Pages

Search This Blog

Tuesday, October 22, 2013

கஜினி - ஒரு மாலை

ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம்
சற்றுத் தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே

அவள் அள்ளிவிட்ட பொய்கள்
நடுநடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு
கேட்டுக்கொண்டே நின்றேன்
அவள் நின்றுபேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சர்க்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே
கண்டேனே கண்டேனே

ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம்
சற்றுத் தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே

பார்த்துப் பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவனை மாற்றிவிட்டாய்
சாலைமுனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டிவிட்டாய்
கூச்சம் கொண்ட தென்றலா
இவள் ஆயுள்நீண்ட மின்னலா
உனக்கேற்ற ஆணாக
எனை மாற்றிக் கொண்டேனே

பேசும் அழகினைக் கேட்டு ரசித்திட
பகல்நேரம் மொத்தமாய்க் கழித்தேனே
தூங்கும் அழகினைப் பார்த்து ரசித்திட
இரவெல்லாம் கண்விழித்துக் கிடப்பேனே
பனியில் சென்றால் உன்முகம்
என்மேலே நீராய் இறங்கும்
ஓ தலைசாய்த்துப் பார்த்தாளே
தடுமாறிப் போனேனே

Ghajini - Oru Maalai

Followers