Pages

Search This Blog

Friday, January 24, 2014

தாஜ்மஹால் - அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே

அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
தனனனனா தனதனனா தனனனனா தனதனனா
அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
தனனனனா தனதனனா தனனனனா தனதனனா

கொமரிப்புள்ள கொமரிப்புள்ள குளிக்க வாராங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க
கொமரிப்புள்ள கொமரிப்புள்ள குளிக்க வாராங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க
பருவப்புள்ள பருவப்புள்ள குளிக்கப் போராங்க
அட ஆத்தங்கரப் பறவைகளே அங்கிட்டுப் போயிருங்க

அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே

மஞ்சப் புடிச்சிருக்கா...எங்கள கேட்டுக்க...
மருதாணி புடிச்சிருக்கா...எங்கள கேட்டுக்க...
ம்ம்ம்...நாளைக்கு...
வெள்ள சுண்ணாம்பு வெச்சுக்கிட்டு வெத்தலையப் போட்டுக்கிட்டு
அடினாக்கு செவந்திருக்கான்னு அவனக் கேட்டுக்க
அவனா...இல்ல இல்ல...அவரக் கேட்டுக்க

அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
அடி மஞ்சக்கெழங்கே அடி மஞ்சக்கெழங்கே
மஞ்சத் தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே
தேச்சிக் குளிக்கும் தங்கக் கெழங்கே

Taj Mahal - Adi Manjakelange

தாஜ்மஹால் - ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சு

மாயே...மாயே யோ...(4)
மாயோ மாயோ மாயோ யோயோ (4)

ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சு (2)
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

(ஈச்சி)

மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மாயோ ஓஓஓ...மாயோ ஓஓஓ...

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே
சிறுதண்ணித் தோளோடும் மாறோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே
ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே
பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
மச்சக் கன்னி ஒன்னத் தாங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே
பாட்டுச் சத்தம் கேக்கலையே அந்திப் பகலேதும் பாக்கலையே
மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன்
நெஞ்சுக் குழிகுள்ள வேத்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

(ஈச்சி)
(மாயோ)

தொழுவோடு சேராத பொலிகாள கூட கொடையப் பாத்து மெரளும்
கொடகண்டு மெரளாத கோடாலிக் காள தாவணி பாத்து மெரளும்
ம்ம்ம்...
பாசிமணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே
ஆஆஆ...
தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி
ஆஆஆ...
கையில் கைய வெச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

(ஈச்சி)

மாயே...மாயே யோ...(4)

Taj Mahal - Eechi Elemichhi

தாஜ்மஹால் - குளிருது குளிருது இரு உயிர்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளை மூடிக் கொண்டு தடவு
நெஞ்சிக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு
இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்
தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்
பேரின்ப பூசைகளே உன் பெண்மைக்கு பரிஹாரம்
மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்
நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்
முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா
மழைத்துளி மழைத்துளி தொல்லையா
அட ஆடை மழை காக்க எண்ணம் இல்லையா
சுற்றி எல்லாம் எரிகின்ற போதும் நாம் இன்பம் கொள்வது தீது
அடி பூகம்ப வேளையிலும் இரு வான் கோழி கலவிக்கொள்ளும்
தேகத்தை அணைத்து விடு சுடும் தீகூட அணைந்துவிடும்
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
சுற்றி நின்றாடும் தீவண்ணம் அணிவது திண்ணம்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடல் அலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை

Taj Mahal - Kulirudhu Kulirudhu

தாஜ்மஹால் - கரிசல் தரிசல் நிலவு கொதிக்க

கரிசல் தரிசல் நிலவு கொதிக்க
உசுர கடந்து மனசும் துடிக்க
வரவா ஊரும் அடங்க
நாலு தெருவும் தொறந்து கெடக்க
நாயும் நரியும் முழிச்சு கெடக்க
முடியுமா என்ன நெருங்க
ஊரு மலையெல்லாம் கோலி விளையாடி
வருவேன் கோழி ஒறங்க
கண்ணுபடு முன்னு காத்து ரூபம் கொண்டு
வருவேன் நிலவு மயங்க

