Pages

Search This Blog

Tuesday, October 1, 2013

பரதேசி - அவத்த பையா

அவத்த பையா செவத்த பையா அலிச்சாட்டியம் யேனடா
கவுசி மேலே ஆசபட்ட கரிச்சாங் குஞ்சு நானடா
செரட்யில் பேஞ்ச சிறுமழை போல
நெஞ்சு கூட்டுல நெரஞ்சிருக்க
கஞ்சியில் கரைஞ்ச உப்பு கல்லு போல
கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க, நம்ம பூமி வரண்டிருக்கு
உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்க நனைந்திருக்கு...

ஓஓஓ... அவத்த பொண்ணே செவத்த பொண்ணே
அலிச்சாட்டியம் யேனடி...

வெண்ணி தண்ணி காச்சவா, உன் மேலு காலு ஊத்தவா
காச்சு போன கையில, உன் காஞ்ச மூஞ்சி தேக்கவா

கொட்டான் குச்சியில் மேலு தேச்சி குளிக்க வையடி
யே... ஆக்குள் பக்கம் மக்கபோரு ஆகுதே
நீ தள்ளி நில்லடி, ஆராதடி தொடாதடி...

ஓஓஓ... அவத்த பையா செவத்த பையா
அலிச்சாட்டியம் யேனடா...

கூத்து பாக்க போகலாம் கூட வாட வாரியா
சொல்லு பேச்சு கேக்குறேன்
கொஞ்சம் நெல்லு சோறு தாரியா

எள்ளு போட்ட ஈசல் தாரன் உன்ன தருவியா
நான் முந்தி போட்ட மூடி வச்சு பூக்கள
நீ மோந்து பாத்தியா முத்தாடையா முட்டா பையா

அவத பொண்ணே செவத்த பொண்ணே
அலிச்சாட்டியம் யென்னடி இலுத்துவச்சு கழுத்தருக்க
இலிச்சவாயன் நானடி

கயித்த அருத்த கன்னுகுட்டி போல
சித்தன் போக்கில் நான் அலைசே
கருவா சிருக்கி சீலையில் இருக்கி
கட்டி போட்டு சிரிக்கிறியே
உன் சூழ்ச்சி பலிச்சிருச்சே
நெல்லு சோத்து பானைக்குள்ளே
பூனை விழுந்திருச்சே
 
Paradesi - Avatha Paiyya

Followers