Pages

Search This Blog

Monday, November 4, 2013

ஆரம்பம் - ஸ்டைலிஷ் தமிழச்சி

ஸ்டைலிஷ் தமிழச்சி
இல்ல நெஞ்சுக்குள்ளே இங்கிலிஷ் தமிழ் கட்சி
என் தேகத்திலே ஸ்பேனிஷ் நிறம் மச்சி
தேன் திக்கின்ற வெயினிஷ் இதழ் மச்சி

முரட்டு தமிழச்சி
உன்னை சுத்தி ஒரு இருட்டு திரை தைச்சி
சில முத்தங்களில் நெருப்பில் சுட வச்சி
நான் தந்ததுமே அதிரும் உன் உச்சி

யார் எனக்கும் மேலே இல்லை
நான் அடையா முடிய எல்லை
இந்த உலகத்தின் உயரத்தில்
கவர்ச்சி காடு நான்

அழகிய தமிழச்சி
ஒரு ஆணை போல அனுதினம் மேரேஜ்ச்
எது வேனுன்னாலும் எல்லைகள் மீறுச்சு
யார் சொன்ன போதும் ஆட்டங்கள் ஆடுச்சு

அலையாய் விழுந்துச்சு
உன்னை சொட்டுவிடும் தீயா இதழ்ச்சு
உன்னை காயம் செய்யும் காலை குணம் வச்சு
என்னை தீண்டிவிட்டாய் விசமாய் இருந்துச்சு

நான் மென்மை இல்லா மடல்
இளம் பெண்மைக்கான உடல்
திமிர் மட்டும் தான் என் கண்கள்
உந்தன் தீண்டல் தான்…

Arrambam - Stylish Tamilachi

பட்டத்து யானை - என்ன ஒரு என்ன ஒரு

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா..

ஆண் ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...

இசை பல்லவி

ஆண் என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
மனச தாக்குற மின்னலும் அவ தான்
மழையில் தெரியும் ஜன்னலும் அவ தான்
கனவில் பூக்குற தாமர அவ தான்
கதையில் கேக்குற தேவத அவ தான்

என்ன ஊரு என்ன பேரு கேக்கலடா
எங்கப் போறா எங்கப் போறா பாக்கலடா
முன்னாடி அவளும் பின்னாடி நானும்
ஒரு முற திரும்பி பாத்தா என்ன
துண்டான மனச ஒண்ணாக்கத் தானே
மறுபடி அவள கேட்டேனே

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா ஆ...

( இசை )

பெண் ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...

சரணம் - 1

ஆண் ராகு காலத்தில நல்ல நேரம் வருமா
ஒன்பது பத்தரையில் சிரிச்சா
பிள்ளையாரு கோயிலுக்கு
தேங்கா ஒண்ணு ஒடைக்க
மனசு வேண்டிச்சு புதுசா
இஞ்சு இஞ்சா இடைவெளி கொறைஞ்சு
இதயம் பறக்குது லேசா
இங்கிலாந்து ராணி போல தங்கத்துல எழச்சு
வாழ வப்பேன் மாசா
அவளை பார்க்கிற யாருமே அவளை
மறந்தும் கூட மறப்பது சிரமம்
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
பீப்ப் ஏறுது சீக்கிறம் சொல்லடி

என்ன ஒரு என்ன ஒரு அழகியடா
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா
வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ...
வா என் உயிரே வா என் அழகே வா
என் மயிலே ஓ... வா ( இசை )

பெண் உவ்வா உவ்வா தனனனனா
உவ்வா உவ்வா தனனனனா

சரணம் - 2

ஆண் ஹோ தில்லை நகரா தேரடி தெருவா
அங்கிருக்கா உன் வீடு
சாரதாஸு கூரப் பட்டுச் சேல
வாங்கித் தருவேன்
வெக்கப் பட்டு எனை தேடு
ஹே தன்னந்தனியா வாழ்வது பாவம்
வந்து மாலைய போடு
தண்டவாளம் போல
நம்ம ரெண்டு பேருக்கிடையில்
நடுவில் எதுக்குடி கோடு
மனசில் கட்டுறேன் மாளிக வீடு
வாசல் கோலம் வந்து நீ போடு
பீப்பி ஊதணும் நேரத்த சொல்லடி
பீப்ப் ஏறுது சீக்கிறம் சொல்லடி

