Pages

Search This Blog

Friday, January 10, 2014

சக்கரகட்டி - மருதாணி மருதாணி

பெண்: மருதாணி.. மருதாணி..
மருதாணி.. விழியில் ஏன்
அடி போடி.. தீபா....ளி
கங்கை என்று கானலை காட்டும்... காதல்
கானல் என்று கங்கையை காட்டும்
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை என்னாளும் ஓயாது
மருதாணி.. மருதாணி.. விழியில் ஏன்

(இசை...)

பெண்: அவன் இதய வீட்டில் வாழும்
அவள் தேகம் வெந்து போகும்
என்னை அவன் மறந்திட மாட்டான்
சற்று நேரம் சற்று தூரம்
காதலி கை நகம் எல்லாம்
பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்
ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி ஓ....
உணரவில்லை இன்னொரு பாதி (மருதாணி விழியில்...)

(இசை...)

பெண்: அவள் அவன் காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்
அவன் நெஞ்சம் தாய்பால் போலே
என்னாளும் பரிசுத்தம்
ஆத்திரம் நேத்திரம் கூட
பாலையும் கல்லாய் அவள் பார்க்கிறாள்
ஆக மொத்தம் அவசரக் கோலம் ஓ....
அவளுக்கிதை காட்டிடும் காலம்...
மருதாணி.. மருதாணி..
மருதாணி.. விழியில் ஏன்
அடி போடி.. தீபாளி
கங்கை என்று கானலை காட்டும்... காதல்
கானல் என்று கங்கையை காட்டும்
வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாளி
ஆகாயம் மண் மீது சாயாது
நிஜமான காதல் தான்
நிலையான பாடல் தான்
அதன் ஓசை என்னாளும் ஓயாது
மருதாணி.. மருதாணி.. விழியில் ஏன்
மருதாணி.... மருதாணி....
மருதாணி.... விழியில் ஏன்
 
Sakkarakatti - Marudaani

Followers