Pages

Search This Blog

Friday, April 6, 2018

காதல் கோட்டை - வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!
வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!

கண்ணு அழகுப் பெண்ணு காதலிக்க ஏத்தபொண்ணு
சென்ரை ரயிலுக்குள்ளே சிக்கிக்கிட்டாள் ஊட்டி பன்னு!

தடக் தடக்... டொடக் டொடக் ...

உன்னை நானும் பாத்த நேரம் ஆசையோட பேச வேணும்!
என்ன தேவை சின்னப் பொன்னே கேளம்மா
சிங்கப்பூரு சென்ரு சேலை சேர்த்துப்பட்டு அண்ணா சாலை
ரெண்டு வீடு வாங்கித் தாரேன் போதுமா?

ஊர் பார்க்கவே மேளம் கொட்டி பூமேடையில் தாலி கட்டி
நாம் வாழ்ந்திடத் தேவையில்லை ஜாலியா
நீ பார்க்கிற பார்வை போதும் நீ பேசுற வார்த்தை போதும்
நான் கேட்கும் நூறு முத்தம் தாறியா

உன் நினைப்பு மயக்குதடி, பட பட படவென்று
என் மனசு துடிக்குதடி!
கண்ணு ரண்டும் அலையுதடி கட கட கடவென
கட்டி என்னை இழுக்குதடி ... ஓ... ஓ

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!

அச்சம் மடம் நாணம் விட்டுப் போனதுதான் நாகரிகம்
எட்டுமுழ சேலை இனி வேணுமா? .. ஓ
கத்தரிக்காய் கூட்டு வைக்க புத்தகத்தைப் பாக்குறது
பாசன் ஆகிப் போச்சு இப்ப பாரம்மா!

பேஸ் கட்டுல பெயர் அன்ட் லவ்லி
ஜாக்கட்லை லோக்கல் ரெய்ல்லிங்
குளோசப்லை லோவர் றிப்லை ஏனம்மா?
லாக்கெற்றுல லாரா சாமி நோட்புக்ல சச்சின் ஜாக்சன்
கெயர் கட்டுக்கு பியூட்டி பார்லர் தானம்மா

உன் நினைப்பு மயக்குதடி, பட பட படவென
என் மனசு துடிக்குதடி
கண்ணு ரண்டும் அலையுதடி.. கட கட கடவெனக்
கட்டி என்னை இழுக்குதடி ... ஓ ...ஓ

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா



Kaadhal Kottai - Vellarikka Pinchu Vellarikka

காதல் கோட்டை - மொட்டு மொட்டு மலராத மொட்டு

மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஹோய்...

தமிழ் தரும் சுவை என உன் வாய் மொழி கேட்டேன்
மதன் தரும் சுகம் என உன் பார்வையை பார்த்தேன்
உந்தன் கையில் பெண்ணாக வேண்டும்
முன்னும் பின்னும் பண்பாட வேண்டும்
ஒன்றும் ஒன்றும் மூன்றாக வேண்டும்
என்றும் நீயாய் நான் ஆக வேண்டும்
இலக்கணம் எனதுடலே வா நீ வா
இலக்கியம் உனதுருவே தா நீ தா
தேவா.......

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

எனை தொடு வரம் கொடு உயிர் வாழ்ந்திட கேட்டேன்
மலர் உடல் மணம் பெற தினம் தேவனை பார்த்தேன்
பெண்மை என்றும் உன்னோடு தஞ்சம்
பெண்ணில் இன்பம் கொண்டாடும் மன்றம்
முத்தம் என்னும் வித்தாடு நித்தம்
நித்தம் நித்தம் பித்தான சித்தம்
இளமையின் ரகசியமே வா நீ வா
இது தினம் அவசியமே தா நீ தா
தேவா..

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு



Kaadhal Kottai - Mottu Mottu Malaratha Mottu

காதல் கோட்டை - சிவப்பு லோலாக்கு குலுங்குது

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும்
மலையோரம் மலையோரம் மனம் அலையுது கரையோரம்
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழர்கள் கவிபாடும்
எந்த ஊரு காத்து வந்து இந்த ஊரில் வீசுதடி
ஒட்டகத்தில் ஏறிக்கிட்டு ஊரைச் சுத்திப் பாக்குதடி
எட்டுக் கட்டை மெட்டு கட்டி என்னப் பாட்டு நான் பாட
சங்கதிகள் ஒண்ணு ரெண்டு இங்கே இங்கே நான் போட
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்
தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்
சுத்திச் சுத்தி என்னைச் சுத்தி சுத்துறாளே சின்னக்குட்டி
முத்து முத்து பல்லைக் காட்டி முத்தமிடும் வெல்லக் கட்டி
பொட்டழகு நெத்தியிலே இட்டுக்கொள்ள வைக்காதா
கட்டழகு ஊசி ஒன்று குத்திக் குத்தித் தைக்காதா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா
கண்ஜாடை கைஜாடை காட்டிக் காட்டிப் போறாம்மா
ராஜஸ்தானின் சின்னப் பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்புத் தேனு
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது



