மாயே...மாயே யோ...(4)
மாயோ மாயோ மாயோ யோயோ (4)
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சு (2)
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி
(ஈச்சி)
மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மாயோ ஓஓஓ...மாயோ ஓஓஓ...
ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே
சிறுதண்ணித் தோளோடும் மாறோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே
ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே
பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
மச்சக் கன்னி ஒன்னத் தாங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே
பாட்டுச் சத்தம் கேக்கலையே அந்திப் பகலேதும் பாக்கலையே
மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன்
நெஞ்சுக் குழிகுள்ள வேத்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்
(ஈச்சி)
(மாயோ)
தொழுவோடு சேராத பொலிகாள கூட கொடையப் பாத்து மெரளும்
கொடகண்டு மெரளாத கோடாலிக் காள தாவணி பாத்து மெரளும்
ம்ம்ம்...
பாசிமணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே
ஆஆஆ...
தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி
ஆஆஆ...
கையில் கைய வெச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி
(ஈச்சி)
மாயே...மாயே யோ...(4)
Taj Mahal - Eechi Elemichhi