Pages

Search This Blog

Monday, January 27, 2014

மலைக்கோட்டை - தேவதையே வா என் தேவதையே வா

தேவதையே வா என் தேவதையே வா
உன் இரு விழி அசைவினில் எழுதிடும்
கவிதை நான்

பூமாலையே வா என் பூமாலையே வா
உன் விரல் தொடும் தொலைவினும்
விழுகிற அருவி நான்

நீரிளில்லாமல் மீன்களும்
வேரில்லாமல் பூக்களும்
பாவம் தானே பூமியில்

சிலுவையிலும் சிறகென பறந்திடும்

தேவதையே வா என் தேவதையே வா
உன் இரு விழி அசைவினில் எழுதிடும்
கவிதை நான்


விளையும் பூமி தநீரை
விலக சொல்லாது
அலைகடல் சென்று பாயாமல்
நதிகள் ஓயாது

சிதைவுகள் இல்லை என்றாலே
சிலைகள் இங்கேது
வருவதை எல்லாம் ஏற்காமல்
போனால் வாழ்வேது

பாதை தேடும் கால்கள் தான்
ஊரை சேரும்
குழலை சேரும் தென்றல் தான்
கீதம் ஆகும்

சுற்றும் இந்த பூமியை
சுழல செய்த காதலை
கற்று கொண்டேன் உன்னிடம்
இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை


ஆடை மலை நம்மை தொட்டாலே
வெயிலே வா வென்போம்

அனலாய் வெயில் சுட்டாலே
மலையே தூவென்போம்

தனிமைகள் தொல்லை தந்தாலே
துணியை கேட்கின்றோ ம்

துணை வரும் நெஞ்சை கொள்ளாமல்
தனியே தேய்கின்றோம்

ஆசை மட்டும் இல்லையேல் ஏது நாட்கள்
கைகள் தொட்டு சூடவே காதல் பூக்கள்

கண்ணை விற்று ஓவியம் வாங்கும் இந்த ஊரிலே
அன்பை வைத்து வாழலாம்
சுகம் என தினம் சுமைகளில் மகிழ்ந்திரு

தேவதையே வா என் தேவதையே வா
உன் இரு விழி அசை வுகள் எழுதிடும்
கவிதை நான்
பூமாலையே வா என் பூமாலையே வா
உன் விரல் தொடும் தொலைவினும்
விழுகிற அருவி நான்

நீரில்லாமல் மீன்களும்
வேரில்லாமல் பூக்களும்
பாவம் தானே பூமியில்
சிலுவையிலும் சிறகென பறந்திடும்

Malaikottai - Devathaye Vaa Vaa

மலைக்கோட்டை - எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய

எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய ?
நான் பார்த்த பாக்காமலே போறிய ?
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?
அடி அக்கம் பக்கம் யாரும் இல்ல..அள்ளிக்கலாம் வா புள்ள ..
எஹ் ஆத்தா ஆத்தோரமா வாரிய?நான் பார்த்த பாக்காமலே போறிய?

ஆவாரம் பூவாக அள்ளாம கிள்ளாம..
அணைக்க துடிச்சிருக்கேன்..

அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு ..
தனிச்சு தவிச்சிருக்கேன் ..

ஆவாரம் பூவாக அல்லாமா கில்லாம ..
அணைக்க துடிச்சிருக்கேன் ..

அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு..
தனிச்சு தவிச்சிருக்கேன்..

தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேணாமா ?
தளும்பும் நெனப்புக்கு அல்லிகிறேன் நீவாமா ..

மாருல குளிருது சேர்தென அணைச்சா ..
தீருமடா குளிரும் கட்டிபுடிசுக்கோ ..ஹே ..

ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?

நான் போறேன் முன்னால ..நீ வாட பின்னால ..
நாயகர் தோட்டத்துக்கு ..

பேசாதே கண்ணாலே ..என்னடி அம்மாடி வாடுற வாட்டத்துக்கு ..

நான் போறேன் முன்னால..நீ வாடா பின்னால..
நாயகர் தோட்டத்துக்கு..

