Pages

Search This Blog

Friday, October 25, 2013

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - சுட்டும் விழிச்சுடர்தான்

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொல்லோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நாள் வயிரம்
நட்டநடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி

சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்
நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடி
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடி
வாலைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் சாத்திரம் ஏதுக்கடி
ஆத்திரம் கொண்டவர்க்கே கன்னமா சாத்திரம் உண்டோடி
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தம் ஒன்று

Kandukondain Kandukondain - Suttum Vizhi

Followers