Pages

Search This Blog

Friday, December 21, 2018

பேய் பசி - நான் அப்பாடக்கர் இன்டர்நேஷனல் பீட்டர்

நோ ரெக்வஸ்ட்
ப்ரம் தி பாய்ஸ்
சப்ஜெக்டட் டு மார்க்கெட்
ரிஸ்க் பட் கேர்ள்ஸ் ஆர்
அல்லோட் ஆல்வேஸ்
போதுமா

நான் அப்பாடக்கர்
இன்டர்நேஷனல் பீட்டர்
ஸ்வாகா நடப்பேன் டா
நான் அப்பாடக்கர்

பொறந்ததே
பந்தா நடந்தா நான்
பிஸ்தா இருந்தாலும்
இழந்தாலும் அப்பப்பா

மைசூர் ராஜா
பேரன் ஜான்சி ராணி
வீரன் லார்ட் லபக்குதாஸ்
என் அத்தை பையன் நான்
அப்பாடக்கர்

மௌன்ட் ரோட்
என் தாத்தா சொத்து
ஆட்னா நான் யூடியூப்
ஹிட்டு மார்னிங் என்
காபி குள்ளே பாரிங்
விஸ்கி ஊத்து

மௌன்ட் ரோட்
என் தாத்தா சொத்து
ஆட்னா நான் யூடியூப்
ஹிட்டு மார்னிங் என்
காபி குள்ளே பாரிங்
விஸ்கி ஊத்து

ஆட்டோகிராப்பு
தாரேன் செல்பி எடுக்க
வாரேன் பட் சாரி என்
பேஸ்புக்
லொலலொலலோ

நான் அப்பாடக்கர்
நான் அப்பாடக்கர்
இன்டர்நேஷனல் பீட்டர்
பீட்டர் பீட்டர் பீட்டர்

நோ ரெக்வஸ்ட்
ப்ரம் தி பாய்ஸ் சப்ஜெக்டட்
டு மார்க்கெட் ரிஸ்க் பட்
கேர்ள்ஸ் ஆர் அல்லோட்
ஆல்வேஸ் போதுமா



Pei Pasi - Naan Appatakkar

பட்சி - யார் இவளோ கலையாத நதியோ

யார் இவளோ
கலையாத நதியோ
கானகம் வழியானதால்
தடை மீறியே போகுமா

பூ விரலோ
புதிரானால் பிழையோ
பூமியே அது போதுமா
விடை தேட வீணாகுமா

போகாத தூரம்
போக போறாளே
ஊர்கோலமாக வேகம்
ஏதும் சாயாதே தேடாத

பாதை தேட மூடாத
பார்வை கூட வானம்
பாடி ஓயாதே

தள்ளி போறா
துள்ளி போறா புள்ளி
மானா தாவி போறா
வண்டி மேல ஏறி
போறா தேடி தாகம்
தேங்கி போறா

கண்ணு கூரா
வெச்சு போறா கன்னி
பூவா பூத்து போறா
மொத்த ஊர பாக்க
தேரா மாறி வீதி
ஓரம் போறா

வஞ்சி போறா
மிஞ்சி போறா கொஞ்சம்
நேரம் மூச்சு வாங்க பந்தம்
பாசம் தூக்கி வீசி மீறி சீறி
போகும் ஆறா

அஞ்ச மாட்டா
கெஞ்ச மாட்டா சொந்த
பாதை போட்டு போறா
பஞ்சு போல பேசினாலே
போதும் பாதம் தீண்டி
போவா

ஓஓ நிலையாகாத
நிழலை கூட படமாய்
பதிவாள் ஓ  ஓஓ
புதுமையான தமிழாய்
ஆவாள் தனிமை ரசிகை

போய் விலகும்
நொடி மேலே மலரும்
கோலமே அதில் ஆவலே
அதை பாடமாய் காணுவாள்

வீண் கவலை
விதி மேலே எறிவாள்
நாளையோ அது நாளை
தான் புது வேதமாய்
காணுவாள்

போகாத தூரம்
போக போறாளே
ஊர்கோலமாக வேகம்
ஏதும் சாயாதே தேடாத
பாதை தேட மூடாத
பார்வை கூட வானம்
பாடி ஓயாதே

தள்ளி போறா
துள்ளி போறா புள்ளி
மானா தாவி போறா
வண்டி மேல ஏறி
போறா தேடி தாகம்
தேங்கி போறா