பேசாதே கண்ணாலே..என்னடி அம்மாடி வாடுற வாட்டதுக்கு..

சிரிச்ச சிரிப்புல சில்லரையும் சிதறுது ..
செவந்த முகம் கண்டு எம்மனசு பதறுது ..

பவள பவள பவள வாயில தெரிகிற அழகா ??? ..
பார்த்ததுமே மனசு பட்டு துடிக்குது ..
ஹே..ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?
அடியே ஆத்தா ஆத்தோரமா வாரிய?
நான் பார்த்த பாக்காமலே போறிய?

Malaikottai - Yeh Aatha

ஸ்ரீ - கண்ணே மொழி வேண்டாம்

கண்ணே  மொழி வேண்டாம் 
உந்தன்  விழி  மட்டும் போதும்  - போதும் 
கண்ணே  தென்றல்  வேண்டாம் 
உந்தன்  தேகம்  மட்டும்  போதும்
மலர்  சிந்தும்  தேன்  வேண்டாம்  
உந்தன்  இதழ்  தரும்  சுவை  போதும்  
முக்கனி  வேண்டாம் 
இக்கன்னி  ஒன்றே  போதும்   போதும்  போதும்

(கண்ணே  மொழி ...)  

உறவே  பழசு  வேண்டாம்  காதல்  சொல்  போதும்
உயிரின்  ஓசை  வேண்டாம்  காதல்  ஒன்று  போதும்  

அதிகாலை  நிலவே  வேண்டாம்
அடடா  இவள்  முகம்  போதும் 
அசைந்தாடும்  கொடியே  வேண்டாம்  
வளைந்தாடும்  இவள்  இடை  போதும்
வான்  மேக  கூட்டம்  வேண்டாம்  
காதல்  கூந்தல்  தோட்டம்  போதும்  
வண்ண  மலர்கள்  பஞ்சனை  வேண்டாம்
இவள்  மடிசுகம்  ஒன்றே  போதும் 
இலக்கியமே  இனி  வேண்டாம் 
இவள்  இளமை  சிந்தும்  கவி  போதும்  
சுவாசமே  வேண்டாம் 
இவள்  வாசம்  மட்டும்  போதும்  போதும்  போதும்

(கண்ணே  மொழி ...) 

அந்த  ஏழு  அதிசயம்  இனி  வேண்டாம்
அந்த  அழகின்  அதிசயம்  நீ  போதும்  - கண்ணே  
குகூ  குயிலின்   குரல்  இசை  இனி  வேண்டாம் 
கொஞ்சும்  காதல்  மழலை  நீ  போதும்  - கண்ணே  கண்ணே  
அந்த  வானவில்லும்  வேண்டாம் 
உந்தன்  நினைவின்  வண்ணம்  போதும் 
பல  கோடி  புன்  நகை  வேண்டாம் 
உன் புன்னகை ஒன்றே  போதும்  
அடி  அகிலமே  வேண்டாம்  அருகில்  நீ  இருந்தாலே.. போதும்  போதும்  போதும்   

(கண்ணே  மொழி ...)

Shree - Kannae Mozhi Vaendam

ஸ்ரீ - வசந்த சேனா வசந்த சேனா

வசந்த சேனா வசந்த சேனா
வசியம்  செய்ய பிறந்தவள்  தானா 
நீயிள்லாது  நான்  என்ன நானா
சேனா வசந்த சேனா
ஒ  மதன  சேனா  மன்மத  சேனா
என்னக்குள்  எதையோ  திருடி  சென்றான 
காதல்  ஊருக்கு  வழி  இதுதான  சேனா  

(வசந்த  சேனா ...) 

அணுவாய்  அணுவணுவாய்  என்  அழகை  துளைதவனே
அணு சக்தியாய்  இருந்து என் உயிரை வளர்த்தவனே
காதல் சங்கிலியால்  சிறையில் அடைத்தவளே 
அடிமை சாசனத்தை  எழுதி கேட்டவளே  
என் இமைகள்  இரண்டை  விடுமுறைக்கு  அனுப்பி
இரவில்  தூக்கம்  கேடுதவானே
இதயம்  நிரம்பிய  கஜானா   போல
கொஞ்ச  கொஞ்சமாக  கரைதவானே
காதல்  இது  தானே , தோழி  காதல்  தோழி

(மதன  சேனா ...)