Kaadhal Kottai - Sivappu Lolakku Kulunguthu

காதல் கோட்டை - காலமெலாம் காதல் வாழ்க

காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி

(காலமெலாம்)

கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்
தூக்கம் கெட்டுப் பொகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல்
ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை
கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் ஒரு போதை
காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே

(காலமெலாம்)

ஜாதி மதம் பார்ப்பதில்லை சீர்வரிசை ஏதுமில்லை காதல்
ஆதி அந்தம் ஏதுமில்லை ஆதம் ஏவாள் தப்புமில்லை காதல்
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வழும்
ஜாதகங்கள் பார்ப்பதில்லையே காசு பணம் கேட்பதில்லையே

(காலமெல்லம்)



Kaadhal Kottai - Kalamellam Kadhal

காதல் கோட்டை - நலம் நலமறிய ஆவல்

நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?

நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்

தீண்ட வரும் காற்றினையே நீ அனுப்பு இங்கு வேர்க்கிறதே
வேண்டுமொரு சூரியனே நீ அனுப்பு குளிர் கேட்கிறதே
கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே
என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா?
இரவினில் கனவுகள் தினம் தொல்லையே
உறக்கமும் எனக்கில்லை கனவில்லையே

நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்

கோவிலிலே நான் தொழுதேன் கோலமயில் உனைச் சேர்ந்திடவே
கோடி முறை நான் தொழுதேன் காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே
உன் முகம் நான் பார்க்க கடிதமே தானோ
வார்த்தையில் தெரியாத வடிவமும் நானோ
நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே
நிஜமின்றி வேரில்லை என்னிடமே

நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
ஓ...நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?
நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா?
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்



Kaadhal Kottai - Nalam Nalamariya Aval 

கூலிக்காரன் - குத்து விளக்காக குல மகளாக

குத்து விளக்காக குல மகளாக 
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா
ஒளி சிந்த வந்த தேரே
என் உள்ளம்தனில் ஓடும் தேனே

குத்து விளக்காக குல மகளாக 
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்

பல வண்ணப்பூக்கள் பாடுது பாக்கள்
அது ஏன் தேன் சிந்துது அது நீ பூ என்குது
பூவில் ஊறும் வண்டு போதை ஒன்று கொண்டு
அது ஏன் திண்டாடுது போதைதான் பண்பாடுது
சோலைக்கொரு வசந்தம்போல் நீ வந்தாய்
காளைக்கென்று சொந்த என்று நீ ஆனாய்
நீ நேசம் தர அதில் நான் பாசம் பெற

குத்து விளக்காக குல மகளாக 
உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்

ரகசிய கனவு தந்த இந்த இரவு
ஏன் நமை வாட்டுது அது ஏன் சூடேற்றுது
பொட்டுவைத்த நிலவு புத்தம்புது உறவு
இன்று ஏன் தடுமாறுது சுகம்தான் பரிமாறுது
பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம் தான்
பைங்கிளி முத்தம்பெற கூச்சம் தான்
நானும் மெல்ல அள்ள நாணம் உன்னை கிள்ள

குத்து விளக்காக குல மகளாக 
உன் நெஞ்சின் ஓரம் எனை ஏற்ற நேரம்
என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா
உனக்கென பிறந்தேனே 
உன் தோளில் என்றும் தவழ்வேனே

குத்து விளக்காக குல மகளாக 
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்



Cooliekkaran - Kuthu Vilakkaga Kula Magalaga

அக்னி நட்சத்திரம் - நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது
உன்னோடுநான் ஓயாமல் தேனாற்றிலே நீராடத் நினைக்கையில்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்

பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம்
வன்னப்பாவை மோகனம் வாடிப்போன காரணம்
கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாகக் கொதித்திட

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே – அனுதினமும்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் – இசைத்திட
என்னைத்தேடி வரணும் வரணும்



Agni Natchathiram - Ninukori Varnam

அக்னி நட்சத்திரம் - வா வா அன்பே அன்பே

வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா..)

