Pages

Search This Blog

Tuesday, October 22, 2013

கஜினி - சுட்டும் விழிச்சுடரே

சுட்டும் விழிச்சுடரே சுட்டும் விழிச்சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டைப்பையில் உன் படம்
தொட்டுத்தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொள்ளுதே

உன்விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழித்து சொப்பனம் கண்டேன் உன்னாலே
கண்விழித்து சொப்பனம் கண்டேன்
(சுட்டும் விழிச்சுடரே)

மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லையென்றேன்
தூக்கத்தில் உளறல் கொண்டேன்
தூரலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவைக் கொண்டேன்

கருப்புவெள்ளை பூக்கள் உண்டா
உன்கண்ணில் நான் கண்டேன்
உன்கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
உன்கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்
(சுட்டும் விழிச்சுடரே)

மரங்கொத்திப் பறவை ஒன்று
மனங்கொத்திப் போனதின்று
உடல்முதல் உயிர்வரை தந்தேன்
தீயின்றித் திரியுமின்றி
மேகங்கள் எரியும் என்று
இன்றுதானே நானும் கண்டுகொண்டேன்

மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும்போது மழை அழகு
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு
(சுட்டும் விழிச்சுடரே)

Ghajini - Suttum Vizhi

Followers