கண்ணு கூரா
வெச்சு போறா கன்னி
பூவா பூத்து போறா
மொத்த ஊர பாக்க
தேரா மாறி வீதி
ஓரம் போறா

வஞ்சி போறா
மிஞ்சி போறா கொஞ்சம்
நேரம் மூச்சு வாங்க பந்தம்
பாசம் தூக்கி வீசி மீறி சீறி
போகும் ஆறா

அஞ்ச மாட்டா
கெஞ்ச மாட்டா சொந்த
பாதை போட்டு போறா
பஞ்சு போல பேசினாலே
போதும் பாதம் தீண்டி
போவா



Pakshi - Thallipora

நீயா - உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
உடலோ அடடா தங்கச் சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்

தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
எதுவரை என்றாலும் இன்னும் இன்னும்
கொஞ்சம் என்பேனே
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு

ஆடை களைந்து ஆசை கலந்து
ஆடை களைந்து ஆசை கலந்து
அளித்திடும் இன்பங்கள் என்ன என்ன
இன்னும் சொல்வேனோ

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

நி த மா ச ரி தா காதல் கனி நீ
கனி நீ பதமா காமம் தனி நீ
நி த மா ச ரி தா காதல் கனி நீ
கனி நீ பதமா காமம் தனி நீ

பாடும் சுரமோ தேடும் சுகமோ
பாடும் சுரமோ தேடும் சுகமோ
எதுவெனச் சொன்னாலும் இன்பம் இன்பம்
என்னைத் தந்தேனே

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை

உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை



Neeya - Unnai Ethanai

நீயா - ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ..
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே ... ஏ....
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ....
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே (இசை)

அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்

இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே

அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்

இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே

அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்

இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே

என் மன்னனே... ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா...ஆ...

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன

நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க

உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும்

அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க
தேர் கொண்டு வா....
கண்ணன் வந்து கீதம் சொன்னால், நான் ஆடுவேன்....

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஓ...
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே

அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன்

இந்த மழைமேகம் உன்மீது ஆடும்

அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன்

இந்த மழைமேகம் உன்மீது ஆடும்
வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம்

இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும்

புது வெள்ளமே... ஏ...ஒரே சொர்கம் எந்தன் பக்கம், வேறில்லையே...

ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா....



Neeya - Ore Jeevan

நீயா - நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
ஹோ..ஹோ...விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
ஹோ... ஓ... ஹோ... ஓ... வேளையில் நான் வர
சீறுது சிணுங்குது ஏன்

நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா

காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்

அது புரியாததா நான் அறியாததா
அது புரி....யாததா நான் அறியாததா
உன்னுள்ளம் என்னென்று தெரியாததா

எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்
எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்...தம்.. தம்.. தம்.
நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா
உனை கட்டிக் கொண்டு பேசும் பெண்ணிலா

ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க

ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒன்றான பின்னாலே இரண்டாகுமா

அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..ஆ...
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா



Neeya - Naan Kattil Mele

நீயா 2 - தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான்

தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி
அடியே

தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டா நீ
அழகா

மனசுக்குள்ள இனிப்பதென்ன
உறவு உன்னை நாடி வந்துச்சோ
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

இதயம் மெல்ல துடிப்பதென்ன
உசுரு என்னை தேடி வந்துச்சோ
ஒஹ்ஹஹ் ஓஒ ஹோ ஹோ ம்ம்ம்

தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி
அடியே

தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டா நீ
அழகா

முத்தம் வச்ச இடங்கள
தொட்டு தொட்டு ரசிப்பேன்
மிச்சம் வெச்ச இடம் எது
உள்ளுக்குள்ள நினைப்பேன்

உன் உடலோடு சூட்டில்
முழு இரவும் கழிப்பேன்

வெக்கம் பூரா சூராடி
என்னுள் தீய வெச்சிட்ட
எல்லை மீறி ஊடாடி
என்னை ஏதோ செஞ்சிட்ட

காதல் கொண்டு என்னை
நீ வாழ வெச்ச
தெய்வம் நீயா கண்ணே

நீ தான்

தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி
அடியே

தொலையுறேன் தொலையுறேன்

முப்பொழுதும் உன்னுடைய
கற்பனையில் தொலைஞ்சேன்
மிச்சம் இன்றி உன்னழகு
தேகத்துல கரைஞ்சேன்

