கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவாரத் தமிழே
எது நீ ?
உயிரோ?
உடலோ?
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ?
நினைவோ?
உயிர் உருக்கிடும்
கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவாரத் தமிழே
ஆசைப் பொழுதினிலே
ராதை நீங்காதிருப்பாள்
காலை விடியும் வரை
பேதை தூங்காதிருப்பாள்
மூச்சோடு சேரும்
உன் சுவாசம் அழகு
ஒரு நாளோடு தீரா
உன் மோகம் அழகு
இரு விழியால் பேசாதே
ஒரு விழியால் பேசு
இடிகளை நீ வீசாதே
மழையை வீசு
மனம் நனைந்திட
கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவாரத் தமிழே
கொஞ்சிடும் தேவாரத் தமிழே
எது நீ
உயிரோ?
உடலோ?
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ?
நினைவோ?
உயிர் உருக்கிடும்
கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவாரத் தமிழே
மாயக் கரு விழியால் ஆளை
வெல்வாயடி
பேசும் சிறுமொழியால் காதல்
சொல்வாயடி
ஆதார தீயே
உன் பார்வை அழகு
சிறு சேதாரம் ஆகா
உன் காதல் அழகு
பெருகியதே காதல் தான்
கடல் அலையைப் போல
வழிகிறதே தேடல் தான்
நதியைப் போல
உன்னை நினைக்கையில்
கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவார தமிழே
கொஞ்சிடும் தேவாரத் தமிழே
எது நீ ?
உயிரோ?
உடலோ?
எனை வியக்கும் பேரலையே
நீ கனவோ?
நினைவோ?
கீதாரக் கிளியே
கண்ணனின் கீதாரக் கிளியே
தேவார தமிழே.....
Nimir - Geedhaara Kiliye