Pages

Search This Blog

Friday, January 10, 2014

தென்றலே என்னைத் தொடு - கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித்து தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்து இருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப்பகல் கண்ணிமையில் உன்னருகே

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
பொன்னழகே பூவழகே உன்னருகே

நீளம் பூத்த ஜாலப் பார்வை மானா மீனா
நான்கு கான்கள் பாடும் பாடல் நீயா நானா
கள்ளிருக்கும் பூவிது பூவிது
கையணைக்கும் நாள் இது நாள் இது ..
பொன்னென்ன மேனியும் மின்னிட மின்னிட..
மெல்லிய நூல் இடை பின்னிட பின்னிட
வாடையில் வாடிய ஆடையில் மூடிய
தேன் நான் ..

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்து இருந்தேன்
என்னுடல் வேர்த்து இருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மங்கையின் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
பொன்னழகே பூவழகே என்னருகே

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்

ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
பெண் மயங்கும் நீ தொட நீ தொட
கண் மயங்கும் நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம் பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும் தங்கிட தங்கிட
தோள்களில் சிந்திட தோகையை ஏந்திட
யார் ... ம்ம்ம்ம்

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப்பகல் கண்ணிமையில் உன்னருகே

கணணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

Thendrale Ennai Thodu - Kannane Nee Vara

Followers