ஏ உரையாட போறேன்
இரு உதடுகளாலே

சொல்லும் பேச்சு மீறாம
உந்தன் காலாய் நடப்பேன்
புள்ளத்தாச்சி நானாகி உந்தன்
காதல் சுமப்பேன்

நானும் நீயும் இன்னும்
ஏழேழு ஜென்மம் கூடி
வாழ்வோம் புள்ள

வாழ்வோம்

தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி
அடியே

ஆஅ ஆஅ
மனசுக்குள்ள இனிப்பதென்ன
உறவு உன்னை நாடி வந்துச்சோ
ஹ்ம்ம் ம்ம்ம்ம்

இதயம் மெல்ல துடிப்பதென்ன
உசுரு என்னை தேடி வந்துச்சோ
ஒஹ்ஹஹ் ஓஒ ஹோ ஹோ ம்ம்ம்

தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி
அடியே



Neeya 2 - Tholaiyuren  Tholaiyuren

நீயா 2 - இன்னொரு ரௌண்டு

போடுகுவாட்டரு
கட்டிங்
ஹாப்னா
சிட்டிங்
புல்லுனா
ஷேரிங்
ஊத்தி குடி

பிராண்டினா
தண்ணி
விஸ்கினா
சோடா
ரம்முனா
கோலா
நோ மோர் வொர்ரி

இந்த சரக்கு பாத்ததும்
நெஞ்சோ கொண்டாடுதே
அட சரக்கு மரம்மா
ஒடம்பு திண்டாடுதே

ஏ ஏத்திகடா லிக்கரு
நீ ஊத்திகினா டக்கரு

இன்னொரு ரௌண்டு
ஊத்துஇன்னொரு ரௌண்டு

ஊத்தி குடி ஊத்தி குடி
ஊத்தி குடி ஷார்ப்பா
ஆசைப்பட்டா ஏத்திக்க நீ
போடாதடா தாப்பா

தட்டுங்கடா க்ளாஸ்ஸு
இப்ப கொட்டுங்கடா சியர்ஸ்ஸு
டம்மி பீசு கூட
இப்ப காட்டுறாங்கடா மாஸு

ஆண் மற்றும்
போதை ஏறி போன மனுஷன்
உண்மையத்தான் பேசுறான்
பாருக்குள்ள சாதி மறந்து
சமரசமா சிரிக்கிறான்

பத்து மணி ஆகும்
இத பிரிஞ்சி போக நோகும்

ஏ ஏத்திகடா லிக்கரு
நீ ஊத்திகினா டக்கரு

இன்னொரு ரௌண்டு
ஊத்துஇன்னொரு ரௌண்டு

சரக்கிருக்குது அடிச்சிகோ
முறுக்கிருக்குது கடிச்சிக்கோ
சரக்கிருக்குது அடிச்சிகோ
முறுக்கிருக்குது கடிச்சிக்கோ
ஹான் ஹான் நல்லா அடிச்சிக்கோ
ஏ ஏ கொஞ்சம் கடிச்சிக்கோ

சொந்தம் பந்தம்
எல்லாம் டூப்பு மச்சி
ஊத்த ஊத்த சொர்க்கம் வந்திரிச்சு

வலிக்கும் துன்பம் எல்லாம்
ஓடிபோகும்டா
அட சோகத்த ஓட்ட விட்டா
வாழ்க்கை நோகுன்டா

சரக்கு சந்தையில
சந்தோசம் தானடா
நீ இறங்கு தண்ணியில
கூத்தாடலாம் டா

போதையுல பாடுறனே
கேளு சித்தப்பு
குடிச்சவன்லான் சின்ன புள்ள
பாரு சித்தப்பு

போதை மரம் கீழ
அட பொறக்குதடா ஞானம்
தால்லாடிக்கிட்டு நிக்கிறேன் நான்
தொண்டை கிழிய கத்துறேன்

இன்னொரு ரௌண்டு
ஊத்துஇன்னொரு ரௌண்டு
ஏ ஊத்து டா

இன்னொரு ரௌண்டு
இன்னொரு ரௌண்டு
இன்னொரு ரௌண்டு
இன்னொரு ரௌண்டு

ஒன் மோரு ரௌண்டு
ஒன் மோரு ரௌண்டு
இன்னொரு ரௌண்டு
இன்னொரு ரௌண்டு
ஒன் மோருஊ



Neeya 2 - Innoru Roundu 

Followers