Pages

Search This Blog

Friday, December 21, 2018

பட்சி - யார் இவளோ கலையாத நதியோ

யார் இவளோ
கலையாத நதியோ
கானகம் வழியானதால்
தடை மீறியே போகுமா

பூ விரலோ
புதிரானால் பிழையோ
பூமியே அது போதுமா
விடை தேட வீணாகுமா

போகாத தூரம்
போக போறாளே
ஊர்கோலமாக வேகம்
ஏதும் சாயாதே தேடாத

பாதை தேட மூடாத
பார்வை கூட வானம்
பாடி ஓயாதே

தள்ளி போறா
துள்ளி போறா புள்ளி
மானா தாவி போறா
வண்டி மேல ஏறி
போறா தேடி தாகம்
தேங்கி போறா

கண்ணு கூரா
வெச்சு போறா கன்னி
பூவா பூத்து போறா
மொத்த ஊர பாக்க
தேரா மாறி வீதி
ஓரம் போறா

வஞ்சி போறா
மிஞ்சி போறா கொஞ்சம்
நேரம் மூச்சு வாங்க பந்தம்
பாசம் தூக்கி வீசி மீறி சீறி
போகும் ஆறா

அஞ்ச மாட்டா
கெஞ்ச மாட்டா சொந்த
பாதை போட்டு போறா
பஞ்சு போல பேசினாலே
போதும் பாதம் தீண்டி
போவா

ஓஓ நிலையாகாத
நிழலை கூட படமாய்
பதிவாள் ஓ  ஓஓ
புதுமையான தமிழாய்
ஆவாள் தனிமை ரசிகை

போய் விலகும்
நொடி மேலே மலரும்
கோலமே அதில் ஆவலே
அதை பாடமாய் காணுவாள்

வீண் கவலை
விதி மேலே எறிவாள்
நாளையோ அது நாளை
தான் புது வேதமாய்
காணுவாள்

போகாத தூரம்
போக போறாளே
ஊர்கோலமாக வேகம்
ஏதும் சாயாதே தேடாத
பாதை தேட மூடாத
பார்வை கூட வானம்
பாடி ஓயாதே

தள்ளி போறா
துள்ளி போறா புள்ளி
மானா தாவி போறா
வண்டி மேல ஏறி
போறா தேடி தாகம்
தேங்கி போறா

கண்ணு கூரா
வெச்சு போறா கன்னி
பூவா பூத்து போறா
மொத்த ஊர பாக்க
தேரா மாறி வீதி
ஓரம் போறா

வஞ்சி போறா
மிஞ்சி போறா கொஞ்சம்
நேரம் மூச்சு வாங்க பந்தம்
பாசம் தூக்கி வீசி மீறி சீறி
போகும் ஆறா

அஞ்ச மாட்டா
கெஞ்ச மாட்டா சொந்த
பாதை போட்டு போறா
பஞ்சு போல பேசினாலே
போதும் பாதம் தீண்டி
போவா



Pakshi - Thallipora

Followers