அன்பான தாயை விட்டு
எங்கே நீ போனாலும்
நீங்காமல் உன்னைச் சுற்றும்
எண்ணங்கள் எந்நாளும்
ஐயா உன்கால்கள் பட்ட
பூமித்தாயின் மடி
எங்கேயும் ஏதும் இல்லை
ஈடு சொல்லும் படி
காவேரி அலைகள் வந்து
கரையில் உன்னைத் தேடிடும்
காணாமல் வருத்தப் பட்டுத்
தலை குனிந்து ஓடிடும்
ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும்
வேரு விட்ட இடம்
இதை விட்டால் உன்னை வாழ வைப்பது
வேறு எந்த இடம்
தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம்
பறந்து போகுதடி
தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை
மறந்து போகுதடி
இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு
கோலமிட்டதடி
இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும்
காலம் விட்ட வழி
Mahanadhi - Anbana Thayai