கரிசல் தரிசல் நிலவு கொதிக்க
வரவா ஊரும் அடங்க
ஏ மச்சக்கண்ணியே ஏ மச்சக்கண்ணியே
ஏ மச்சக்கண்ணியே ஏ மச்சக்கண்ணியே

என் அடி வயித்தில் ரா புளி கரைக்க வந்தே புட்டான்
என்னக் கொன்னே புட்டான்
என் அடி வயித்தில் ரா புளி கரைக்க வந்தே புட்டான்
என்ன கொன்னே புட்டான்
ஊரடங்கிடுச்சு போர் தொடங்கிடுச்சு
எல்லாம் வசம் இனி நீயே வாசம்

நான் வரவா கண்ணே நான் வரவா
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா
ஓட்டுக் கூரையில என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்காதோ
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ (2)

மேல் காட்டு மூளையில மேகம் இல்ல மின்னலில்ல
பூமி நனைஞ்சிருச்சு (2)

பழம் நழுவி பாலில் விழுந்தாச்சு
அது நழுவி வாயில் விழுந்தாச்சு

அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு (2)

சுண்ணாம்பு கேக்கப்போயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சிருச்சு (2)

அட வானோடும் .... (2)

Taj Mahal - Karisal Tharasil

சேது - மாலை என் வேதனை கூட்டுதடி

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்லவே கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி எந்தன் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி எந்தன் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே


காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம்
வேண்டாத பேச்சுக்கள் ஏன் டா ? அம்பி
காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம்
உன் காதல் சஸ்பன்ஸ் என்ன அம்பி
காதல் செஞ்ச பாவம் அந்த ஆதாம் காலத்தில்
எதுக்கு வீணா சோகம் கதைய முடிடா நேரத்தில்
பூங்கிளி கைவரும் நாள் வருமா
பூமியில் சொர்கமும் தோன்றிடுமா

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி எந்தன் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே

காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ
வாசங்கள் பேசாத பதில தம்பி
மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ
கடல் ஆடும் அலை கூட பதில் தான் தம்பி
அவளின் மௌனம் பார்த்து பதை பதைக்கும் என் மனம்
வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்
மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே
என் மனம் அவள் மடி சாய்கிறதே

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி எந்தன் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே

Sethu - Maalai En Vethanai

சேது - எங்கே செல்லும் இந்த பாதை

எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும்
யாரோ உண்மை அறிவார்
நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும்
வழி போக துணையாய் அன்பே வாராயோ

எங்கே செல்லும் ....

ஊரை விட்டு ஓ ஓர் குடிசை
அங்கே யார் சென்று போட்டு வைத்தார்
காதலிலே ஓர் பைத்தியமே
சொர்க்கம் அதுவென்றே கட்டி வைத்தார்
காணும் கனவுகளில் இன்பம் இன்பம்
உண்மை அதற்கு வெகு தூரம் தூரம்
காதலென்றால் ஓ வேதனையா

எங்கே செல்லும்....

மண் கேட்டா அந்த மழை பொழியும்
மேகம் பொழியாமல் போவதுண்டா
கரை கேட்டா அந்த அலைகள் வரும்
அலைகள் தழுவாமல் போவதுண்டா
கண்ணீர் மழை உந்தன் முன்னே முன்னே
காதல் மழையை பொழி கண்ணே கண்ணே
என் உயிரே ஓ என் உயிரே

எங்கே செல்லும்....

