முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்தில சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்தில நீ தானே
உத்தமி உன் பெயர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே
முத்து மணி மாலை ...
பழசு தான் மௌனம் ஆகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவ மூடுமா
மௌசு தான் கொறையுமா
நேசப்பட்டு வந்த பாச கொடிக்கு
காசிப் பட்டு சொந்தம் ஆகாதே
வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவுல வீசும் காத்தில
பாசம் தேடி மாமா வா
முத்து மணி மாலை ....
காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே
நெத்தி சுட்டி ஆடும் உச்சன் தலையில்
பொட்டு வச்சது யாரு நான் தானே
அத்தி மரப் பூவும் அச்சப்படுமா
பக்கத் துணை யாரு நீ தானே
ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற
முத்து மணி மாலை .....
Chinna gounder - Muthu mani maalai