என்ன ஒரு ( இசை ) அழகியடா
கண்ண விட்டு ( இசை ) விலகலடா
கொஞ்சம் கூட கொஞ்சம் கூட பழகலடா
எங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தையடா
வா என் அழகே வா என் உயிரே வா
என் மயிலே ஓ...
வா என் உயிரே வா என் அழகே வா
என் மயிலே ஓ... வா

பெண் ஹஹஹஹ...
கிறுக்குபய புள்ள.

Pattathu Yaanai - Enna Oru Enna Oru

சின்ன கௌண்டர் - முத்து மணி மாலை

முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்தில சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்தில நீ தானே
உத்தமி உன் பெயர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே

முத்து மணி மாலை ...

பழசு தான் மௌனம் ஆகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவ மூடுமா
மௌசு தான் கொறையுமா
நேசப்பட்டு வந்த பாச கொடிக்கு
காசிப் பட்டு சொந்தம் ஆகாதே
வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவுல வீசும் காத்தில
பாசம் தேடி மாமா வா

முத்து மணி மாலை ....

காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே
நெத்தி சுட்டி ஆடும் உச்சன் தலையில்
பொட்டு வச்சது யாரு நான் தானே
அத்தி மரப் பூவும் அச்சப்படுமா
பக்கத் துணை யாரு நீ தானே
ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற

முத்து மணி மாலை .....

Chinna gounder - Muthu mani maalai

பெரிய இடத்துப் பெண் - அன்று வந்ததும் இதே

அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆ.....ஆ......
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா

(அன்று)

அம்பிகாபதி கண்ட நிலா
அமராவதியைத் தின்ற நிலா
கம்பன் பாடிய வெள்ளி நிலா
கவியில் ஆடிய பிள்ளை நிலா
ஆ... ஆ...
கவியில் ஆடிய பிள்ளை நிலா

(அன்று)

காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் வென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாலைவனத்தின் வண்ண நிலா
ஆ... ஆ...
பாலைவனத்தின் வண்ண நிலா

நாடுதோறும் வந்த நிலா
நாகரீகம் பார்த்த நிலா
பார்த்து பார்த்து சலித்ததிலா
பாதி தேய்ந்தது வெள்ளி நிலா
ஆ... ஆ...
பாதி தேய்ந்தது வெள்ளி நிலா

(அன்று)

Periya idathu pen - Andru vandhadhum idhe nilaa

பார்த்தால் பசி தீரும் - கொடி அசைந்ததும்

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
(கொடி..)

பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?

கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
(கொடி..)

வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதான் நாணம் வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
நாணம் வந்த்தால் பெண்மை ஆனதா?

ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?
(கொடி..)

Parthal pasi theerum - Kodi asainthathum

இங்கேயும் ஒரு கங்கை - சோலைப் புஷ்பங்களே

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

கண்ணா ஜோடிக் குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா ?
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா ?
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி
நெஞ்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

என் தேவியைக் கண்டாலென்ன என் வேதனை
சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

உன்னை மீறி ஒரு மாலை வருமா
சொந்தம் மாறி விடுமா?
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா
தன்னை விற்று விடுமா?
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம்
சாமி..
காவலுக்கு நாதி இல்லையா
எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

Ingeyum oru gangai - solai pushpangale

புதிய பறவை - சிட்டுக் குருவி முத்தம்

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே
கலந்திடக் கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே
வண்டு மூழ்கிடக் கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து
மோதிடக் கண்டேனே

(சிட்டு)

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே

(சிட்டு)

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா

(சிட்டு)

Pudhiya paravai - chittu kuruvi

Followers