Pages

Search This Blog

Friday, October 25, 2013

மறுபடியும் - எல்லோரும் சொல்லும்

எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னை பார்த்து
மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷம் அங்கெலாம் ஒரு விஷ,ஏ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே
எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து

[1]
நாயகன் மேலிரிந்து நூலினை ஆட்டுகின்றான்
நாமெலாம் பொம்மை என்று நாடகம் ஆட்டுகின்றான்
காவியம் போலொரு காதலை தீட்டுவான்
காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ச்நேதமா
புயல் அடித்த மேகமா
கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

[2]
கோவலன் ராதை தன்னில் மாதவி வந்ததுண்டு
மாதவி இல்லை என்றால் கண்ணகி எது இன்று
மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே
மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே
எது கூடுமோ
எது விலகி ஓடுமோ
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

Marupadiyum - Ellorum Sollu Pattu

மறுபடியும் - ஆச அதிகம் வெச்சு

ஆச அதிகம் வெச்சு மனச அடக்கி வெக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சி வெக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி

(ஆச அதிகம்)

சின்னப்பொன்னு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான்
????? ஒரு செந்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாபத் தேரேறலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலைதான் என் செல்லக்குட்டி

(ஆச அதிகம்)

வெல்லக்கட்டி நான் ஒரு வெள்ளிரதம் நான்
தங்கத்தட்டு நான் நல்ல கார்காலம் நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுல்லை நான் அந்தி வான்மேகம் நாம்
என் மச்சானே என்னோடு நீ ஆடலாம்
வா தென்பாண்டித் தெம்மாங்கு நாம் பாடலாம்
????

(ஆச அதிகம்)

Marupadiyum - Aasai Athigam

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி
என் கண் பார்த்தது என் கை சேருமோ
கை சேராமலே கண்ணீர் சேருமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

மலர்மஞ்சம் விழி கெஞ்சும் மனம் அஞ்சுமல்லவா
உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம் உன் தஞ்சமல்லவா
உன் தனிமைக் கதவின் தாள் நீக்கவா
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்

மேகம் திறந்தால் அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்
பூக்கள் திறந்தால் அதற்குள் உன் குரல் கேட்கிறேன்
கண்களைத் திறந்துன் கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள் கல்லையும் திறக்கும்
உன்னைத் தேடியே இனி எனது பயணமோ
எந்தன் சாலைகள் உன் வீட்டில் முடியுமோ
ஏ கனவு மங்கையே உனது மனது எனது மனதில் இணையுமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே வெண்ணிலவு கண்டுகொண்டேன்

ஆ...
நதியின் தேடல் கடைசியில் கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில் உனைக்காண்பது
கடல் கொண்ட நதியோ முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால் புது முகம் கிடைக்கும்
நட்சத்திரங்களை ஒரு நாரில் கட்டுவேன்
எந்த நேரமும் உன் கதவு தட்டுவேன்
ஏ காதல் தேவனே எனது இமையில் உனது விழிகள் மூடுவேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்...காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே...விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்...கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்...காதல் முகம் கண்டுகொண்டேன்

Kandukondain Kandukondain - Kandukondain Kandukondain

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - சுட்டும் விழிச்சுடர்தான்

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொல்லோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நாள் வயிரம்
நட்டநடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி

சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்
நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடி
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடி
வாலைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் சாத்திரம் ஏதுக்கடி
ஆத்திரம் கொண்டவர்க்கே கன்னமா சாத்திரம் உண்டோடி
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தம் ஒன்று

Kandukondain Kandukondain - Suttum Vizhi

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - ஸ்மையையையை

ஸ்மையையையை ஸ்மையையை மனதைத் திருடி விட்டாய்
ஸ்மையையையை மக்நெட் விழியாய் மனதைத் திருடி விட்டாய்

ஸ்மையையையை ஸ்மையையை ஊ ஊ ஊ ஊ ஊ (2)

ஸ்மையையையை மக்நெட் விழியாய் மனதைத் திருடி விட்டாய்
ஒரு செண்டிமேடேர் பூத்த புன்னகையில் ஜீவன் அளந்துவிட்டாய்
பதினாலில் பூவானேன் பதினேழில் தேனானேன் இந்த வாக்குமூலம் எதற்கு
புல்வெளியில் தாகம் naan பூஞ்சாரல் மேகம் நீ
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம் எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்
ஒரு தூறல் போடு இல்லை சாரல் போடு எந்தன் நாணம் நனையட்டுமே

ஸ்மையையையை ஸ்மையையை ஸ்மையையையையை
ஸ்மையையையை ஸ்மையையை ஊ ஊ ஊ ஊ ஊ

திறந்த வானம் திறந்த பூமி திறந்த வாழ்க்கை வா வா வா வாழ வா
ஒலித்த காதல் ஒலிப்பதில்லை உயிர்ப்பதில்லை வா வா வா வா
கண்ணிலே ஏ ஏ ஏ சொப்பனம் கரையுதே ஏ ஏ ஏ எவ்வனம்
ஏன் தாமதம் நிலாவில் பால் கொண்டு செய்த தோள் கண்டு நெருங்கி வா இன்று யையையையா

