Pages

Search This Blog

Monday, November 25, 2013

அவள் வருவாளா - சேலையில வீடு கட்டவா

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க
ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க
மூக்குத்தியின் மின்னல் ஒரு தீபம் ஏற்றிவைத்துப் போக
சொக்குகின்ற வெட்கம் வந்து வண்ணக் கோலமொன்று போட
என்னை நான் உன்னிடம் அள்ளிக் கொடுக்க

(சேலையில)

தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே
அசந்ததும் உன் விழி அழகினைத் திருடுதே
ஓவியத்தைத் திரை மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா
காற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா
ரசிக்க வந்த ரசிகனின் விழியினை மூடாதே
விழியை மூடும்போதிலும் விரல்களாலே திருடாதே

(சேலையில)

மன்மதன் சன்னிதி முதன்முறை பார்க்கிறேன்
அதனால் தானடி பனியிலும் வேர்க்கிறேன்
முத்தங்களின் ஓசைகளே பூஜைமணி ஆனதே
செவ்விதழின் ஈரங்களே தீர்த்தமென்று தோணுதே
காலனேமென்பது காதலில் இல்லையா
காமதேவன் கோயிலில் கடிகாரங்கள் தேவையா

(சேலையில)

Aval Varuvala - Selaiyile Veedu

அவள் வருவாளா - காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ.. ஓ…
கூந்தல் வருடும் காற்று
அது நானா இருந்தேன் தெரியாதா
கொலுசு கொஞ்சும் பாட்டு
அதன் பல்லவி ஆனேன் புரியாதா
சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய்
மின்னுவதும் காதல் தரும் மொழிதான்
வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய்
உன்னைச்சுற்றி மூடுவதும் அதுதான்
பனிப்பூவில் வாசமாய் கலந்தேனே நானம்மா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ..ஓ..
நிலவை உரசும் மேகம்
அந்த நினைவை நினைத்தே உருகாதா
உயிரை பருகும் காதல்
அது ஒரு நாள் உனையும் பருகாதா
நீ முடிந்த பூவிலொரு இதழாய்
வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்
நீ நடந்த மண்ணெடுத்து சிலனாள்
சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்
நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன்
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா.. ஓ ,..ஓ

Aval Varuvala - Kaadhal Enna Kannamoochi

அவள் வருவாளா - இது காதலின் சங்கீதம்

இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்

ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது
எந்த பாதி எங்கு சேரும் யார் தான் சொல்லுவது
தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம் இங்கே சேர்கிறது
வேள்வி தீயில் சுயநலங்கள் வெந்து தீய்கிறது
நிலவினை கிரகணம் தீண்டியது
மறுபடி பௌர்ணமி தோன்றியது
விதியும் புதியது கதையும் புதியது
காலத்தின் தீர்ப்பு இது
தெய்வத்தின் சேர்ப்பு இது

இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்

காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை
ராவணர்க்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை
புதியபாதை போட்டுக் கொள்ள எவரும் மறுப்பதில்லை
பழிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறுப்பதில்லை
பெண்ணுக்கு பெண்ணிங்கே எதிரியில்லை
பெண்மையை காட்டிலும் தெய்வமில்லை
அத்தை கண்களில் அன்னை தோன்றினால்
தோன்றினும் மாகாளி
அவள் பரிசுத்த பொன் தாயி

இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்

Aval Varuvala - Idhu Kaadhalin Sangeetham

Tuesday, November 19, 2013

யாரடி நீ மோகினி - நெஞ்சை கசக்கி பிழிந்து

நெஞ்சை கசக்கி பிழிந்து போற பெண்ணே ரதியே ரதியே
வந்து தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே
அடி மயிலே மா மயிலே மதி மயக்கும் பூங்குயிலே
(நெஞ்சை..)

கம்மங்காட்டில் கொளத்து மேட்டில்
வண்டி ஓட்டும் ஆசை மாமா
கூச்சத்த தூக்கி குப்பையில் போடு
ஓ பார்க்க பார்க்க மனசு ஏங்கும்
பழகி பார்க்க வயசு வேண்டும்
இதயத்தில் இடம் இங்கு இல்லையே
அதைஅ எடுக்கவும் கொடுக்கவும் இல்லையே
காதல் எனாக்கு வேண்டாமே
கவலை மறந்து வா மாமா
கைய பிடிச்சு கன்னம் தேச்சு
கதைகள் பேச வா வா
உள்ளம் கொடுப்பது ஒரு முறைதான்
இனி வாழ்வோ சாவோ அவளோடுதான்
வாஇப்புகள் வருவது ஒரு முறைதான்
நீ இலக்கணம் பார்த்தால் தலை வலிதான்
(நெஞ்சை..)