நீலம் கொண்ட கண்ணும்
மேகம் கொண்ட நெஞ்சும்
காலம்தோரும் என்னை சேறும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மனி
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது பூ வைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா..)

கண்ணன் வந்து கொஞ்சும்
கட்டில் இந்த நெஞ்சம்
காணல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும்
உந்தன் கையில் தஞ்சம்
கண்கள் தீரும் காதல் பேசும் ஓவியம்
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது எந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது எந்தன் தஞ்சமானது
உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்
(வா வா..)



Agni Natchathiram - Vaa Vaa Anbe Anbe

அக்னி நட்சத்திரம் - ரோஜப்பூ ஆடிவந்தது

ரோஜப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா
(ரோஜாப்பூ..)

நேற்று நீர் விட்டது
இன்று வேர் விட்டது
நெஞ்சில் அம்மாடியோ
நூறு பூ பூத்தது 
சின்னஞ்சிறு பருவம்
இன்னும் கோதிப்போ
சொல்லி சொல்லி பொழுதை
இன்னும் கழிப்பதோ
தொடு தொடு தொடாமல்
நிலாவின் மேனி நாளெல்லாம்
தனிந்தது
(ரோஜாப்பூ..)

நீயும் அச்சம் இடு
நூறு முத்தம் இடு
மீதம் மிச்சம் எடு
மேலும் சொல்லிக்கொடு
அந்தி பகல் இரவு
சிந்தை குளிர்ந்தது
அந்தப்புறா நினைவில்
சிந்து படிக்குது
இதோ இதோ உன்னாலே
விழாமல் மோகம் வாட்டுது
தாங்குமா
(ரோஜாப்பூ..)



Agni Natchathiram - Roja Poo Adivanthathu

அக்னி நட்சத்திரம் - ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா

நேற்று இல்லே நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டையில்லே கொடியுமில்லே
அப்பவும் நான் ராஜா

(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)


வரவும் செலவும் இரண்டும் இன்றி
வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு

நெஞ்சம் விளையாடுது நித்தம் இசைபாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம் தான்

நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்

(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)

இடையும் உடையும் இரண்டும் இன்றி
இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி
மானும் மீனும் உண்டு

உள்ளம் அலைபாயுது எண்ணம் அசைபோடுது
கண்கள் வலைவீசுது காதல் விலை பேசுது
விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம் தான்


நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்

(ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா)



Agni Natchathiram - Raaja Raajathi Rajan

அக்னி நட்சத்திரம் - ஒரு பூங்காவனம் புதுமணம்

ஒரு பூங்காவனம் புதுமணம்
அதில் ரோமாஞ்சனம் தினம்தினம்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)

நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்நடக்கும் தேவதை
என் கோவில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)

நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலைகொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

(ஒரு பூங்காவனம்...)



Agni Natchathiram - Oru Poongavanam

அக்னி நட்சத்திரம் - தூங்காத விழிகள் ரெண்டு

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

மாமர இலை மேலே…
ஆஆ ஆஆ ஆஆஆ ஆ ஆஆஆஆஆ ஆ
மாமர இலை மேலே மார்கழி பனி போலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனி போலே
பூமகள் மடிமீது நான் தூங்கவோ
ராத்திரி பகலாக ஒரு போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ

நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலையென்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கதையல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலையென்னவோ
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ

மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீயில்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று



Agni Natchathiram - Thoongatha Vizhigal Rendu

தென்றலே என்னைத்தொடு - தென்றல் வந்து என்னைத்தொடும்

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில்…சாயும்…போது

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

தேகம் எங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம்…ஊறும்…நேரம்

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரைத்தூவி ஓய்வெடு

தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்



Thendrale Ennai Thodu - Thendral Vandhu Ennai Thodum

ரெட்டை வால் குருவி - கண்ணன் வந்து பாடுகின்றான்

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்

கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ணப்பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்பக்கள்ளில் ஊறுதே
காதலென்னும் ஓ…ஓ…
காதலென்னும் கூட்டுக்குள்ளே
ஆசைக்குயில் கொஞ்சுதம்மா
இவள் வண்ணம் கூடி சின்னம் தேடி
மின்னும் தோளில் கன்னம் கூட
சந்தம் பாடி சொந்தம் தேடி
சொர்க்கங்கள் மலர்ந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்

