Pages

Search This Blog

Monday, January 6, 2014

கண்ணெதிரே தோன்றினாள் - சந்தா ஓ சந்தா

சந்தா ஓ சந்தா.. (?தந்தாள் ஓ தந்தாள்)
இவள் சம்மதம் தந்தாள்
தந்தாள் ஓ தந்தாள்
இவள் சம்மதம் தந்தாள்
உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்
மொட்டுக்கள் முத்தக் கண்டு துடித்தாள்
மொட்டுக்கு மூடியிட்டு மறைத்தாள்
இனிமேலும் திரை போட வழியில்லையே
உன் காதல் பிழை இல்லையே
தந்தாள் ஓ தந்தாள்
இவள் சம்மதம் தந்தாள்

ஆணின் இனம் அது கிளை மாதிரி
பெண்ணின் இனம் அது வேர் மாதிரி
கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே
வேர் பேசினால் அதை யார் கேட்பது
இன்று தானே வெட்க்கத் திரை கிழித்தேன்
என்னை நானே உத்தம் செய்து ஜெயித்தேன்
விதை தாண்டி வந்த இலைகள்
விதைக்குள் மீண்டும் போகாது
சுற்றம் மீறி வந்த மாது
?...வேறாரு
உன் கண்விழிக்குள் குடியிருந்தால்
காற்றும் வெயிலும் தாக்காது

தந்தாள் ஓ தந்தாள்
இவள் சம்மதம் தந்தாள்
தந்தாள் ஓ தந்தாள்
இவள் சம்மதம் தந்தாள்

ஒரு பூவிலும் மணம் பார்க்காதவள்
உன் வேர்வையில் புது மணம் பார்க்கிறேன்
குயில் பாடலில் மனம் கசியாதவள்
ரயிலோசையில் இன்று இசை கேட்கிறேன்
எல்லாம் இந்த காதல் செய்த மாயம்
என்னைப் போல வெண்ணிலவும் தேயும்.
பாவை உன்னை கேட்க நினைத்த
பரிசு ஒன்று அறிவாயா
உனக்குள் சென்ற காற்று மீண்டும்
எனக்கு மட்டும் தருவாயா
என் இதயமென்னும் பாத்திரத்தில்
நீயே நிறைந்து வழிவாயா

சன்தா ஓ சன்தா.. (?தந்தாள் ஓ தந்தாள்)
இவள் சம்மதம் தந்தாள்
தந்தாள் ஓ தந்தாள்
இவள் சம்மதம் தந்தாள்
உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்
மொட்டுக்கள் முத்தக் கண்டு துடித்தாள்
மொட்டுக்கு மூடியிட்டு மறைத்தாள்
இனிமேலும் திரை போட வழியில்லையே
உன் காதல் பிழை இல்லையே
தந்தாள் ஓ தந்தாள்
இவள் சம்மதம் தந்தாள்

Kannedhirey Thondrinal - Chanda o Chanda



கண்ணெதிரே தோன்றினாள் - ஈஸ்வரா வானும் மண்ணும்

ஈஸ்வரா வானும் மண்ணும் பிரெண்ட்ஷிப்  பண்ணுது உன்னாலீஸ்வரா (2)
ஈஸ்வரா நீரும் நெருப்பும் பிரெண்ட்ஷிப்  ஆனது உன்னாலீஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா (2)
புதிய மேகங்கள் மழையாய்ப் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும் மலர்களைப் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா சண்டை ஏமி லேதுரா

(ஈஸ்வரா)

கிளியின் சிறகு கடன் கேட்கலாம்...ள்Vஇலே
LNOண் வீட்டில் பெண் கேட்கலாம்...ள்Vஇலே
நீல வானத்தை துவைக்கலாம்...ள்Vஇலே
நிலவை பூமிக்குள் இழுக்கலாம்...ள்Vஇலே
கோட்டை தேவையில்லை ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்
Eண்RL கவிழ்ந்தாலும் அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்
ஜாலிதான் சகோதரா சண்டை ஏமி லேதுரா

(ஈஸ்வரா)

காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்...ள்Vஇலே
காமன் ரதியை EBR ஆக்கலாம்...ள்Vஇலே
பிரியமான பெண்ணை ரசிக்கலாம்...ள்Vஇலே
புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்...ள்Vஇலே
OEற்ண் உலகத்திலே எல்லாமே மாறிப் போகட்டுமே
நட்பின் கற்பு மட்டும் என்னாளும் மாறாதிருக்கட்டுமே
ஜாலிதான் சகோதரா சண்டை ஏமி லேதுரா

ஈஸ்வரா வானும் மண்ணும் பிரெண்ட்ஷிப்  பண்ணுது உன்னாலீஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும்   பிரெண்ட்ஷிப்  ஆனது உன்னாலீஸ்வரா
மானும் புலியும் தேனீர் பருகுது உன்னாலீஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா (2)
புதிய மேகங்கள் மழையாய்ப் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும் மலர்களைப் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா சண்டை ஏமி லேதுரா
ஏ...எ...ஏ...ஏ...எ...

