Pages

Search This Blog

Thursday, October 17, 2013

வருஷம் 16 - பூப்பூக்கும் மாசம்

பொங்கலு பொங்கலு வெக்க மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி தங்கச்சி
புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

பூப்பூக்கும் மாசம் தாய் மாசம்
ஊரெங்கும் வீசும் பூவாசம்
சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
ஒரு ராகம் ஒரு தாளம்
வந்து சேரும் நேரம் இந்நேரம்

(பூப்பூக்கும் மாசம் )

வாய்க்காலையும் வயற்காட்டையும்
படைத்தாள் எனக்கென காதல் தேவதை
தெம்மாங்கையும் தெருக்கூத்தையும்
நினைத்தால் இனித்திடும் வாழ்வு நாள் வரை
குழந்தைகள் கூட குமரியும் ஆட
மந்த மாருதம் வீசுது மலையமாருதம் பாடுது
ஓ ஓ ஓ ...

(பூப்பூக்கும் மாசம் )

நான் தூங்கியே நாளானது
அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதற்கொரு தாகம் வந்தது
மனதினில் கோடி நினைவுகள் ஓடி
மன்னன் யாரெனத் தேடுதோ உன்னைப் பார்த்ததும் கூடுதோ
ஓ ஓ ஓ ...

(பூப்பூக்கும் மாசம் )

varusham 16 - pooppookkum maasam

Followers