Pages

Search This Blog

Monday, November 4, 2013

16 வயதினிலே - செவ்வந்தி பூ முடிச்ச

செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா ஹோய்
சேதி என்னக்கா ஹோய்
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா ஹோய்
முத்து பல்லக்கா ஹோய்
அது என்னமோ என்னமோ ஹோய்

செவ்வந்தி ...

கோயில் அம்மனுக்கு சூடம் காட்டு
அத நீயும் காட்டு
அது சிரிப்பது தெரியாதா
பூஸை உன் கையால் போட்டாச்சு
நானும் பார்த்தாச்சு இனி எனக்கது புரியாதா
கண்ணால் சொல்லு மலை எடுப்பேன்
ரெண்டு கையாலே அத வளைப்பேன்
சிரிக்காதே நாடு பொறுக்காதே
என் மனசே கெடுதே குயிலே மயிலே ஹோய்

செவ்வந்தி ...

ஆத்துல காத்தடிச்சா அலை ஓடும்
கெண்டை விளையாடும்
இப்போ மனசுல துடிக்குதம்மா
ஆயிரம் நினப்புக்கு வயசிருக்கு
சின்ன மனசிருக்கு
அது துணிஞ்சது எதுக்காக
உடம்பு இப்போ நடுங்குதம்மா
சலங்கையைப்போல் குலுங்குதம்மா
நீ பலசாலி நல்ல அறிவாளி
எனக்கு இதுவே போதும் குயிலே மயிலே ஹோய்

செவ்வந்தி ...

செவ்வந்தி பூ முடிச்ச சின்னய்யா ஹோய்
சேதி என்னய்யா ஹோய்
நீ சீட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லய்யா ஹோய்
முத்து பல்லய்யா ஹோய்
அது என்னமோ என்னமோ ஹோய்

16 Vayathinile - Sevvanthi poo mudicha

ராதா திலகம் - பசுமை நிறைந்த நினைவுகளே

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்

பசுமை நிறைந்த ....

குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே (2)
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே (2)
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே (2)
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே
நாமே வாழ்ந்து வந்தோமே

பசுமை நிறைந்த ....

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ (2)
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ (2)
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ (2)
இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ
என்றும் மயங்கி நிற்போமோ

பசுமை நிறைந்த நினைவுகளே ....

Ratha thilagam - Pasumai niraintha ninaivugale

அழியாத கோலங்கள் - பூவண்ணம் போல

பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம் என்னுள்ளம் போடும் தாளம் (2)

பூவண்ணம் போல நெஞ்சே.. ஹே.. ஏஹே..

இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள்
என்றென்றும் நீ (2)
இணைந்த வாழ்வில் பிரிவும் இல்லை தனிமையும் இல்லை
பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்

பூவண்ணம் போல நெஞ்சம் ....

படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
கனிக்குள் வாட்டங்கள் அணைக்கும் ஊட்டங்கள்
என் இன்பங்கள் (2)
இணையும்போது இனிய எண்ணம் என்றும் நம் சொந்தம்
இமைக்குள் ஏழு தாளம் என்றென்றும் காண வேண்டும்

பூவண்ணம் போல நெஞ்சம் ....

Azhiyaatha kolangal - Poo vannam pola nenjam

அங்காடித் தெரு - உன் பேரை சொல்லும்

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
(உன் பேரை..)

நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்கள் நூறு
உனை தொடரும் பறவைகள் நூறு
பெண்ணே பெண்ணே
(நீ இல்லையென்றால்..)
(உன் பேரை..)

உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லை
பெண்ணே பெண்ணே
(நீ இல்லையென்றால்..)
(உன் பேரை..)

Angaadi theru - Un perai sollum bodhe

உதயம் NH4 - யாரோ இவன்

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

எங்கே உன்னைக் கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் சுவாசங்கள் என்னைத் தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ
நதியினில் ஒரு இலை விழுகிறதே
அலைகளில் மிதந்தது அது தவழ்கிறதே
கரை சேருமா உன் கை சேருமா எதிர்காலமே

எனக்காவே பிறந்தானிவன்
எனை காக்கவே வருவானிவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

Udhayam NH-4 - Yaaro ivan

தங்க மீன்கள் - நதி வெள்ளம்

அப்பாக்களை பிரியா மகள்கள் அதிஷ்டசாலிகள்
மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்
ஆனால் அப்படி எல்லாம் தந்து விட
வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்

அடி என் கண்ணின் இரு கருவிழிகள்
உன் முகத்தைத் தேடுதடி
கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி
என் காட்டில் ஒரு மழை வந்ததும்
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே
இடி மின்னல் விழுந்து காடே எறிந்ததடி

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்

அலைந்திடும் மேகம் அதைப் போல
இந்த வாழ்க்கையே
காற்றின் வழியில் போகின்றோம்
கலைந்திடும் கோலம் என்ற போதிலும்
அதிகாலையில்
வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்
உயிரே உன்னைப் பிரிந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் தான் அங்கு வாழும்
நீதானே ... எந்தன் உயிரே

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்

மலர் ஒன்று வீழ்ந்தால் அதை ஏந்தப் பலர் ஓடுவார்
இலைகள் வீழ்ந்தால் சருகாகும்
வறியவன் வாழ்க்கை இலை போல என்ற போதிலும்
சருகுகள் ஒரு நாள் உரமாகும்
உயிரே உன்னைப் பிரிந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் தான் அங்கு வாழும்
நீதானே ... எந்தன் உயிரே

நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்

Thanga meengal - Nadhi vellam

தங்க மீன்கள் - ஆனந்த யாழை

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

Thanga meengal - Aanandha yaazhai

Followers