Kannedhirey Thondrinal - Eashwara Vanum Mannum

கண்ணெதிரே தோன்றினாள் - சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
பால்சுற்றும் நட்சதிரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காதில் விழுவென் நீ சொல்லு

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

நிலா நிலா காதல் நிலா
அவள் வாழ்வது உள்ளூரிலா
உலா உலா வா வெண்ணிலா
கண்வாழ்வது கண்ணீரிலா
பாதை கொண்ட மண்ணே அவளின் பாத சுவடு பார்த்தாயா
தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பார்த்தாயா
ஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையை பார்த்தாயா
ஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன்காலில் விழுவேன் நீ சொல்லு

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

எங்கே எங்கே விண்மீன் எங்கே
பகல் வானிலே நான் தேடினேன்
அங்கே இங்கே காணோம் என்று
அடி வானிலே நானேறினேன்
கூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பார்த்தாயா
உள்ளாடும் காற்றே அவளின் உள்ளும் சென்று பார்த்தாயா
தூறல் போடும் அவளின் முகிலே உயிரை தொட்டுப் போனவள் பார்த்தாயா
பஞ்சு போல நெஞ்சை தீயில் விட்டுப் போனவள் பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
பால்சுற்றும் நட்சதிரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காதில் விழுவென் நீ சொல்லு

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே



Kannedhirey Thondrinal - Chinna Chinna Kiliye

கிழக்கு சீமையிலே - கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி

கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா
தங்கம் போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு
கத்தாழங் காட்டுக்குள்ளே காளைகளுங் கதறுதம்மா
வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிபுட்டா பாதி உயிர் போச்சு

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

அண்ணே போய் வரவா அழகே போய்வரவா
மண்ணே போய்வரவா மாமரமே போய்வரவா
அணில்வால் மீசை கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீசை கொண்ட புருஷனோட போய்வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம் தானே
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம் தானே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா



Kizhakku Cheemayile - Kathaazha Kaattu Vazhi

கிழக்கு சீமையிலே - அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி

ஆண் : அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே
பட்டாம்பூச்சி பிடித்தவள்
தாவணிக்கு வந்ததெப்போ
மூன்றாம் பிறையே நீ முழு நிலவா ஆனதெப்போ
மெளனத்தில் நீ இருந்தால்
யாரை தான் கேட்பதிப்போ.....

ஆண் : ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
ஓடைக்கர ஒழவு காத்துல ஒருத்தி யாரு
இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது

பெண் : ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

ஆண்குழு : ஏ..ஏ..ஏ..ஏ..ஏலலோ..ஏலலோ..
ஏலலோ..ஏல..லோ..ஏலே..ஏ..

பெண் : மாமனே உன்னை காண்காம
வட்டியில் சோறும் உண்காம
பாவி நான் பருத்தி நாரா போனேனே
காகம் தான் கத்தி போனாலோ
கதவு தான் சத்தம் போட்டாலோ
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடைக்கரையோரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே
ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்னை விட்டு போகாதே
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே

ஆண் : ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

ஆண் : தாவணி பொண்ணே சுகந்தானா
தங்கமே தளும்பும் சுகந்தானா
பாறையில் சின்ன பாதம் சுகந்தானா
தொட்ட பூ எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா
அயித்தயும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகந்தானா
அயித்தயும் மாமனும் சுகந்தானா
ஆத்துல மீனும் சுகந்தானா
அன்னமே உன்னையும் என்னையும்
தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா
மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு

பெண் : ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

ஆண் : ஓடக்கர ஒழவு காத்துல ஒருத்தி யாரு
இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா

பெண் : உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது

ஆண் : ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே



Kizhakku Cheemayile - Aathangara Marame

கிழக்கு சீமையிலே - மானுத்து மந்தையில மாங்குட்டி

ஆண் : மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

பெண்குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

ஆண் : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆ&பெ குழு : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆண் : மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

பெண்குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

அனைவர் : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

***

ஆண் : நாட்டுக்கோழி அடிச்சு நாக்குசொட்ட சமைச்சு
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா

பெண்குழு : மேலு காலு வலிச்சா வெள்ளப்பூண்டு உரிச்சி
வெல்லங்கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா

ஆண் : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க

பெண்குழு : பிள்ளக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு

ஆண் : மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு
மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

பெண்குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

ஆண் : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆ&பெ குழு : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

***

ஆண் : ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு

அனைவர் : காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்

ஆண் : வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்

பெண்குழு : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க

ஆண் : ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இறுக்கச்சொல்லு
மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே

ஆண்-1 : அய்யோ

ஆண் : பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

பெண்குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி அவன்
தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

ஆண் : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆண்-2 : ஹோய்

அனைவர் : சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆண் : மானுத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே

ஆண்-3 : போடு

ஆண் : பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே



Kizhakku Cheemayile - Maanooththu Manthaiyile

கிழக்கு சீமையிலே - தென்கிழக்குச் சீமையில செங்காட்டு

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

ஆண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம் இருக்கு

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

***

பெண் : தாய் வீட்டுப் பேரும் தாய் மாமன் சீரும்
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே

ஆண் : சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே

பெண் : குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே

ஆண் : கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வல்லையே

பெண் : உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

பெண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம் இருக்கு

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு

***

ஆண் : செங்காட்டு மண்ணும் நம் வீட்டுப் பொண்ணும்
கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே

பெண் : தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா
தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே

ஆண் : பந்தத்தை மீறிப் போக சக்தி இல்லையே

பெண் : பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே

ஆண் : வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறையே

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

ஆண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்
ஈசானி மூலையில மேகம் இருக்கு

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு



Kizhakku Cheemayile - Then Kizhakku Cheemayile

Followers