Pages

Search This Blog

Friday, January 10, 2014

தென்றலே என்னைத் தொடு - புதிய பூவிது பூத்தது

பல்லவி:

புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ….ஏன்..

புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது

சரணம் ௧

ஜவ்வாது பெண்ணானது
இரண்டு செம்மீன்கள்  கண்ணானது
பன்னீரில் ஒண்ணானது
பாச பந்தங்கள் உண்டானது
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ
தள்ளாடும் தேகஙளே
கோவில் தெப்பங்கள் போலாடுமோ
சத்தமின்றியே முத்தமிட்டதும்
கும்மாளம் தான் …ஆ….

புதிய பூவிது...

சரணம் ௨

கல்யாணம் ஆகாமலே
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது
கூடாது கூடாதென
னாணம் காதோடு சொல்கின்றது
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ
தண்டோடு பூவாடுது
வண்டு தாகங்கள் கொண்டாடுது
உன்னை கண்டதும் என்னை கண்டதும்
உண்டாகுமோ தேன்

புதிய பூவிது...

Thendrale Ennai Thodu - Pudhiya Poovidhu

Followers