Pages

Search This Blog

Tuesday, October 1, 2013

பரதேசி - செந்நீர் தானா

செந்நீர் தானா செந்நீர் தானா 
செந்தேனீரில் சென் பாதை கண்ணீர் தானா
நியாயம் தானா நியாயம் தானா
ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா

ஆந்தைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெரும் தோலா போச்சே
அது கண்காணி செருப்புக்கு தோதா போச்சே
(செந்நீர் தானா)

யே ஊசி மழையே ஊசி மழையே
எங்க உடலோடு உயிர் சூடு அத்து போச்சே
யே ஊதக்காத்தே ஊதக்காத்தே
எங்க பூர்வீக போர்வையும் பொத்துப் போச்சே

தேகத்தில் உள்ள எழும்புக்கு
ஒரு வெரி நாயும் தெரு நாயும் மோதுதே
வானத்தில் வழும் நெஞ்சமோ
தன்மானத்தை தாராமல் ஓடுதே

உயிர் காப்பாதும் தேய்வங்கள் கண் மூடுதே ஓ...

ஊரெல்லாம் விட்டு நம் இளமை கெட்டு
நாம் வெளியானோம் பூனைக்கு வாக்கப்பட்டு
ஒரு மானம் கெட்டு சிரு சோறு திம்போம்
பேய் மழையோடும் பனியோடும் தூக்கங்கெட்டு

பாம்புக்கு பசி வந்ததே
ஒரு சிறு கோழி என்னாகும் கூட்டிலே
யானையின் பெருங்காலிலே
சிறு காலான்கள் என்னாகும் காட்டிலே

இவள் உயிர் காத்த ஒரு சொத்தும் பரிபோனதே...
(செந்நீர் தானா)

ஆந்தைக்கு ஒரு பாதி ஆவி போச்சே
அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே
எங்க மேலு காலு வெரும் தோலா போச்சே
அது கண்கானி செருப்புக்கு தோதா போச்சே
 
Paradesi - Senneer Thaana

Followers