வானத்தில் செல்லக்கண்ணன் பாடுவான்
கானத்தில் சின்னப்பெண்ணும் ஆடுவாள்
ஆயர்கள் மத்துச்சத்தம் போலவே
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே
மாலை நிலா ஓ…ஓ…
மாலை நிலா பூத்ததம்மா
மௌன மொழி சொல்லுதம்மா
ஒரு அந்திப்பூவில் சிந்தும் தேனில்
வண்டு பேசும் தென்றல் வீசும்
கண்ணன் பாட கண்கள் மூட
கன்னங்கள் சிவந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை பேசும் பூமேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்



Rettai Vaal Kuruvi - Kannan Vanthu Padukindran

தளபதி - காட்டுக்குயிலு மனசுக்குள்ள

ஆண்-1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண்-2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

ஆண்-1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண்-2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

ஆ & பெ குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய்...

ஆண்-1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண்-2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

***

ஆண்-1 : போடா எல்லாம் விட்டுத் தள்ளு
பழச எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு
எண்ணிக்கொள்ளடா....டோய்..

ஆண்-2 : பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்
சும்மா நில்லடா...டோய்..

ஆண்-1 : ஊதக் காற்று வீச உடம்புக்குள்ள கூச
குப்ப கூலம் பத்தவச்சி காயலாம் ஹோய்..

ஆண்-2 : தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்

ஆ1 & ஆ2 : அச்சி வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹோய்..

ஆண்-1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண்-2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

ஆ & பெ குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
ஆஆஹா..காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

***

ஆண்-1 : பந்தம் என்ன சொந்தம் என்ன
போனால் என்ன வந்தால் என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட
ஜென்மம் நானில்லை....ஹ.ஹா..

ஆண்-2 : பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லே..

ஆண்-1 : உள்ள மட்டும் நானே
உசிரைக் கூடத்தானே

ஆண்-2 : என் நண்பன் கேட்டால்
வாங்கிக்கன்னு சொல்லுவேன்

ஆண்-1 : என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு

ஆண்-2 : நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்

ஆ1 & ஆ2 : சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு
ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான்....ஹேய்..

ஆண்-1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண்-2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

ஆ & பெ குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய்...
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் (இசை)



Thalapathi - Kaattukuyillu Manasukulla

தளபதி - அடி ராக்கம்மா கையத் தட்டு

ஆண் : அடி ராக்கம்மா கையத் தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
அடி ராக்கோழி மேளம் கொட்டு

ஆண்குழு : சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

ஆண் : இந்த ராசாவின் நெஞ்சத் தொட்டு

ஆண்குழு : சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசாப்பூ மாலைக் கட்டு
அடி ராசாத்தி தோளில்யிட்டு தினம் ராவெல்லாம் தாளந்தட்டு

பெண்குழு : சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

ஆண் : ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது
இதை கட்டிப்போட ஒரு சூரன் ஏது

ஆ&பெ குழு : ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

ஆண் : அஹா...அடி ராக்கம்மா கையத் தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு

பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசாப்பூ மாலைக் கட்டு

***

ஆண் : தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு

பெண் : அட ஊருசனம் யாவும் ஒத்தமையாச் சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு

ஆண் : மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக
வக்கிர வாணம் அந்த வானையே தெக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப்பாடு

ஆண் : முத்தம்மா முத்தம் சிந்து

ஆண்குழு : ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

ஆண் : பனி முத்துப்போல் நித்தம் வந்து

ஆண்குழு : ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு

பெண்குழு : சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

பெண் : இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு

பெண்குழு : சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

ஆண் : அட பக்கம் நீ தான் ஒரு வைக்கபோரு
உனை கொஞ்சம் மேஞ்சா என்ன அக்க போரு

ஆ&பெ குழு : ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

ஆண் : ஏய்...ஏய் அடி ராக்கம்மா கையத் தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு

பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு

***

ஆண் : வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக இங்கே அங்கே ஓளி வௌளக்கேத்து

பெண் : அட தட்டிருட்டுப் போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் ஏழும் பூ பூத்து

ஆண் : நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்
கன்னம்மா கன்னம்த்தொட்டு சுகம் காட்டம்மா சின்னம் மெட்டு

பெண் : பூமால வெச்சிப்புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு

பெண்குழு : ம்...இமும்....இமும்...
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல் மேனியும் பால் வென்நீரும்
இனித்தமுடம் எடுத்த பொற்பாதமும்...பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே...ஏ...ஏ...
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே

ஆண் : அடி ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு

பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசாப்பூ மாலைக் கட்டு

ஆண் : அட உன்னப் போல இங்கு நானும் தாண்டி
அடி ஒன்னு சேர இது நேரம் தாண்டி

ஆ&பெ குழு: ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ

ஆண் : அடி ராக்கம்மா கையத் தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு

பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசாப்பூ மாலைக் கட்டு ம்...மும்...



