முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெக்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே
முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
—
கொலுசு தான் மௌனமாகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவு மூடுமா
மவுசு தான் குறையுமா
நேசபட்டு வந்த பாச கோடிக்கு
காசி பட்டு தந்த ராசவே
வாக்கபட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசவே
தாழம் பூவில வீசும் காத்தில
பாசம் தேடி மாமா வா
—
முத்து மணி மாலை
என்னை தொட்டு தாலட்ட
வெக்கத்தில சேலை
கொஞ்சம் விட்டுவிட்டு போராட
—
காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே
நெத்தி சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டு வெச்சதாரு நாந்தானே
அத்தி மரபூவும் அச்சபடுமா
பக்கதுணையாரு நீதானே
ஆசை பேச்சுல பாதி மூச்சிலே
லேச தேகம் சூடேர
—
முத்து மணி மாலை
என்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமரும் நீ தானே
இது நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தாஏ
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே
Chinna Gounder - Muthumani Malai