ஸ்மையையையை ஸ்மையையை ஸ்மையையை

நெருப்பைத் தின்றால் இனிக்க வேண்டும் அதற்குப் பேர்தான் கா காதலே
இறக்க சொன்னால் சிரிக்க வேண்டும் அதற்குப் பேர்தான் கா காதலே
கூந்தலின் ஹே ஹே ஹே கரையிலே குடித்தனம் ஹோ ஹோ ஹோ கொள்ளவா பூ வாங்கிவா
தூக்கம் கலைந்தாலும் கனவு கலையாத வாழ்க்கை வாழ்கின்றேன் ஏயேயேயே

சமையையாய் மக்நெட் விழியாய் மனதைத் திருடி விட்டாய்
ஒரு செண்டிமேடேர் பூத்த புன்னகையில் ஜீவன் அளந்துவிட்டாய்
பதினாலில் பூவானேன் பதினேழில் தேனானேன் இந்த வாக்குமூலம் எதற்கு
புல்வெளியில் தாகம் நான் பூஞ்சாரல் மேகம் நீ
என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம் எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்
ஒரு தூறல் போடு இல்லை சாரல் போடு எந்தன் நாணம் நனையட்டுமே

ஸ்மையையையை ஸ்மையையை ஸ்மையையையையை
ஸ்மையையையை ஸ்மையையை ஊ ஊ ஊ ஊ ஊ

Kandukondain Kandukondain - Smayiyai

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - கண்ணாமூச்சி ஏனடா

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா (2)
அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன் (2)
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை (2)
இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன் (2)
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா (2)
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆ
உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல்தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும் (2)
என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க
கலந்திட வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய் (2)
கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கணவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

Kandukondain Kandukondain - Kanamoochi

பூமகள் ஊர்வலம் - சின்ன வெண்ணிலவே என்

சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுக்கொள்   கட்டிக்கொள் 
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
ஜீன்ஸ்  மன்னவனே  என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
நிலாவே  நீங்கிடாதே
அழகு  மகள்  மேனியை  கண்டேன்
வாச  தாமரை  அங்கம்  அங்கம்
தாமரையே  தலையணை  ஆனால்
சாய்ந்து  கொள்ளுவேன்  நான்  கொஞ்சம்
உன்  பாதம்  பரவிய  பாதையில்  எல்லாம்
எந்தம்  ஆவியே  தங்கும்  தங்கும்

என்  மார்பை  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுகொள்  கட்டிகொள்
முத்தத்தின்  கலை  கற்றுகொள்

பள்ளம்  எங்கே  உள்ளது  என்று  வெள்ளம்  அறியாதா
இன்பம்  எங்கே  உள்ளது  என்று  கைகள்  அறியாதா
ஹையோ  இந்த  பெண்ணுக்கு  என்ன  ஆசை  கிடையாதா
ஆளிங்கனம்  செய்தும்போதே  அள்ளி  உடையாதா
நீ  எந்தன்  மேடை  அல்லவா
நான்  உந்தன்  ஆடை  அல்லவா
நெஞ்சோடு  மின்சாரம்  பாய்ந்து
கண்மூடி  சாய்ந்து
கை  சேரும்  நாள்  அல்லவா
நீயும்  நானும்  இன்று  அடி  ஒன்று
என்  தனிமையின்  பொருளே  வா

என்  மார்பை  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுகொள்


அன்பே  என்னை  தூண்டினால்  அன்றி  உன்னை  தொடமாட்டேன்
என்னுள்  ஒரு  திரி  பற்றினால்  போதும்  உன்னை  விடமாட்டேன்
உள்ளங்கையில்  உன்னை  எடுப்பேன்  மண்ணில்  விடமாட்டேன்
விண்ணில்  நிலா  விழுந்திடும்  போதும்  உன்னை  விடமாட்டேன்
தொட்டாலே  உறைந்து  போகிறேன்
முத்தத்தில்  கரைந்து  போகிறேன்
அன்பே  நான்  அம்மானை  பாட  பொன்னூஞ்சல்  ஆட
உன்  கூந்தல்  தருவாயா
உன்  உதடோடு  நானே  நிதம்  ஆடிட  மறுப்பாயா

என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுகொள்  கட்டிகொள்
முத்தத்தின்  கலை  கற்றுகொள்
ஜீன்ஸ்  மன்னவனே  என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுகொள்
நிலாவே  நீங்கிடாதே
அழகு  மகள்  மேனியை  கண்டேன்
வாச  தாமரை  அங்கம்  அங்கம்
தாமரையே  தலையணை  ஆனால்
சாய்ந்து  கொள்ளுவேன்  நான்  கொஞ்சம்
உன்  பாதம்  பரவிய  பாதையில்  எல்லாம்
எந்தம்  ஆவியே  தங்கும்  தங்கும்
என்  கன்னம்  தொட்டுக்கொள்  கட்டிக்கொள்
முத்தத்தின்  கலை  கற்றுக்கொள்
சின்ன  வெண்ணிலவே  என்  மார்பை  தொட்டுகொள்  கட்டிகொள்
முத்தத்தின்  கலை  கற்றுகொள்

Poomagal Oorvalam - Chinna Vennilave En

Followers