Thalapathi - Adi Raakkama Kaiyathattu

மெல்லத்திறந்தது கதவு - தில் தில் தில் தில் மனதில்

தில் தில் தில் தில் மனதில்.. ஒரு தல் 
தல் தல் தல் காதல் லவ் லவ் லவ்..


தில் தில் தில் தில் மனதில் 
ஒரு தல் தல் தல் தல்காதல் 
ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்..
ஒரு தல் தல் தல் தல் காதல் 

ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்

ஆ.. தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்


வளர்ந்த நாள் முதல் கார்குழலும் 
அழைக்குதே உன்னைப் பூச்சூட

மயக்கமேனடி பூங்குயிலே
தவிக்கிறேனடி நான் கூட

விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்

கைகள் படாத இடந்தான் இப்போது
ஆசை விடாத சுகந்தான் அப்போது

ஏக்கம் ஏதோ கேட்கும்

ம்...ம் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆ ஆடல் பாடல் கூடல்

ஆ.. தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்


மழைக்கு ஏங்கிய மாந்தளிரே 
உனக்கு நான் சிறு தூறல்தான்

வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க
உனக்கு நான் மலைச்சாரல்தான்

அடுத்த கட்டம் நடப்பதெப்போ
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ

மாலையிடாமல் வசந்தம் வராது
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது

போதும் போதும் ஊடல்

ஆ... தில் தில் தில் தில் மனதில் 
ஒரு தல் தல் தல் தல் காதல்

ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்

ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்



Mella Thirandhathu Kadhavu - Dil Dil Dil Manadhil

மெல்லத்திறந்தது கதவு - ஊரு சனம் தூங்கிருச்சு

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே எம் மாமனே… எம் மாமனே…

ஒத்தையிலே அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே
காலம் நேரம் கூடலையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் கேளாதா
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்… இந்த நேரந்தான்…
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன மேலும் ஏங்க வச்சேன்

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே



Mella Thirandhathu Kadhavu - Ooru Sanam Thoongiruchu

மெல்லத்திறந்தது கதவு - சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை
சாதி சனம் எல்லாம் அழைச்சி கொட்டட்டும்
டும் டும் டும் டும் டும் டும் டும்

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா

வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா


பொண்ணோட ஜாதகம் எல்லாத்துக்கும் சாதகம்
தாலிய கட்டுற மாப்பிள்ளை ஊருக்கு ராஜா ஆவான்

அழகாக பாடுவான் அமர்க்களமா ஆடுவான்
மாப்பிள்ளை கேக்குற மாதிரி
தினமும் இவ தான் நடப்பா

நீ மாலை போட நாலு ஒன்னு பாக்க வேணாவா

ஜோசியர தான் கேட்கவேணாமா

அட பந்த காலு கிந்த காலு ஊன வேணாமா

சாதி சனத்தை காண வேணாமா

துளசி நல்லவதான் பொருப்பு உல்லவ தான்
பொருத்தம் நல்லா இருக்கு ஜோராக தான்

உன் பொண்ண வீட்டுக்கு அனுப்பு சோறாக்க தான்

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை
சாதி சனம் எல்லாம் அழைச்சி கொட்டட்டும்
டும் டும் டும் டும் டும் டும் டும்

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா

வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா


டேய் இது தான் கல்யாண மேடை
இது தான் பந்தல்
நிசமான கல்யாணத்துக்கு
ஒரு ஒத்திகை பாத்துடுவோமா

போய் பொண்ண கூட்டிட்டு வாங்களேண்டி
என்னாங்கடி பண்றீங்கடி இங்க மச மசனு
ஊர் கதை எல்லாம் பேசிக்கிட்டு ஹே
வாராயோ தோழி வாராயோ
மனப் பந்தல் காண வாராயோ

ஆனந்த என் கண்ணியே உன் கிட்ட ஒப்படைக்கிறேன்
அதுல எப்பொழுதும் ஆனந்த கண்ணீரு தான் பாக்கனும்

கெட்டி மேளம் கெட்டி மேளம் கெட்டி மேளம் 

நல்லா தான் நடந்தது
கல்யாணமும் முடிஞ்சது
பந்தியில் வைக்கிற போட்டத தின்னுட்டு தனியா விடுங்க

