Pages

Search This Blog

Tuesday, November 22, 2016

உன்னை நினைத்து - என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா

என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
உன்னை மழை என்பதா? இல்லை தீ என்பதா?
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா?
உன்னை நான் என்பதா?
(என்னை தாலாட்டும்..)

நதியாகா நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகினேன்
இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்
முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்
மறுநாள் பார்க்கையிலே வானமாய் மாறிவிட்டாய்
நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்
(என்னை தாலாட்டும்..)

பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே
ஆகாயம் ஓர் நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் ககியில் விளக்காகுமே
அன்பே நான் இருந்தேன் வெள்ளை காகிதமாய்
என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்
தீபம் நீயென்றால் அதில் நானே திரி ஆகிறேன்
தினம் தீயாகிறேன்
(என்னை தாலாட்டும்..

Unnai Ninaithu - Ennai Thalattum

காதல் சடுகுடு - மேகத்தில் ஒன்றாய் நின்றோமே

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே
(மேகத்தில் ...)
விதியென்பதால் நெஞ்சிலே பாரமில்லை
மழையென்பது நீருக்கு மரணமில்லை

மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்
(மேகத்தில்..)
கண்ணை கவ்வும் உன் கண்களை காதலித்தேன்
கற்பை தொடும் உன் பார்வையை காதலித்தேன்
ஆசை ஜொண்ட உன் ஆண்மையை காதலித்தேன்

மீசை கொண்ட உன் மென்மயை காதலித்தேன்
நிலா விழும் உன் விழிகளை காதலித்தேன்
நிலம் விழும் உன் நிழலை காதலித்தேன்
நெற்றி தொடும் உன் முடிகளை காதலித்தேன்
நெஞ்சை மூடும் உன் உடைகளை காதலித்தேன்
கண்ணா சிலநாள் தெரிவோம் அதனால்
உறவா சேர்த்துவிடும்

கடல் நீர் கொஞ்சம் மேகம் ஆனால்
மடலா வற்றி விடும்
கிளியோ போகும் காற்றும் ஒரு நாள்
வீட்டுக்கு திரும்பி வரும்
பிரித்தால் என்பது இளையுதிர் காலம்
நிச்சயம் பசுமை வரும்
(மேகத்தில்..)

Kadhal Sadugudu - Megathil Ondrai Nindrom

விண்ணுக்கும் மண்ணுக்கும் - ஆகாயம் பூக்கள் விற்க

ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்
அங்கங்கே பேரம்பேசி நிற்குதடி மேகம்
(ஆகாயம்..)

ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்
சுவாசிக்கும் கார்காலம்
மூங்கில் கள்ளி பச்சை பாம்போடு
கை கோர்த்து கல்யாணம்
குட்டை வால் ஓனான் வேலிக்குள்
குதித்தாடும் உற்சாகம்
கொட்டி வைத்த பூவை நெஞ்சில்
கொண்டு வந்து சேர்க்கும் ஜாலம்
(ஆகாயம்..)

சோளக்கதிர் முற்றும் பருவத்தில்
கிளி மூக்கில் சந்தோஷம்
சூரியனின் ரேகை மோதாமல்
சொட்டும் பனி சங்கீதம்
(சோலைக்கதிர்..)
கொப்பளத்த நீரை யானைகள்
துப்புவதில் குற்றாலம்
குட்டி கங்கை ஒவ்வொரு புள்ளிளும்
கூடி ஏறும் விடியற் காலம்

குறவை மீன் தாவி துள்ளுவதே
கூழாங்கல் மென்மையில்லையடி
குன்று மேல் வானை பூச்சியொரே
குடை செய்ய ஆசையுள்ளதடி
வானம் மழை தூவும் பருவத்தில்
வருடும் புது மண் வாசம்
வாய்கால் வழியோடும் தண்ணீரில்
கப்பல் விட உத்தேசம்
(ஆகாயம்..)

