Pages

Search This Blog

Monday, January 2, 2017

பார்த்திபன் கனவு - என்ன தவம் செய்தனை யசோதா

என்ன தவம் செய்தனை யசோதா?
என்ன தவம் செய்தனை யசோதா?
எங்கும் நிறை பரப்பிரம்மம், அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா?

ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
யாவும் இசை ஆகுமடா கண்ணா!
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
யாவும் இசை ஆகுமடா கண்ணா!
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
யாவும் இசை ஆகுமடா கண்ணா!
கண்ணா! கண்ணா! கண்ணா!

செல்ஃபோன்
இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது,
தொலைவிலும் வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே.

சிகரெட்
விரல்களின் இடையே ஒரு விரல் போல,
சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல்.

ஓகே… அ… ஆ… வெட்கம்
இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான்.

மீசை
இது எனக்கு மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தைதான்.
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!

திருக்குறள்
இருவரிக் கவிதை ஒரு பொருள் தருமே,
இருவரும் இது போல இருந்தால் சுகம்.

நிலா
இரவினில் குளிக்கும் தேவதை இவளோ,
வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல்.

சரி, கண்ணாடி
இதில் என்னைப் பார்க்கிறேன், அது உன்னைக் காட்டுதே!

ம்… காதல்
கரி நிச ரிக ரிக ரிக ம்ம் ம்ம் ம்ம்
ம்…
நம் நான்-கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவடா!

வாவ், பியூட்டிஃபுல்…
ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!

ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
யாவும் இசை ஆகுமடா கண்ணா!

என்ன தவம் செய்தனை யசோதா?
எங்கும் நிறை பரப்பிரம்மம், அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை?
என்ன தவம் செய்தனை?
என்ன தவம் செய்தனை, யசோதா?

Parthiban Kanavu - Aalanguyil Koovum Rayyil

Followers