Pages

Search This Blog

Tuesday, October 1, 2013

பரதேசி - ஓர் மிருகம்

யாத்தே கால கூத்தே வாழ்வே பாழுதாச்சே
ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே

ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை, தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை

யாத்தே கால கூத்தே வாழ்வே பாழுதாச்சே

தாழ் போன வீடு, கால் போன ஆடு
ஒன்னோட ஒன்னா துணையானதேன்
தாய் போல நெஞ்சு, தாலாத அன்பு
மழை தண்ணியோடு மாசில்லையே

வழி சொல்லவே இல்லையே வாய்மொழி
கண்ணீரு தான் ஏழையின் தான்மொழி
எங்கே தவிக்கும் உன் பிள்ளையே
இங்கே உறவு என் பிள்ளையே

கை கொண்ட நெல்லு உமியாகும் போது
கத்தலை சோறும் சோறாகுமே
உண்டான சொந்தம் உடைகின்ற போது
இல்லாத சொந்தம் உறவாகுமே

ஒரு சீவனோ உறவிலே சேருதே
இரு சீவனோ ஒத்தையில் வாடுதே
கண்ணீர் துடைக்க ஆளில்லையே
காலம் நடக்கும் காலில்லையே
(யாத்தே கால)

ஓர் மிருகம் ஓர் மிருகம்
தன்னை, தன்னடிமை செய்வதும் இல்லை
ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால்
அது மனிதன் செய்யும் வேலை
 
Paradesi - Or Mirugam

பரதேசி - தன்னை தானே

தன்னை தானே நமக்காக தந்தானே
மண்ணை காக்க ஒளியாக வந்தானே

தன்னை தானே நமக்காக தந்தானே
மண்ணை காக்க ஒளியாக வந்தானே
மாட்டு தொலுவ கூட்டில் பிறந்த
தேவா தூதனாம்
ஆட்டு மந்தையை ஓடி செல்லும்
நாள் ஆயனாம்

காட்டில் வழியில் பாதை காட்டும்
கண்ணின் மைந்தனே
பாட்டு பாடி ஆட்டம் ஆடி
ஆர்பரிப்போமே

தன்னை தானே தந்தானை துதிப்போமே
மண்ணை காக்க வந்தானை ஜெபிப்போமே
சீரி பாயும் பேரலையை பொங்கி எழுந்து நீ
மாற்றம் தந்த மைந்தருக்கு சொல்லு கோத்திரம்
ஊற்றேடுத்த ஆற்று மாதின் சாட்சியாக நீ
உள்ளிருந்து உரக்க சொல்லு உயிரின் கோத்திரம்

அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா...

நாதியற்ற நாதியர்க்கெல்லாம்
சொல்லி கொல்ல சொந்தம் ஒரே தேவன்
நீதியற்ற பாவிகளின் வாழ்வை
தீர்க்க வந்த பரமபிதா யேசு

ஆமேன் ஆமேன் ஆமேன் சொல்வோம்
 
Paradesi - Thannai Thaane

பரதேசி - செந்நீர் தானா

செந்நீர் தானா செந்நீர் தானா 
செந்தேனீரில் சென் பாதை கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா

ஆந்தைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெரும் தோலா போச்சே
அது கண்காணி செருப்புக்கு தோதா போச்சே
(செந்நீர் தானா)

யே ஊசி மழையே ஊசி மழையே
எங்க உடலோடு உயிர் சூடு அத்து போச்சே
யே ஊதக்காத்தே ஊதக்காத்தே
எங்க பூர்வீக போர்வையும் பொத்துப் போச்சே

தேகத்தில் உள்ள எழும்புக்கு
ஒரு வெரி நாயும் தெரு நாயும் மோதுதே
வானத்தில் வழும் நெஞ்சமோ
தன்மானத்தை தாராமல் ஓடுதே

உயிர் காப்பாதும் தேய்வங்கள் கண் மூடுதே ஓ...

ஊரெல்லாம் விட்டு நம் இளமை கெட்டு
நாம் வெளியானோம் பூனைக்கு வாக்கப்பட்டு
ஒரு மானம் கெட்டு சிரு சோறு திம்போம்
பேய் மழையோடும் பனியோடும் தூக்கங்கெட்டு

பாம்புக்கு பசி வந்ததே
ஒரு சிறு கோழி என்னாகும் கூட்டிலே
யானையின் பெருங்காலிலே
சிறு காலான்கள் என்னாகும் காட்டிலே

இவள் உயிர் காத்த ஒரு சொத்தும் பரிபோனதே...
(செந்நீர் தானா)