ஆற்றங்கரை மரத்தின் கிளை மேலே
அமரும் ஒரு மீன்கொத்தி
அரை பவுனில் செய்து தருவோமா
அதற்கும் ஒரு மூக்குத்தி
(ஆற்றங்கரை..)
அதிகாலை சூரியன் வானத்தில்
மணி பார்க்கும் கடிகாரம்
அலங்காரம் செய்கிற வானம்
ஏழு வண்ண உதட்டு சாயம்
வல்லாரை லேகியம் இல்லாமல்
வானவில் ஞாபகம் தோன்றுதடி
கல்லூரி சென்று படிக்காமல்
கண்ணாலே வைத்தியம் பார்க்குதடி
நதியோர ஈச்சங்கீற்றின்
நாக்கு ரொம்ப நீளும்
நான் அங்கே வளைந்ததென்று
நக்கை பண்ணி பேசும்
(ஆகாயம்..)
(ஒற்றை செடி..)

Vinnukum Mannukum - Aagayam Pookkal

விண்ணுக்கும் மண்ணுக்கும் - உனக்கென உனக்கென பிறந்தேனே

உனக்கென உனக்கென பிறந்தேனே
உயிரென உணர்வேனே கலந்தேனே
இதயத்தை இதயத்தில் இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
(உனக்கென..)

திருவிழா போல காதல்தான்
அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில்
நம்மை தேடும் செய்தி தருவோமா
ஸ்ரீ ராம ஜெயத்தை போல உன் பெயரை
தினம் எழுதி பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி
தினம் சொல்ல கேட்கிறேன்
அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை
உயிர் வரை கேட்கிறதே
(உனக்கென..)

கடலாக நீயும் மாறினால்
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்
அறிதாரம் பூசும் ஒரு வானவில்லை
பரிசாக கேட்கிறேன்
பகல் தீபமாகி ஆகாய நிலவை
உறவோடு பார்க்கிறேன்
அடி பொய் என்றபோதும் உன்னோடு பேசும்
கனவுகள் வேண்டுகிறேன்
(உனக்கென..

Vinnukum Mannukum - Unakenna Unakenna

உயிரிலே கலந்தது - உயிரே உயிரே அழைத்ததென்ன

உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன் ...மறைந்ததென்ன

உயிரே  உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்...மறைந்ததென்ன (உயிரே)
உன் கீதம் எந்தன் காதில் விழுமா
உன் வானம் எந்தன் பக்கம் வருமா
கங்கை எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா

உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்  மறைந்ததென்ன

நீ தோன்றினாய்  அடிவானமாய்
நான் வந்ததும் தொலைவாகினாய்
கண்மூடினேன் மெய் தீண்டினாய்
கை நீட்டினேன்  கனவாகினாய்
மழைச் சாலையில் குமிழாகினாய்
விரல் தீண்டினேன் ...உடைந்தோடினாய்
என் தூரத்து விண்மீனே ...
கை ஓரத்தில் வருவாயா
என்னை ஒரு முறை தொடுவாயா ...
ஒளியே ....

உயிரே ...உயிரே...அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்...மறைந்ததென்ன

காற்றேன்கிலும் ...உன் கீர்த்தனை
கண்ணீரிலே ...ஆராதனை ...
என் தோட்டத்தில் உன் வாசனை
என் ஜீவனில் ...உன் வேதனை
நான் தேடினேன் என் கண்ணனை
புயல் சூழ்ந்ததே என் கண்களை
நான் வேறெங்கும் மறைவதில்லை
என் வேறென்றும் அழிவதில்லை
உன் வானம் முடிவதில்லை ...
உறவே ....

உயிரே ...உயிரே...அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்...மறைந்ததென்ன
உயிரே...உயிரே...அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்...மறைந்ததென்ன
உன் கீதம் எந்தன் காதில் விழுமா
உன் வானம் எந்தன் பக்கம் வருமா
கங்கை எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா

Uyirile Kalanthathu - Uyire Uyire Alzaithathenna

ஆனந்த பூங்காற்றே - உதயம் தியேட்டருல என் இதயத்தை

டைட்டானிக் காதல் போல
உன் காதல் மூழ்காதப்பா
இது டைட்டான காதலப்பா
ரொம்ப வெயிடான காதலப்பா

அஸ்தரிக்க…

ஓ காட்…

ஆஹா இஸ்தரிக்க…

ஓ காட்…

எங்கடா தொலச்சே…

இங்கதான் தொலச்சேன்…

எப்படா தொலச்சே…

ஜஸ்ட் னவ்…

எதடா தொலைச்சே…

ஹார்ட தலைவா…

உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
அத தேவி தியேட்டருல அதை தேடி தேடி அலைஞ்சேன்
உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
அத தேவி தியேட்டருல அதை தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா
சாந்தி கமலா பத்மா ஜெயந்தி
எம்மா ராகினி ரோஹினி ரூபினி ருக்மணி
கேட்டு சொல்லடி கிருஷ்ணவேனி

உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
அத தேவி தியேட்டருல அதை தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா

கண்ட கண்ட பெண்ணை எல்லாம்
காதலிச்ச தப்பப்பா
கண்ணுக்குள்ள மனம் துடிக்கும்
கண்டுபுடிக்கணும் அப்பப்பா
முதல் முதல் சந்திப்பில்
முத்தம்மிடல் தப்பப்பா
தொடாம தள்ளி இருந்து
துடிக்க வைக்கனும் அப்பப்பா
நெஞ்சில் என்ன வலி இருக்கும்
நேரே சென்று நீயே சொல்லு
அஞ்சாரு வாரம் வரை
அஞ்சு மீட்டர் தள்ளி நில்லு
சந்தர்ப்பம் நேரும்போது
ஜம்முக்காளத்தில் மொத்தம் அள்ளு
தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா
தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா

உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
அத தேவி தியேட்டருல அதை தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா

காதல் ஒரு தப்பு இல்லை
எல்லை மீறல் ஆகாது
பூமியில ஃபூட்பால் ஆட
நிலா கேட்க கூடாது
முறை உள்ள காதல
மூடி வைக்க கூடாது
தங்க கிளி பறந்த பின்னே
தாடி வைக்க கூடாது
காதலிக்க ஆசை பட்டா
கஷ்டப்பட கத்துக்கப்பா
மீனு தின்ன ஆசை பட்டா
முள்ளிருக்கும் ஒத்துக்கப்பா
சிந்திச்சு முடிவெடுத்து
நீயும் கொஞ்சம் முந்திக்கப்பா
தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா
தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா
உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
அத தேவி தியேட்டருல அதை தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா
சாந்தி கமலா பத்மா ஜெயந்தி
எம்மா ராகினி ரோஹினி ரூபினி ருக்மணி
கேட்டு சொல்லடி கிருஷ்ணவேனி

உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்
அத தேவி தியேட்டருல அதை தேடி தேடி அலைஞ்சேன்
அவ தேவி கலா-வா இல்ல தேவி பாலா-வா

Anantha Poongatre - Udhayam Theatre

அரசு - மல்லிகை மல்லிகை பந்தலே

மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே

முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
எந்தன் மனசு சொல்லும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில

வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தானே
பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே
உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
(மல்லிகை..)

செவியோடு தான் காதல் சொல்வாய் என்பேனே
தயிர் சாதமாய் உன்னை அள்ளி தின்பேனே
பெண் ஆசையே இல்லா மனிதன் நானடி
உன் ஆசையால் இந்த மாற்றம் ஆனேனடி
நிலையான வாழ்க்கை போல வாழ்ந்து வந்தேனே
உன்னை பார்த்த பின்னே என்னை திருத்தி கொண்டேனே
இந்த அருகம்புல்லின் மேல்
பனி துளியாய் நின்றாயே
எந்தன் பருவ தோள்களில்
பச்சை கிளியாய் வாழ்ந்தாயே
என்னை துளசி செடியாய் சுற்றி வந்தாயே
கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டாயே

அதிகாலையில் தோன்றும் வெள்ளை திங்களே
பசி நேரத்தில் பார்த்த தண்ணீற் பந்தலே
கலங்காதே ஓர் தெப்பம் போல வந்தேனே
நீ தீண்டினால் ஐயோ கலங்கி போனேனே
சதை மூங்கில் போலே உந்தன் தேகம் பார்த்தேனே
அதை ஊதி மெல்ல நானும் அணைத்து சாய்த்தேனே
உந்தன் விழியில் கண்டேனே
எந்தன் கனவை கண்டேனே
உந்தன் உள்ளத்தை கண்டேனே
எந்தன் உணவை கண்டேனே
உன்னை துளசி செடியாய் சுற்ற வந்தேனே
கண்ணால் பார்த்து வெற்றி கண்டேனே
(மல்லிகை..)
(முந்திரி..)

Arasu - Malligai Malligai

Followers