உயிரில்  உயிர்  புதைத்து  புதையல்  எடுத்தவளே
உருவம்  இனி  எதற்கு  என  விளக்கம்  கொடுத்தவளே
பொய்யால்  ஒரு  மொழியில்  என்  மெய்யை  வளைத்தவனே
கொயாதொரு  கனியை  கண்ணால்  கொய்தவானே
பகலை  சுருகிட  இரவை  தொடுக்கிட  யுக்தியை  வகுத்திடு  நாயகியே 
கனிவாய்  பிறந்தொரு  துளியாய்  விழுந்திட 
துணையாய்  இணைவாய்  வாசகியே
காதல்  இது  தானே , தோழா  காதல்  தோழா 

(வசந்த  சேனா ...)

Shree - Vasantha Sena

Friday, January 24, 2014

எங்கஊரு பாட்டுக்காரன் - சென்பகமே சென்பகமே

செண்பகமே  செண்பகமே
தென்பொதிகை  சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா  சம்மதமே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே

உன் பாதம்  போகும் பாதை  நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு  காத்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு  
என்  மனம்   ஏனோ  வாடிடலாச்சு
உன்னோட  பாட்டு சத்தம் சேரும் என்ன பின்னாலே
எப்போ  நீ என்னை தொட்டு  பேசபோரே  முன்னாலே  

சென்பகமே சென்பகமே 
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தா சம்மதமே  

பூவச்சு  போட்டும்வசு  மேலம்கொட்டி  கல்யாணம்
பூமஞ்சம்  பொட்டுகூட  எங்கே  அந்த சந்தோஷம் 
உன் அடி தேடி நான்  வருவேனே  
உன் வழி பார்த்து நான் இருப்பேனே
ராசாவே  உன்னைதொட்டு  நானும்  வாரமட்டேனா
என் வீட்டுக்காரன்  பாட்டு காதில்  கேட்கமட்டேனா

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே 
சேர்ந்திருந்தா சம்மதமே 

Enga Ooru Pattukaran - Shenbagame Shenbagame(female)

எங்கள் ஊரு பாட்டுக்காரன் - மதுர மரிக்கொழுந்து வாசம்

மதுர மரிக்கொழுந்து வாசம் - என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது
மறையாத என்னுடைய பாசம்


பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு

கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசிரை கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னை அவுத்துவிடு

(மதுர மரிக்கொழுந்து)

மெட்டுன்னா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு

சுத்துனா சுத்தி அதை
என் கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட

நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ கிறங்குதடி
சிறகடிச்சுப் பறக்குதடி

Enga Ooru Pattukaran - Madura Marikkozhunthu

தாஜ்மஹால் - செங்காத்தே செங்காத்தே

செங்காத்தே செங்காத்தே செங்காத்தே
உலக காதலர் விடும் மூச்செல்லாம் உனக்குள் சுமந்து சுமந்து சூடாகினாய்
காதல் கதை எல்லாம் நீ அறிவாய்
எங்கள் காதலையும் நீ கேளாய்

அட கருவுக்குள் உயிர் தந்த காத்தே எங்க காதலுக்கு உயிர் கொடு காத்தே
எங்க உடம்புக்குள் உலவிடும் காத்தே எங்க உயிர்கொரு வழி சொல்லு காத்தே

யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே
யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே யாத்தே
யாத்தே யாத்தே யாத்தே யாத்தே

செங்காத்தே செங்காத்தே

கல்லறையின் காதலரை நீ எழுப்ப வா வா
அட காதலர் சாகலாம் உண்மை காதல் சாகாது
உடல்கள் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது

யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உடல் அழிந்து விடும் யாத்தே
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே

யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே உடல் அழிந்து விடும் யாத்தே
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே

உடல் அழிந்து விடும் யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே

Taj Mahal - Sengatrae

Followers