பல்லாக்கு தேவதைய பார்வையில புள்ளி வச்சேன் பாவாட ராட்டினத்த பக்கத்துல சுத்த வச்சேன் லவ்வு ஒரு ஃபீலு நான் சொல்லுறேன் நீ கேளு அட லவ்வே வேணாம் முன்னா அது பப்பி பப்பி ஷேமு கண்டாங்கி சேலைய நான் காலையில கிள்ள வச்சேன் கண்ணாடி தாவணிய மாலையில துள்ள வச்சேன் லவ்வு ஒரு ஃபீலு நான் சொல்லுறேன் நீ கேளு அட லவ்வே வேணாம் முன்னா அது பப்பி பப்பி ஷேமு ( இசை ) மனசு ஜிலு ஜிலுக்க வயசு கிலு கிலுக்க கொலுசும் ஜல ஜலக்க உளுந்த வேணும்டா ஏ குத்து டப்பாங்குத்து நீ இஷ்டம் போல சுத்து ஏ குத்து டப்பாங்குத்து கூட பொண்ணு வந்தா கெத்து ( இசை ) பல்லாக்கு தேவதைய பார்வையில தள்ளி வச்சேன் பாவாட ராட்டினத்த பாக்காம நான் எட்டி வச்சேன் என்னாத்துக்கு லவ்வு அட வேணா வேணா மாப்பு நீ லவ்வ நம்பி போனா அட தானா வரும் ஆப்பு கண்டாங்கி சேலைய நான் காரணமா திட்டி வச்சேன் கண்ணாடி தாவணிய காரணமா ஒத்தி வச்சேன் என்னாத்துக்கு லவ்வு அட வேணா வேணா மாப்பு நீ லவ்வ நம்பி போனா அட தானா வரும் ஆப்பு தலையும் கிறு கிறுக்க ஒடலும் பட படக்க இதயம் தட தடக்க கலங்க வேணாண்டா ஏ குத்து டப்பாங்குத்து நீ போயிடுவ இத்து குத்து கும்மாங்குத்து பொண்ணு போவா உன்ன வித்து இசைசரணம் - 1 மாசம் பூரா மார்கழி நீ ஆடி பாடி காதலி சூப்பர் மேன போல நீ உருமாற தேவ பைங்கிளி ஊரு சொல்ல மீறி ஓயாம பொய்ய கூறி போவாளே பொண்ணு நம்ம கால வாரி ஹே சீனி பல்லுக்காரி சிங்கார சொல்லுக்காரி வந்தாலே போகும் மானம் கப்பலேறி ஹே நில்லே நில்லே நில்லே வேணா அந்த தொல்ல ஹே இல்லே இல்லே இல்லே ஒம் புத்தி நல்லா இல்லே பல்லாக்கு தேவதைய பார்வையில புள்ளி வச்சேன் பாவாட ராட்டினத்த பக்கத்துல சுத்த வச்சேன் லவ்வு ஒரு ஃபீலு நான் சொல்லுறேன் நீ கேளு அட லவ்வே வேணாம் முன்னா அது பப்பி பப்பி ஷேமு கண்டாங்கி சேலைய நான் காரணமா திட்டி வச்சேன் கண்ணாடி தாவணிய காரணமா ஒத்தி வச்சேன் என்னாத்துக்கு லவ்வு அட வேணா வேணா மாப்பு நீ லவ்வ நம்பி போனா அட தானா வரும் ஆப்பு ( இசை ) தில்லே தில்லே தில்லே ஏ தில்லே தில்லே தில்லே நீ தல்லே தல்லே தல்லே ஏ தல்லே தல்லே தல்லே தில்லே தில்லே தில்லே ஏ தில்லே தில்லே தில்லே நீ தல்லே தல்லே தல்லே ஏ தல்லே தல்லே தல்லே
அன்பே அன்பே எல்லாம் அன்பே உனக்காக வந்தேன் இங்கே சிரித்தாலே போதும் என்றேன் மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன் பனிக்கால போர்வை கொண்டு வந்தேன் (2) என் மேஜை மீது பூங்கொத்தை என் மேஜை மீது பூங்கொத்தை வைத்தது நீ தானே நான் வானம் பார்க்க வழி செய்த சாரலும் நீ தானே என் இதயம் மெல்ல சிதையில் தள்ள நீ தான் நிலவைக் காட்டித் தேற்றினாய் அன்பே அன்பே .... தூக்கம் கண்ணில் வரவில்லை சொப்பனம் காண வழி இல்லை எங்கோ பாடல் கேட்டாலும் நெஞ்சில் உன் போல் தீ இல்லை (2) வழி தரும் கால் முகிலே நீ மிதந்திடும் மயில் இறகே இதம் தரும் இன்னிசையே நீ ஒலி தரும் இன்னிசையே இருப்பது ஓர் உயிரே அது உருகியே கரைகிறதே நினைவுகள் கொல்வதனால் மனம் மறுபடி சருகிறதே ஓ அன்பே அன்பே .... உன்னைப் பார்க்க கூடாது என கண்ணை மூடிக் கொண்டாலும் கண்ணை பிரித்து நீ வந்தாய் இமைகளின் இடையில் நீ நின்றாய் உன்னிடம் சொல்வதற்கு என் கதை பல காத்திருக்கு இரு கண்களின் தந்திகளால் அதை கடத்திட சொல் எதற்கு உடைகளின் நீதியினால் இந்த உலகினை வென்றவள் நீ சிறு உதட்டினில் புன்னகையால் என் இதயத்தில் நின்றவள் நீ ஓ அன்பே அன்பே ....
