மெல்ல போகலாம்
அது பறக்கும் போது தோற்க்கலாம்
மனிதரை மறந்தொரு
பறவையின் வரம் பெறலாம்

பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?
பூவுக்கு தாப்பா எதுக்கு?
ஊருக்கு கதவா இருக்கு ?

வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு
வெளியெல்லாம் தொரந்தே கெடக்கு
கிளி ஆக ஆசை எனக்கு



Nimir - Poovukku Thaapa Ethuku

Followers