பொண்ணோட மாப்பிள்ளை பள்ளி அரை போகனும்
பாய விரிக்கனும் பால குடிக்கனும்
கொஞ்சம் பொருங்க

அட நானும் கூட ஏறிக்கிட்டு ஆட வேணாமா
கையில் எடுத்து கொஞ்ச வேணாமா
அவ மாருமேலே ஏறிக்கிட்டு ஆட வேணாமா
ஒன்னு ரெண்டு தான் போக வேண்டாமா

நினைக்கும் அத்தனையும் நடக்கும் நல்லபடி
எனக்கு எப்போதுமே நல்ல யோகம் தான்
இனிமே எல்லாருக்கும் நல்ல நேரம் தான்

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை

அத்தை மக மாப்பிள்ளை
ஆசை வெச்ச ஆம்பிள்ளை
சாதி சனம் எல்லாம் அழைச்சி கொட்டட்டும்
டும் டும் டும் டும் டும் டும் டும்

சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு
சுப்புரமணி தான் மாப்பிள்ளையா வர போறாண்டா
பஸ்ஸில் ஏறி வாராண்டா

வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா
வர போறாண்டா பஸ்ஸில் ஏறி வாராண்டா



Mella Thirandhathu Kadhavu - Sakkara Kattikku

மெல்லத்திறந்தது கதவு - குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும்

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…

மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா
மழ மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா
மழ மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் மெட்டெடுப்பேன்
உன்னை தான் கட்டி வைப்பேன்
சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா
உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளையா

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ… குக்கூ… குக்கூ..

கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்குத்தான் ராவானா வேகுதுதான்
மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ… குக்கூ… குக்கூ…



Mella Thirandhathu Kadhavu - Kuzhaloodum Kannanukku

மெல்லத்திறந்தது கதவு - தேடும் கண் பார்வை தவிக்க

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம்

வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா

கனிவாய் மலரே உயிர் வாடும் போது
ஊடலென்ன பாவம் அல்லவா

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ

காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே

பிரிந்தோம் இணைவோம்
இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ
தேடும் கண் பார்வை தவிக்க
துடிக்க



Mella Thirandhathu Kadhavu - Thedum Kan Paarvai

மெல்லத்திறந்தது கதவு - வா வெண்ணிலா உன்னைத்தானே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும்…திருமுகம் காணும்
வரம் தர வேண்டும்…எனக்கது போதும்
எனைச்சேர…ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆ ஆ
எனைச்சேர எதிர்பார்த்து முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும்…உடையென நானும்
இணை பிரியாமல்…துணை வர வேண்டும்
உனக்காக…ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆ ஆ
உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே



Mella Thirandhathu Kadhavu -Vaa Vennila Unnai Thane Vaanam

அடுத்தாத்து ஆல்பர்ட் - இதயமே நாளும் நாளும் காதல்

இதயமே நாளும் நாளும் காதல் பேச வா
உதயமே நீயும் கூட வாழ்த்துப்பாட வா
காதல் மனமே வாழ்க தினமே…அன்பின் ஊறவே
இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேச வா

வானம்பாடி போல நாங்கள் கானம்பாடி ஓடினோம்
வாசம் வீசும் பூவைப்போல காற்றில் ஆடிப்பாடினோம்
சாதி பேயை ஓட்டுவோம் நீதி நாட்டுவோம்
சாமி வந்து தோன்றினும் காதல் பேசுவோம்
மனதிலே உறுதியாய் உறுதியே கொள்கையாய்
வாழ்ந்து காட்டுவோம்…அன்பின் ஊறவே
இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேச வா

வானில் தாவி நீந்துவோம் தீயை கையில் ஏந்துவோம்
காற்று வீசும் நாள்வரை ஜோடியாக வாழுவோம்
நீரும் கூட பாடியே மாலை போடுதே
பூமி தேவி வாழ்த்தியே கீதம் பாடுதே
தடுக்கவே முடியுமா பிரிக்கவே முடியுமா
சேர்ந்து வாழுவோம்…அன்பின் ஊறவே
இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேச வா
உதயமே நீயும் கூட வாழ்த்துப்பாட வா
காதல் மனமே வாழ்க தினமே…அன்பின் ஊறவே
இன்றும் நமதே என்றும் நமதே
இதயமே நாளும் நாளும் காதல் பேச வா



Aduthathu Albert -  Idhayame Naalum Naalum

இன்று நீ நாளை நான் - பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்



Indru Nee Nalai Naan - Pon Vaanam Panneer Thoovuthu 

Followers