ஆந்தைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெரும் தோலா போச்சே
அது கண்கானி செருப்புக்கு தோதா போச்சே
 
Paradesi - Senneer Thaana

பரதேசி - செங்காடே சிறுகரடே

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா
சுடு சுடு காடு வீட்டு போகிற போணங்க போல
சன சன சனங்களேல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்க குருவி இரை தேடுதே
பசியோட மனுச கூட்டம் வெளியேருதே

போட்ட கல்லியும் முள்ளும் தெச்சதும்
பெத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துடோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங்கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா

வேளையாத காட்ட விட்டு விளையான்ட விட்ட விட்டு
வெளந்திய வெயிலில் ஜனம் வெளியேருதே ஓ...
வாழ்வேடு கெண்டுவிடுமே சாவேடு கொண்டுவிடுமே
போகும் தெசை சொல்லாமலே வழி நீழுதே
உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே ஓ...
வயிரோடு வாழ்வது தானே பெரும் துன்பமே
பெல்லாத விதியின் மழைக்க போரோமே பஞ்சம் பொழைக்க
யார் மீள்வதோ யார் வாழ்வதோ யார் கண்டது

பாலம் பாலம் வெடிச்சு கிடக்குதே பாடு பட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் புதைக்க பாக்குதே கேடு கெட்டவன் சாமி
புலியங்கொட்டய அவிச்சு தின்னுதான் பொழைச்சு கிடக்குது மேனி
பஞ்சம் பொழைக்கவும் பசிய தேக்கவும் பச்ச பூமிய காமி

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா

காலோடு சரல கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க
ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே
கருவேலங் காடு கடந்து கல்லுதும் மேடும் கடந்து
ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே
கண்கானி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ...
நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே
உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக
உயிர் மீழுமோ உடல் மீழுமோ யார் கண்டது
(போட்ட கல்லியும்)

ஹோ... செங்காடே சிறுகரடே போய் வரவா
ஹோ... காடுகளே கல்லிகளே போய் வரவா
சுடு சுடு காடு வீட்டு போகிற போணங்க போல
சன சன சனங்களேல்லாம் போகுது பாத மேல
உள்ளூரில் காக்க குருவி இரை தேடுதே
பசியோட மனுச கூட்டம் வெளியேருதே
(போட்ட கல்லியும்)
 
Paradesi - Sengaade Sirukarade

பரதேசி - அவத்த பையா

அவத்த பையா செவத்த பையா அலிச்சாட்டியம் யேனடா
கவுசி மேலே ஆசபட்ட கரிச்சாங் குஞ்சு நானடா
செரட்யில் பேஞ்ச சிறுமழை போல
நெஞ்சு கூட்டுல நெரஞ்சிருக்க
கஞ்சியில் கரைஞ்ச உப்பு கல்லு போல
கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க, நம்ம பூமி வரண்டிருக்கு
உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்க நனைந்திருக்கு...

ஓஓஓ... அவத்த பொண்ணே செவத்த பொண்ணே
அலிச்சாட்டியம் யேனடி...

வெண்ணி தண்ணி காச்சவா, உன் மேலு காலு ஊத்தவா
காச்சு போன கையில, உன் காஞ்ச மூஞ்சி தேக்கவா

கொட்டான் குச்சியில் மேலு தேச்சி குளிக்க வையடி
யே... ஆக்குள் பக்கம் மக்கபோரு ஆகுதே
நீ தள்ளி நில்லடி, ஆராதடி தொடாதடி...

ஓஓஓ... அவத்த பையா செவத்த பையா
அலிச்சாட்டியம் யேனடா...

கூத்து பாக்க போகலாம் கூட வாட வாரியா
சொல்லு பேச்சு கேக்குறேன்
கொஞ்சம் நெல்லு சோறு தாரியா

எள்ளு போட்ட ஈசல் தாரன் உன்ன தருவியா
நான் முந்தி போட்ட மூடி வச்சு பூக்கள
நீ மோந்து பாத்தியா முத்தாடையா முட்டா பையா

அவத பொண்ணே செவத்த பொண்ணே
அலிச்சாட்டியம் யென்னடி இலுத்துவச்சு கழுத்தருக்க
இலிச்சவாயன் நானடி

கயித்த அருத்த கன்னுகுட்டி போல
சித்தன் போக்கில் நான் அலைசே
கருவா சிருக்கி சீலையில் இருக்கி
கட்டி போட்டு சிரிக்கிறியே
உன் சூழ்ச்சி பலிச்சிருச்சே
நெல்லு சோத்து பானைக்குள்ளே
பூனை விழுந்திருச்சே
 
Paradesi - Avatha Paiyya

Followers