பார்வை பார்த்து மயக்கி போனால் பாவி நெஞ்சை
ஆண்களின் ஜென்மம் என்றுமே துன்பம்
நெருங்கி வந்தால் விலகி போகும்
விலகி போனால் நெருங்கி வருவோம்
பெண்களின் மனதில் என்னவோ
அது பெண்ணுக்கு புரிவது இல்லையோ
ஆசைய வைத்தேன் உன் மேல் தான்
வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான்
வாழ்க்கை தெரிந்தால் பயணம் புரிந்தால்
பாறை இடுக்கில் ஒரு பூ தான்
கனவுகள் காண்பது உன் உரிமை
அடு கலைந்தால் தெரியும் என் நிலமை
இரவும் பகலும் உன் மடியில்
கண்மூடி கிடப்பேன் உன் அருகில்
(நெஞ்சை கசக்கி)

Yaaradi Nee Mohini - Nenjai Kasakki

யாரடி நீ மோகினி - எங்கேயோ பார்த்த மயக்கம்

எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்...
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ... ஏதானதோ...
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க

எங்கேயோ பார்த்த...

ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து...

Yaaradi Nee Mohini - Engeyo Paartha

யாரடி நீ மோகினி - ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழிகிற பொழுது
தோடு வானத்தை தொடுகிற உணர்வு
ஒ ஒ ஒ ...
ஒ ஒ ஒ ஒ ..

ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்
இந்த தயக்கத்தில் வரும் நடுக்கம்
இன்றாலும் கால்கள் மிரிக்கும்
ஒ ..

ஒரு..

நடை முறைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தால்
நீ காதால ? இல்லை கடவுள் ஆ ?
புரியாம ல் திற்றி போன்னேன்
யாறேரும் கடைதாள் ஒரு முறை தான்
நீ தானோ என்றே திரும்பிடுவேன்
தினம் இரைவினில் , உன் அருகினில்
உறங்காமல் உறங்கி போன்னேன்
இது ஏதோ புரிய உணர்வு
இது புரிந்ததும் உயர்ந்திடும் பொழுது
ஒரு பனிமலை ? ஒரு எரிமலை ?
திரில்கொட்டு ஒன்றாய் சிரிக்கும்
நா நனானன நா
நன்ன நா னனனன நா

(ஒரு நாளுக்குள் எத்தனை கனவு ..)

நதியாலே பூற்கும் மரங்களுக்கு
நதி மீது இருக்கும் காதலினை
நதி அறியுமா ? கொஞ்சம் புரியுமா ?
கரையோட கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்
அவள் குட உன்னையும் விரும்பி விட்டால்
நீ பறக்கலாம் , உன்னை மறகல்லாம்
பிறர்க்காக கனவுகள் பிறக்கும்
தன் வாசனை பூ அரியது
கண்ணாடிக்கு கண் கிடையாது
அது புரியலாம் , பின்பு தெரியலாம்
அது வரையில் நட்பது நடக்கும்

Yaaradi Nee Mohini - Oru Naalaikkul

யாரடி நீ மோகினி - வெண்மேகம் பெண்ணாக

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

- வெண்மேகம் .....

மஞ்சல் வெயில் நீ! மின்னல் ஒளி நீ!
உன்னைக் கண்டவரைக் கண்கலங்க நிற்கவைக்கும் தீ!
பெண்ணே என்னடீ! உண்மை சொல்லடீ!
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபப்பட்டதென்னடீ!

தேவதை வாழ்வது வீடில்லை கோயில்!
கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்!

ஒன்றா? இரண்டா? புன்னகையைப் பாட!

கண்மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்!
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்!

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

- வெண்மேகம் .....

எங்கள் மனதைக் கொள்ளையடித்தாய்!
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்?
விழியசைவில் வலை விரித்தாய்!
உன்னைப் பல்லக்கினில் தூக்கிச் செல்ல கட்டளைகள் விதித்தாய்!

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி!
என் காதலும் என்னாகுமோ!
உன் பாதத்தில் மண்ணாகுமோ!

ஐயோ மழை மழை! சீக்கிரம் ஓடுங்க..சட்டுனு போங்கொ!

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன?

உன்னாலே பல ஞாபகம்என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

Yaaradi Nee Mohini - Vennmegam

Followers