சர சர சரவெடி அழகுல வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச சிரிக்குற சிரிப்புல மனசையும் வெடிச்ச சர சர சரவெடி கனவுல வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச நெனைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச பொட்டக் காடும் பூ பூக்க நீ நெருக்கடி நெருக்கடி கொடுக்குற சட்டப் பூவும் தேன் ஊற சந்தோசம் தார பட்டாம் பூச்சி நானாக நீ அடிக்கடி அடிக்கடி ரசிக்கிற வெட்டுப் பாற பால் ஊற கொண்டாட வார வலையல தொலஞ்சத போல ஏன் ஒதட்ட நீ சுழிச்சுட்டு போற தொவையலு அரைச்சது போல என் உசுரையே வளைசுட்டுப் போற சர சர சரவெடி கனவுல வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச நெனைக்குற நெனப்புல வயசையும் ஒடச்ச சரணம் - 1 கருவேலங்காடு கிளி வாழும் கூடு நெடுநாளா ஆச வெச்சேன் நெஞ்சுக்குள்ள அதத் தாண்டி வேற ஒன்னும் சொல்ல இல்ல நீ சாயங்காலம் வந்துவீசும் காத்து நான் உத்துப் பாக்க போக நீயும் வேர்த்து வெகு தூரம் போக வேணும் அட நீயும் நானும் கைய கோர்த்து சர சர சரவெடி அழகுல வெடிச்ச நீ வெடிச்ச வெடிச்ச சிரிக்குற சிரிப்புல மனசையும் வெடிச்ச சரணம் - 2 மழையோட வாசம் அது தானே நேசம் வயக்காட்டு சேறு வாசம் ஆசை ஆச்சு கருவாட்டுச் சாரல் வாசம் காதல் ஆச்சு நா வைக்கப் போறேன் இலைவாழ தோப்பு நீ கிட்ட வந்தா இல்ல பாதுகாப்பு ஒன்னாக சேரும் போது நமக்குள்ள வேணாம் காப் பு காப் பு
விழியே விழியே திரை விரிகிறதே உனைப் பார்த்திடும் வேளையிலே அதிலே அதிலே படம் வரைகிறதே மனம் சேர்ந்திடும் ஆசைகளே கதிரவனாக பிரிந்த பகல் நிலவென தேயவும் துணிந்ததடி கருநிறமாக இருந்த நிழல் உனதொரு பார்வையில் வெளுத்ததடி அன்பே உனைப் பார்ப்பதும் அனுபவமே உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே (2) விழியே விழியே .... சரணம் - 1 எதை நீ சொன்னாலும் வியப்பேன் உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன் (2) அடம் நீ செய்தாலும் பொறுப்பேன் உன் குரலை செல் போனில் பதிப்பேன் பொழுதும் உன்னோடு இருப்பேன் உன் சிறப்பில் சோம்பல்கள் முறிப்பேன் எதை நீ சொன்னாலும் வியப்பேன் உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன் சரணம் - 2 இலையும் தீண்டாத கனி நீ நான் சுவைக்கும் நாள் கேட்கும் பொறு நீ விரல்கள் மீட்டாத இசை நீ மெல்லிசையாய் என் காதல் வசம் நீ தவமே செய்யாத வரம் நீ பெண் கடலே முத்தங்கள் இடு நீ இலையும் தீண்டாத கனி நீ நான் சுவைக்கும் நாள் கேட்கும் பொறு நீ விழியே விழியே ....
