Pages

Search This Blog

Monday, September 30, 2013

இரண்டாம் உலகம் - மன்னவனே என்

பெ:  மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
வின்மீன தேடி தேடி எங்கே அழைவேன்

ஆ: உன் இணைக் கிள்ளி வரும்வரை
ஒரு துணை கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா
(பெ: மன்னவனே)

ஆ: வருவது வருவது வருவது துணையா சுமையா
தருவது தருவது தருவது சுகமா வலியா
ஒரு உயிருக்கு இரு உடலா
இரு உடலுக்கும் ஒரு மனமா
என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள எரியுர நெனப்பிது
சொல்லித்தான் தெரியுமா
ஒரு வட்டத்துல வட்டத்துல தொடக்கம் முடிவெது
சொல்லத்தான் முடியுமா
(பெ: ஓ... மன்னவனே)

பெ: பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா
ஓ...
பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா
வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா
தினம் நடக்கிறேன் ஒரு திசையில்
மனம் கிடக்குதே மறு திசையில்
ஒரு உப்பு கல்லு உப்பு கல்லு கடலுல விழுந்ததும்
உருவம் கரஞ்சதே
இந்த ஒத்த பொண்ணு ஒத்த பொண்ணு உனக்குள்ள விழுந்தது
மெத்த காத முடிஞ்சதே
(பெ: ஓ... மன்னவனே)

ஆ: உன் இணைக் கிள்ளி வரும்வரை
ஒரு துணை கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா
 
Irandaam Ulagam - Mannavane En

Followers