Pages

Search This Blog

Wednesday, November 6, 2013

மின்சார கனவு - தங்கத் தாமரை மகளே

தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவை எல்லாம் பெண்ணே உன்னாலே
(தங்கத் தாமரை )

செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே - என்
கழுத்து வரையில் ஆசை வந்து நின்றேனே
வெறித்த கண்ணால் கண்கள் விழுந்தும் பெண்மானே - உன்
கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே காணாமல் நான் போனேனே
இருதயத்தின் உள்ளே ஓலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் என்னை மறைக்க ?
தொடட்டுமா தொல்லை நீக்க ?
(தங்கத் தாமரை )

பறக்கும் வண்டுகள் பூவில் கூடும் கார்காலம்
கனைக்கும் தவளை துணையைச் சேரும் கார்காலம்
பிரிந்த குயிலும் பேடை தேடும் கார்காலம்
பிரிந்திருக்கும் உயிரைஎல்லாம் பிணைத்துவைக்கும் கார்காலம்
நகம் கடிக்கும் பெண்ணே அடக்காதே ஆசை
நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை
நெருக்கமே காதல் பாஷை
(தங்கத் தாமரை )

Minsara Kanavu - Thanga Thamarai

Followers