Pages

Search This Blog

Friday, October 25, 2013

ஐயா - ஒரு வார்த்த கேட்க்க

ஒரு வார்த்த கேட்க்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
ஒருவார்த்தை கேட்க்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
மணமாலை ஒண்ணு பூப்பூவாய் பூத்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்
சூரியன சூரியன சுருக்கு பையில்
நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிக்குள்ளதான் நட்ட தாமரை கொடி
தெப்ப கொளத்தையே குடிச்சிருச்சி
ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம ஒதுங்கி நின்னேன்

ஊருக்குள்ள ஓடும் தெருவில் பாத தடங்கல் ஆயிரம் இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்
இதயத்தை தட்டி தட்டி பார்த்துப்புட்ட
அது திறக்கல என்றதுமே ஒடைச்சிப்புட்ட
நீ கிடைக்க வேண்டும் என்று துண்டு சீட்டு எழுதி போட்டேன்
பிச்சி அம்மன் கோவில் சாமி பேப்பர் சாமி ஆனது என்ன
கண்ணுக்குள் ஓடிய உன்ன தொரத்த மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச
மனசுக்குள் ஒளிஞ்சிடும் உன்ன விரட்ட உசுருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச
ஒ நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதையா

ஒரு வார்த்தை சொல்ல..............

அடுத்த  வீட்டு  கல்யாணத்தின்  பத்திரிக்கை  பார்க்கும்  போது  
நமது பேரை மணமக்களாக  மாற்றி  எழுதி  ரசித்து  பார்த்தேன் 
  இது  வரை எனக்குள்ள  இரும்பு நெஞ்சு  
அது இன்று  முதல் ஆனது இளவம்  பஞ்சு
கட்டபொம்மன்  உருவம் போல உன்னை வரைத்து  மறைத்தே  வைத்தேன்   தேசப்பற்று  ஓவியம் என்று  வீட்டு சுவரில்  அப்பா மாட்ட
 அணைக்கட்டு  போலவே  இருக்கும்  மனசு நீ தொட்டு ஒடஞ்சது  என்ன
 புயலுக்கு  பதில் சொல்லும் இந்த மனசு பூ பட்டு சரிஞ்சது  என்ன 
வேப்பமரம்  சுத்தி  வந்தேன்  அரச மரமும்  பூத்ததய்யா   
ஒரு வார்த்தை  சொல்ல....

Ayya - Oru Vaarthai

Followers