Pages

Search This Blog

Monday, January 27, 2014

மௌனம் சம்மதம் - கல்யாண தேன் நிலா

ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

***

ஆண் : தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

பெண் : என் அன்பு காதலா
எந்நாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா

ஆண் : பார்ப்போமே ஆவலா
வா வா நிலா.............

பெண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

ஆண் : நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

***

பெண் : உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா

ஆண் : சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா

பெண் : தேனூறும் வேர்ப்பலா
உன் சொல்லிலா..ஆ.ஆ...

ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

பெண் : தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

Mounam Sammadham - Kalyaana Thaen Nilaa

மௌனம் பேசியதே - என் அன்பே என் அன்பே

என் அன்பே என் அன்பே
என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி
என் அன்பே என் அன்பே
என் நெஞ்சுக்குள் காதல் வலி

என் உடல் இன்று கடல் ஆனதே
என் உயிருக்குள் அலையடுதே
இந்த பறைக்குள் பனி பாய்ந்ததே
என் விரகத்தில் விளையாடுதே
ஒ .. சகி ... வா .. சகி ...
பிரிய சகி ... பிரிய சகி ...

விழி பட்ட இடம் இன்று உளி பட்ட சிலையாக
இதுதானோ காதல் என்றரின்தேனடி
புது பார்வை நீ பார்த்து புது வார்த்தை நீ பேசி
இதயத்தை இடம் மாற செய்தயடி

மெல்லிடை கொண்டு நடைகள் போடும் அழகான பெண்ணே
உன் படை கொண்டு எனை சுற்றி வலைதயடி
என் உறக்கத்தை திருடி சென்று உறவாடும் பூவே
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய் .....

அட கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வட்டினாய்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை மாற்றினாய்
இதயத்தின் மறுபக்கம் நீ கட்டினாய்
இனி என்ன சொல்லுவேன் இன்று ..?
நான் அமுத நஞ்சையும் உண்டு
இனி ரெக்கை இன்றியே நான் போவேன் வான் மீதிலே ...

(ஒ சகி )

Mounam Pesiyadhe - En Anbae En Anbae

மௌனம் பேசியதே - ஆடாத ஆட்டமெல்லாம்

ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போண கதை உணக்கு தெரியுமா?

நீ கொண்டு வந்ததெண்ண?
நீ கொண்டு போவதெண்ண?
உண்மை கதை உணக்கு தெரியுமா?

நித்தம் கோடி சுகங்கள்
தேடி
கண்கள் மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும் மேலும்
சேர்த்துக்கொண்டே
போகின்றோம்

மனிதன் எனும் வேடம் போற்று
மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஓன்று இருப்பதை
மறந்து
தீமைகனை செய்கின்றோம்

காலம் மீண்டும் திரும்பாதே
பாதை மாறி போகாதே
பூமி கொஞ்சம் குலுங்கினாலே
நின்று போகும் ஆட்டமே

கருவறைக்குள் தானாக
கற்றுக்கொண்ட சிறகாட்டம்
தொட்டிலுக்குள் சுகமாக
தொடருமாட்டமே

பருவம் பூக்கும் நேரத்தில்
காதல் செய்ய போராட்டம்
காதல் வந்த பின்னாலே
போதையாட்டமே

பேருக்காக ஓரு ஆட்டம்
காசுக்காக பல ஆட்டம்
எட்டுக்காலில் போகும் போது
ஊரு போடும் ஆட்டமே
ஆடாத ஆட்டமெல்லாம்
போட்டவங்க மண்ணுக்குள்ள
போண கதை உணக்கு தெரியுமா

Mounam Pesiyadhe - Aadatha Aatamellam

மௌனம் பேசியதே - சின்ன சின்னதாய் பெண்ணே

சின்ன சின்னதாய் பெண்ணே
என் நெஞ்சை முட்களாய் தைத்தாய்
என் விழியை வாள் கொண்டு வீசி..
இள மனதில் காயங்கள் தந்தாய்..
துன்பம் மட்டும் உன் உறவா
உனை காதல் செய்ததே தவறா

உயிரே .... உயிரே ....

காதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம்
உண்மைக் கண்டேன் உன்னால் பெண்ணே
பெண்கள் கண்ணில் சிக்கும்ஆண்கள் எல்லாம் பாவம்
உண்மைக் கண்டேன் உன்னால் பெண்ணே

காதல் வெறும் மேகம் என்றேன்
அடை மழையாய் வந்தாய்
மழையோடு நனைந்திட வந்தேன்
நீ தீயை மூட்டினாய்
மொழியாக இருந்தேனே
உன்னால் இசையாக மலர்ந்தேனே

என் உயிரோடு கலந்தவள் நீதான் ஹேய் பெண்ணே
கனவாகி கலைந்ததும் ஏனோ சொல் கண்ணே
மௌனம் பேசிதே உனக்கது தெரியலயா
காதல் வார்த்தைகளை கண்கள் அறியலையா

காதல் செய்தால் பாவம் ....

துணையின்றித் தனியாய் சென்றேன்
என் நிழலாய் வந்தாய்
விடை தேடும் மாணவன் ஆனேன்
என் விடையும் நீயென வந்தாயே என் வழியில்
காதல் தந்தாயே உன் மொழியில்

என் நெஞ்சில் காதல் வந்து நான் சொன்னென்
உன் காதல் வெறோர் மனதில் எனை நொந்தேன்
கண்கள் உள்ளவரை காதல் அழிவதில்லை
பெண்கள் உள்ளவரை ஆண்கள் ஜெயிப்பதில்லை

காதல் செய்தால் பாவம் ....

Mounam Pesiyadhe - Chinna Chinnathai

மெல்ல திறந்தது கதவு - ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும்

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே

(ஊரு சனம் )

குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மாயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நெலாக்காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்

ஒத்தயிலே அத்தமாக ஒன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடல்லையே காலம் நேரம் கூடல்லையே

(ஊரு சனம் )

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழல் உ
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வாரம்
கூடும் காலம் வாராதா மாலை தோளில் ஏறாதா
ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே

ஒன்ன எண்ணி போட்டு வெச்சேன் ஓலைப் பாய போட்டு வெச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வெச்சான்

(ஊரு சனம் )

 Mella Thirandhathu Kadhavu - Ooru Sanam

மெல்ல திறந்தது கதவு - குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும்

குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

(குழலூதும் )

மலக்காத்து வீசுறபோது மல்லிகப்பூ பாடாதா
மழைமேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா
வந்தாச்சு சித்திரதான் போயாச்சு நித்திரதான்
பூவான பொண்ணுக்குத்தான் மாமா நீ தேதி சொல்லு
மெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா
வேலக்கேத்தும் போழுதானா இலநேஞ்சு படும் பாடு கேளைய்யா

(குழலூதும் )

கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரைஎல்லாம் இப்பத்தான் கசக்குறதா
என் மேனி தேனரும்பு என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் ????

உனக்கச்சு எனகாச்சு சரிஜோடி நாமாச்சு கேளைய்யா

(குழலூதும் )

Mella Thirandhathu Kadhavu - Kuzhaloodum Kannanukku

மெல்ல திறந்தது கதவு - தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க (2)
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் (2)
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்... இணைவோம்...
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ...

தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க...

Mella Thirandhathu Kadhavu - Thedum Kan Paarvai

Followers