Pages

Search This Blog

Friday, December 20, 2013

கோபுர வாசலிலே - தாலாட்டும் பூங்காற்று

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

நள்ளிரவில் நான் கண்விழித்தேன்
உன் நினைவில் நான் மெய்சிலிர்த்தேன்
பஞ்சணையில் நீ முள்விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
பார்க்கும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலையில் நான் கேட்கும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா என்னாளும்
ஆசையில் நான் தொழும் ஆலயம் நீயல்லவா

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா



Gopura Vasalile - Thalattum Pongkaatru

கோபுர வாசலிலே - பிரியசகி ஓ பிரியசகி

பிரியசகி ஓ பிரியசகி பிரியசகி என் பிரியசகி
வருவேன் வாசல் தேடி வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி
இளைய தேகம் ஓஓஓ இணைய வேண்டும்
இனிய ராகம் ஓஓஓ புனைய வேண்டும்
(பிரியசகி)

காதலன் வீரமிகு ஆண்மகன் ஆண்மகன்
காவலை மீறிவரும் நாயகன் நாயகன்
பார்வை ஒன்று வீசு கண்மணி பூமி தன்னைக் கையில் ஏந்துவேன்
வார்த்தை ஒன்று பேசு கண்மணி மேகம் போல வானில் நீந்துவேன்
வானமும் வையமும் வாழ்த்துமே ஓ

பிரியசகி நான் பிரியசகி பிரியசகி உன் பிரியசகி
வருவாய் வாசல் தேடி வருந்தும் பூங்கொடி
தருவாய் பாடல் கோடி தவிக்கும் பைங்கிளி
இளைய தேகம் ஓஓஓ இணைய வேண்டும்
இனிய ராகம் ஓஓஓ புனைய வேண்டும்
கூண்டிலே காதல் குயில் பாடுது பாடுது
கொண்டுபோ கூவி உனைத் தேடுது தேடுது

வெண்ணிலாவைச் சிறையில் வைப்பதா வானம் என்ன வெளியில் நிற்பதா
வீரமான நெஞ்சமில்லையா நெஞ்சில் இந்த வஞ்சியில்லையா
நீ வரும் பாதையைப் பார்க்கிறேன் ஓ
(பிரியசகி)



Gopura Vasalile - Priyasagi Oh Priyasagi

கோபுர வாசலிலே - தேவதை போல் ஒரு பெண்ணிங்கு

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்
(தேவதை போல்..)

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட
மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட
வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்
(தேவதை போல்..)

சீதாவை பிரித்தது மான் தான்
புள்ளி மான் தான்
தோதாக சேர்ந்தது மான் தான்
அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தென்றலே ஊர்கோலம் தான்
(தேவதை போல்..)



Gopura Vasalile - Dhevadhai  Pol Oru Penn

Wednesday, December 18, 2013

பக்தி பாடல் - கற்பூர நாயகியே

கற்பூர நாயகியே! கனகவல்லி!
காளி மகமாயி! கருமாரி அம்மா!
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!
விற்கால வேதவல்லி விசாலாட்சி!
விழிக்கோல மாமதுரை மீனாட்சி!
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே!
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!

(கற்பூர)

புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி!
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!
நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி!
நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி!
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி!
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி!
உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி!
உன்னடிமைச் சிறியேனை நீயாதரி!

(கற்பூர)

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறைவிடத்தில் முறையிடுவேன் தாயே! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா!
கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா!
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!
சின்னவளின் குரல்கேட்டுன் முகம் திருப்பு!
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு!

(கற்பூர)

கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்!
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்!
பண்ணமைக்கும் நா உனையே பாட வேண்டும்!
பக்தியோடு கையுனையே கூடவேண்டும்!
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்!
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்!
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா!
மகனுடைய குறைகளையும் தீருமம்மா!

(கற்பூர)

நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழியவேண்டும்!
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்!
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்!
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா!
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா!

(கற்பூர)

அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ!
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ!
கண்ணுக்கு இமையின்றிக் காவலுண்டோ!
கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ!
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ!
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ!
எண்ணெய்க்கும் விளக்குக்கும் பேதமுண்டோ!
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ!

(கற்பூர)

அன்புக்கே நானடிமையாக வேண்டும்!
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்!
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்!
வஞ்சத்தை என் நெஞ்சம் மறக்க வேண்டும்!
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்!
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்!
என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்!
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்!

(கற்பூர)

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை!
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை!
நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை!
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை!
செம்பவள வாயழகி உன்னெழிலோ!
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை!
அம்பளவு விழியாலே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை!

(கற்பூர)

காற்றாகி கனவாகிக் கடலாகினாய்!
கயிறாகி உயிராகி உடலாகினாய்!
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!
நிலமாகி பயிராகி உணவாகினாய்!
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!
போற்றாத நாளில்லை தாயே உன்னை!
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை!

(கற்பூர)

Bakthi Paadal - Karpoora Naayagiye Kanagavalli

பக்தி பாடல் - சரணம் அய்யப்பா சுவாமி

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

Bakthi Paadal - Sharanam Ayyappa Swamy

நான் கடவுள் - மாதா உன் கோவிலில்

மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான்
தாய் என்று உன்னைத் தான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா

மாதா உன் கோவிலில் ...

Naan kadavul - Matha un kovilil

காதலில் விழுந்தேன் - உன் தலை முடி

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
உன்னை வானத்தில் தேடியே மேகம் காநீறாய் சிந்துதோ
உன்னை நான் சேரவே பூமி என்னோடு சுற்றுதோ

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

உச்சந்தலை மீது நீ குடுக்கும் முத்தம்
உயிரின் மீது பட்டு தெறிக்கும்
கைகள் பற்றி கொண்டே பேசி கொள்ளும் நேரம் ஏக்கம்
எதிர் வரும் காற்று உன் பெயரை என்மேல் தினமும் கிறுக்கி விட்டு போகும்
நெற்றி பொட்டுக்குள்ளே கொத்திவிட்டு என்னை மோதும்
உன் கண்ணில் பட்ட பூவை கூந்தலுக்குள் வைப்பேன்
காலில் பட்ட கல்லை மூக்குத்தியில் வைப்பேன்
கையில் பட்ட என்னை உன் இதயபையில் வைப்பேன்
என்னை கொடுப்பேன் .. ஒ ..

உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினை கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்

நீயும் என்னை நித்தம் சேர வேண்டும் என்று
தொலைந்து போக கொஞ்சம் ஆசை
நான் அணைத்து தூங்கும் மீசை வைத்த பொம்மை நீயே
நெஞ்சில் நிலமாக விழுந்து கிடக்கின்றேன்
தேய்ந்து கொள் என்னை முழுதும்
தொட்டு நின்று தூங்கும் என் பார்வை எந்தன் முத்தம் தினமும்
உன்னை பற்றி எழும் காதல் கோடி ஆனேன்
உன் கையெழுத்தை தாங்கும் காகிதம் நானே
உன் உள்ளங்கையில் சுற்றும் பம்பரமும் நானே
எந்தன் உயிரே ..ஒ ..

உன் தலை முடி ...

Kadhalil Vizhunthen - Un Thalai Mudi

Followers