Pages

Search This Blog

Tuesday, October 22, 2013

நீ தானே என் பொன்வசந்தம் - சற்று முன்பு பார்த்த

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாய ? ஒ.. ஹோ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா ?
தேங்கி போன ஒரு நதீன இன்று நானடா ..!!
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தனந்தனி காட்டில் இன்பம் காண வாடா ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

சேர்த்து போன நம் சாலைகள் மீண்டும் தோணுமா ?
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா ?
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா ?
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா ?
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா ?
தொட்டோ தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதையும் சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாய ? ஒ.. ஹோ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

Neethaane En Ponvasantham - Sattru Munbu

நீ தானே என் பொன்வசந்தம் - பெண்கள் என்றால்

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா
பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் துங்கிடும் பனி துளி
காலை வெயில் வந்தாலே
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..

என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில்
தாவுதடி கூத்தாடி

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா

இதற்குத்தான ஆசை வைத்தாய்
இதயம் கேட்குதே.....
இவளுக்குகாக துடிக்க வேண்டாம்
என்று வெறுக்குதே.....
மதி கெட்ட என்னிடம்
மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த
பெண் இவள் என்றது
தீயை போன்ற பெண் இவள்
என்று தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பு செய்த ஆயுதங்கள்
பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா

பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் துங்கிடும் பனி துளி
காலை வெயில் வந்தாலே
ஓடி போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே.. ஒ.. ஒ..
கண்ணீர் வரும் பின்னாலே.. ஒ.. ஒ..

என்ன சொல்லி என்ன பெண்ணே
நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில்
தாவுதடி கூத்தாடி

Neethaane En Ponvasantham - Pengal Yendral

நீ தானே என் பொன்வசந்தம் - பிடிக்கல்ல மாமு

பிடிக்கல்ல மாமு படிக்கிர காலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
(பிடிக்கல்ல மாமு)

அடுத்தது booksu வளருது டீனோஜ்
சீக்கிரம் நமக்கு வந்திடும் ஓல்டேஜ்
சிங்கக் குட்டிய புடிசு ஒரு கூண்டில் அடைப்பது பாவம்
வந்த வரைக்கும் நீ booksa
அட எடைக்கு போடு லாபம்
நா டென்ஷ ன் ஆகிட்டேன் பக்கேட்டு பக்கேட்டு
டூருக்கு எடுங்கடா டிக்கெட்டு டிக்கெட்டு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
அடுத்தது booksu வளருது டீனோஜ் ஹேய்ய

என் வார்த்தை நீ கேட்டு
வெட்டு வெட்டு கல் வெட்டு
யே யே யே யே
யே யே யே யே
எங்கயும் சில் ஒட்டு
இல்லையினா கெட் அவுட்டு
யே யே யே யே
யே யே யே யே
girls நம்ம க்ஸ்சில் இல்ல
என்ற போதும் தப்பு இல்ல
சிங்கலானா பாய்ஸ்க்கு தான்
workoutஆகும் மாப்பிள்ள
நா எறிஞ்சு பாடலாம் விக்கெட்டு விக்கெட்டு
எறங்கி கலக்குடா பக்கெட்டு பக்கெட்டு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பிடிக்கல்ல மாமு படிக்கிர கோலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நொலேஜ்
அடுத்தது booksu வளருது டீனோஜ் ஹேய்ய

உடம்பு சிறகு முளைக்கட்டும்
நரம்பில் குரும்பு இருக்கட்டும்
அடிச்சு புடிச்சு அடிச்சு அடிச்சு
அடிக்கும் ஆட்டம் ஆதிவாசி போல இருக்கட்டும்

அட வீதி பாத்தாதே
இந்த ஊரு பாத்தாதே
நம்ம எறங்கி கலக்கத்தான்
இந்த உலகம் போதாதே

கோலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே

மச்சி கடலு மீனுக்கு
குடத்தில் தண்ணி பத்தாதே
சின்ன பசங்க மனசுக்கு
வெறும் கனவு பத்தாதே
இந்த lifea நீயும்
அனுபவிக்க வயசுபத்தாதே
(அட வீதி)

கோலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே

தடக்கு தடக்கு ரயில போல
வருஷம் ஓரம்டா நீ
படுத்து படுத்து எழுந்து பாரு
நிமிசம் ஓடும்டா

தடக்கு தடக்கு
தடக்கு தடக்கு
தடக்கு தடக்கு

எடக்கு மோடக்கு இல்லயினா இளமை எதுகுடா
நீ குருக்க நெடுக்க மடக்கலனா ஓடம்பு எதுகுடா
படிக்கிர பாடம் போதாதுடா
நெருப்புல எரங்கி படிடா
கனவில எதயும் ஓட்டாதடா
ஜெயிக்கம் எடத்த புடிடா
நம்ம தெசயில பாத்து
சுத்தி அடிக்குது காத்து
ஹேய் உளுக்கி உளுக்கி முறுக்கி முறுக்கி
மேளம் அடிங்க
(அட வீதி...)

காலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நா பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே
(காலேஜ்)

Neethaane En Ponvasantham - Pudikale Maamu

கஜினி - சுட்டும் விழிச்சுடரே

சுட்டும் விழிச்சுடரே சுட்டும் விழிச்சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டைப்பையில் உன் படம்
தொட்டுத்தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொள்ளுதே

உன்விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன் உன்னாலே
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
(சுட்டும் விழிச்சுடரே)

மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லையென்றேன்
தூக்கத்தில் உளறல் கொண்டேன்
தூரலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவைக் கொண்டேன்

கருப்புவெள்ளை பூக்கள் உண்டா
உன்கண்ணில் நான் கண்டேன்
உன்கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
உன்கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
(சுட்டும் விழிச்சுடரே)

மரங்கொத்திப் பறவை ஒன்று
மனங்கொத்திப் போனதின்று
உடல்முதல் உயிர்வரை தந்தேன்
தீயின்றித் திரியுமின்றி
மேகங்கள் எரியும் என்று
இன்றுதானே நானும் கண்டுகொண்டேன்

மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும்போது மழை அழகு
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு
(சுட்டும் விழிச்சுடரே)

Ghajini - Suttum Vizhi

கஜினி - ஒரு மாலை

ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம்
சற்றுத் தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே

அவள் அள்ளிவிட்ட பொய்கள்
நடுநடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு
கேட்டுக்கொண்டே நின்றேன்
அவள் நின்றுபேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சர்க்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே
கண்டேனே கண்டேனே

ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம்
சற்றுத் தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே

பார்த்துப் பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவனை மாற்றிவிட்டாய்
சாலைமுனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டிவிட்டாய்
கூச்சம் கொண்ட தென்றலா
இவள் ஆயுள்நீண்ட மின்னலா
உனக்கேற்ற ஆணாக
எனை மாற்றிக் கொண்டேனே

பேசும் அழகினைக் கேட்டு ரசித்திட
பகல்நேரம் மொத்தமாய்க் கழித்தேனே
தூங்கும் அழகினைப் பார்த்து ரசித்திட
இரவெல்லாம் கண்விழித்துக் கிடப்பேனே
பனியில் சென்றால் உன்முகம்
என்மேலே நீராய் இறங்கும்
ஓ தலைசாய்த்துப் பார்த்தாளே
தடுமாறிப் போனேனே

Ghajini - Oru Maalai

7G ரெயின்போ காலனி - நினைத்து நினைத்து பார்த்தேன்

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்துபோன மலரின் மௌனமா
தூதுபேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்துபோன வளையல் பேசுமா
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல்கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே
(நினைத்து நினைத்து)

பேசிப்போன வார்தைகள் எல்லாம்
காலந்தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா
பார்த்துப்போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா
தொடர்ந்துவந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்துபோகும்
திருட்டுப்போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்

7G Rainbow Colony - Ninaithu Ninaithu Parthen

7G ரெயின்போ காலனி - கண்பேசும் வார்த்தைகள்

கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை கடல் கைகூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்தபிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்டபிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை
ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
(கண்பேசும் வார்த்தைகள்)

காட்டிலே காயும் நிலவு
கண்டுகொள்ள யாரும் இல்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்குச் சொந்தமில்லை
மின்னலின் ஒளியை பிடிக்க
மின்மினிப்பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்குச் சொந்தமடி
வேதனைகள் எனக்குச் சொந்தமடி
அலை கடலைக் கடந்தபின்னே
நுரைகள்மட்டும் கரைக்கே சொந்தமடி
(கண்பேசும் வார்த்தைகள்)

உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒருமுறை வாழ்ந்திடத் திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனித்துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
அட புடவைகட்டி பெண்ணானது
ஏ புயல் அடித்தால் மலை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்துவிடும்
சிரிப்புவரும் அழுகைவரும்
காதலில் இரண்டுமே கலந்துவரும்
ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
(கண்பேசும் வார்த்தைகள்)

7G Rainbow Colony - Kan Pesum Varthaigal

Followers