Pages

Search This Blog

Wednesday, December 18, 2019

கண்ணே கலைமானே - நீண்ட மலரே நீண்ட மலரே

நீண்ட மலரே நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
வேர் இல்லாத ஆசை மீறுதே

கொள்ளை அழகே கொள்ளை அழகே
கொள்ளை கொள்ள தோனுதே
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே

கண்ணே கலைமானே என்று
கவிதை நெஞ்சு கதருதடி
பெண்ணே உந்தன் பேரை தவிர
எல்லா மொழியும் அழியுதடி

சுற்றி கொள்ள வேண்டும் உன்னை
சுற்றுசூழல் மறந்தபடி
சொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி

நீண்ட மலரே நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
வேர் இல்லாத ஆசை மீறுதே

கொள்ளை அழகே கொள்ளை அழகே
கொள்ளை கொள்ள தோணுதே
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே

உன்னை எண்ணி
சாலை போனால்
வீடு கடந்தே போகின்றேன்
ஏறும் ஏறும் என்றே
எங்கள் தப்பை எண்ணினேன்


கிழக்கு எங்கே மேற்கு எங்கே
மறந்து போச்சே உன்னாலே
நீ இருக்கும் திசையெல்லாமே
கிழக்கு என்றே காணுவேன்

என் வேர்களில் நீராகிறாய்
என் பூக்களில் தேன் ஆகிறாய்
என்னை இன்னும் என்ன செய்ய போகிறாய்

இனிமையாக துன்பம் செய்கிறதே
உன் பார்வைகள்
என்னை கொன்று இன்பம் செய்கிறதே
குன்று போலே விழுந்து நிமிர்கின்றேன்
உன்னை பார்த்ததும்
குன்றின் மணியாய் குன்றி போகின்றேன்

நீண்ட மலரே நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
வேர் இல்லாத ஆசை மீறுதே

கொள்ளை அழகே கொள்ளை அழகே
கொள்ளை கொள்ள தோனுதே
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே



Kanne Kalaimaane - Neenda Malarae

Followers