Pages

Search This Blog

Monday, January 6, 2014

கண்ணெதிரே தோன்றினாள் - சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
பால்சுற்றும் நட்சதிரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காதில் விழுவென் நீ சொல்லு

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

நிலா நிலா காதல் நிலா
அவள் வாழ்வது உள்ளூரிலா
உலா உலா வா வெண்ணிலா
கண்வாழ்வது கண்ணீரிலா
பாதை கொண்ட மண்ணே அவளின் பாத சுவடு பார்த்தாயா
தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பார்த்தாயா
ஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையை பார்த்தாயா
ஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன்காலில் விழுவேன் நீ சொல்லு

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே

எங்கே எங்கே விண்மீன் எங்கே
பகல் வானிலே நான் தேடினேன்
அங்கே இங்கே காணோம் என்று
அடி வானிலே நானேறினேன்
கூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பார்த்தாயா
உள்ளாடும் காற்றே அவளின் உள்ளும் சென்று பார்த்தாயா
தூறல் போடும் அவளின் முகிலே உயிரை தொட்டுப் போனவள் பார்த்தாயா
பஞ்சு போல நெஞ்சை தீயில் விட்டுப் போனவள் பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காலில் விழுவேன் நீ சொல்லு

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே
பால்சுற்றும் நட்சதிரம் பார்த்தாயா
தேன் மொட்டும் முல்லை மொட்டும் பார்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை பார்த்தாயா
கண்கொட்டும் பறவை ஒன்றை பார்த்தாயா
கண்ணால் கண்டால் நீ சொல்லு
உன் காதில் விழுவென் நீ சொல்லு

சின்ன சின்ன கிளியே பஞ்சவர்ண கிளியே



Kannedhirey Thondrinal - Chinna Chinna Kiliye

Followers