Sethu - Enge Sellum Intha

ரசிக்கும் சீமானே - நான் உன்னை பார்க்கும் நேரம்

நான் உன்னை  பார்க்கும்  நேரம் 
நீ  மண்ணை  பார்ப்ப  தேனோ 
உன்  கண்ணை  உற்றுப்  பார்த்தல் 
சரியோ  

நான்  வெட்கம்  சிந்தும்  நேரம் 
நீ  முத்தம்  வைக்கக்  கூடும் 
என்  கண்கள்  மூடி  கொண்டால் 
பிழையோ  

நீ  சின்ன  சின்ன  புன்னகை  சிந்தும் வேலை 
உந்தன்  கன்னக்குழியில்  நான் சிக்கிக்  கொண்டேன் 
உந்தன்  கை விரல்கள்  என்னுடலை  தீண்டும்  நேரம்
இந்த பூமி   பந்தையும்   நான் தாண்டி  சென்றேன் 
ஹே  ஹ  ஏ …  

நான் உன்னை பார்க்கும் நேரம்
நீ மண்ணை பார்ப்ப தேனோ
உன் கண்ணை உற்றுப் பார்த்தால்
சரியோ 

நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்கக் கூடும்
என் கண்கள் மூடி கொண்டால்  பிழையோ 

===  

தூரத்தில்  சிணுங்கும் 
உன் கொலுசொசையை 
அடிக்கடி  கேட்க   தினம் ஆசை
 
தூக்கத்தில் 
என்னை மரத்திருப்பேன் 
உலரிட  பிறந்திடும் 
புது பாஷை  

இதயத்தில்  இருக்கும் 
நான்கு  அறைகளில் 
நிரம்பியதே 
உன் பிம்பம்  

நீ இன்றி நகர்கின்ற 
நொடி  துளி  கிடைத்தால் 
மறுக்கின்றதே 
என்னுள்ளம்  

இமைகளிலே 
மின்னும்  நளினம்
உடல் தன்னை
துளைத்தே 
செய்யும் பயணம் 

தனிமைகளை 
கொழுந்து  விடும்
இதழ்களும் 
இணைந்தே  செய்யும் நடனம் 

இரவுகளோடு 
சிறகுகள்   நீட்டி 
பறக்கின்றதே  

===  

நான் உன்னை பார்க்கும் நேரம்
நீ மண்ணை பார்ப்ப தேனோ
உன் கண்ணை உற்றுப் பார்த்தல்
சரியோ 

நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்க  கூடும்
என் கண்கள் மூடிக்  கொண்டால்
பிழையோ  

===  

உணகென  எழுதிடும் 
காதல்  கடிதங்களில் 
பிழைகளையும்   ரசிக்கின்றாய்  

அணு அணுவாய்
எந்தன்   உயிரில்  புகுந்து 
நீ ரகசியங்கள் 
ருசிக்கின்றாய்  

விரல்களின்  மேல் 
உள்ள
வீணை  நகங்கள்  கொண்டு  
என் மனதை
நீ தெரிந்தாய்  

நமகென  பிறந்திட்ட 
புதியதோர்  உலகை
முதல்  முறை
நீ காட்டுகின்றாய்  

விழிகளின்  மேல்
துள்ளும்  உருவம்
ஜாடைகள்  காட்டிடும் 
செல்ல  மிருகம்  

நினைவினிலே 
உந்தன்  உருவம்
நிஜமென  நினைதேன்னை 
வெட்கம் தழுவும்  

மௌனங்கள்  மீது
சலனங்கள்   வீசி
சைக்கின்றதே 

 === 

 நான் உன்னை பார்க்கும் நேரம்
 நீ மண்ணை பார்ப்ப தேனோ 
உன்  கண்ணை  உற்றுப்  பார்த்தா ல் 
சரியோ 

நான் வெட்கம் சிந்தும் நேரம்
நீ முத்தம் வைக்க கூடும்
என் கண்கள் மூடிக் கொண்டால்
பிழையோ 

=== 

 நீ சின்ன சின்ன புன்னகை சிந்தும் வேளை
உந்தன் கன்னக்குழியில் நான் சிக்கி  கொண்டேன்
உந்தன் கை விரல்கள் என்னுடலை தீண்டும் நேரம்
இந்த பூமி பந்தையும்  நான் தாண்டி சென்றேன்
ஹே ஹ யே…

Rasikkum Seemane - Naan Unnai Parkkum Neram

Followers