மேலே மேலே தன்னாலே என்னக் கொண்டுப் போனாளே அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிட்டாளே ஆளத் தின்னுப் போறாளே ஆட்டம் போட வெச்சாளே அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே அவ தூரம் நின்ன தூறலு என் பக்கம் வந்த சாரலு அவளாலே நான் ஆனேன் ஈசலு அவ மேலே ரொம்ப ஆவலு அதனாலே உள்ளே மோதலு அவ என்னோட காவல் ஏஞ்சலு வா ராசா ராசா வழி எல்லாம் ரோசா ரோசா ஹே லேசா லேசா ஆடாதே நீயும் லூசா லூசா சரணம் - 1 அவள் ஒரு அழகிய கொடும அத புலம்பிட பொலம்பிட அருவ நெதம் என்ன பாத்ததும் ஏறிப் போச்சு பெரும அவ ஒரு வகையில இனிமை அத அறிஞ்சிட அறிஞ்சிட புதும எனத் தொட்டுப் பேசிட கூடிப் போச்சு தெறம அவ நேருல வந்தா போதும் தெருவெல்லாம் தேரடி ஆகும் அவ கண்ணாலே பேசும் தீபம் (2) மேலே மேலே தான்னாலே என்னக் கண்டுப் போனாளே அந்தப் புள்ள தன்னாலே நெஞ்ச அள்ளிட்டாளே சரணம் - 2 கடவுள துதிப்பவன் இருப்பான் கொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான் அட அவளப் பாத்திட எல்லாத்தையும் மறப்பான் ஒலகத்த ரசிப்பவன் இருப்பான் எந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான் அவ கூட நின்னவன் கண்ணத் தானே இழப்பான் அவ ஒரு முற வெச்ச காரம் என் உசுருல நித்தம் ஊரும் அவ தீராத நீராகாரம் (2) பல்லவி மேலே மேலே தன்னாலே ....
வையம்பட்டி... வாழ குட்டி... தப்பட்டம் ஆடு வேசம் கட்டி பாட்டு கட்டி நீ ஆடுன மேகங்கள் போடும் ஆலங்கட்டி மல மேல ஒழப்பு பள்ளத்தில் பொழப்பு மல ஜாதி முன்னேறுமா முன்னேறுமா பணக்கார கரண்டி மழை எல்லாம் சொரண்டி வன காடு பழுதாச்சு அம்மா பலகாலமா மலைக்கு போய் மொட்ட போடு மலைக்கே மொட்ட பொட வேணா மலையும் மரமும் நம்ம சாமி கொண்டாடுங்க... கூத்தாடுங்க... தாய் மாமன் காத்து தாய்பால் ஊத்து உசுரு பொழைக்க இது போதும் மும்மாரி கூட மோசம் செஞ்சாலும் கையே எதிர்க்கலாம் தேகத்தில் வலுவுண்டு மானே இங்க தினையோடு சாப்பாடு தேனே மேகத்தின் போர்வைக்கு கீழே நாங்க காதல் செய்வோம் களவும் செய்வோம் புல்லோடு தூங்கும் பனி துளி சேர்த்து சூரிய ஒளியை கோர்போமே சந்தோசம் உண்டு சாதிகள் இல்ல சமத்துவம் காண்போமே தென் நாட்டு தாகம் தீர்க்கும் தெய்வம் மேற்க்கு தொடர்ச்சி மலை தானே... மனுசனும் கடவுளும் தோன்றும் முன்னாலே வாழ்ந்த மலை தானே பறவை எச்சம் தான் காடு எங்க பண்பாட்டில் காடே தான் வீடு மரமொன்று மல மேல சான்சா நாங்க தூக்கம் கெட்டு துக்கம் கேப்போம் தான் வீட்டு மேல தீ வைக்கும் மனுசா நம்மோட காட்ட அழிக்காதே பேராசா புடிச்ச பேய் மனக் காரா தாய் முலை அறுக்காதே வையம்பட்டி வாழ குட்டி தப்பட்டம் ஆடு வேசம் கட்டி பாட்டு கட்டி நீ ஆடுனா மேகங்கள் போடும் ஆலங்கட்டி மல மேல ஒளைப்பு பள்ளத்தில் பொழப்பு மல ஜாதி முன்னேறுமா முன்னேறுமா
குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா பெருந்தொகை எப்போது ஈட்டுவாய் இன்பது பால் சொல்லும் இளய வேந்தே பொருட் பாலை எப்போது காட்டுவாய் ஈசன் எழுதிய ஓலை களில் அக்கால காதல் உருவாகும் ரேசன் எழுதிய அட்டைகளில் தற்கால காதல் உருவாகும் நல்ல வேலை செய்த பின்னே சிறு தாலி செய்து கொண்டுவா குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன் பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான் இன்பத்து பால் கொஞ்சம் படித்த பின்னே பொருட் பாலை உன்னோடு யோசிப்பான் சரி மோகம் என்னும் மேகம் இரு கண்ணை மூடுமே பசி தாகம் வந்து காதை மூட உண்மை தோணுமே இது அவ்வை யாரின் கேள்வி என் அதையே சொல்கிறாய் நான் ஆசை அம்பு வீசும் போது அழகாய் வைக்கிறாய் இல்லறம் புல்லா வினைத்தொகையும் அளபேடயும் முதல் பாத்து சத்தியமடி தமிழ் நமக்கு உணவளிக்கும் தடை எத்து பொய்யோ நீ சொல்வது மெய்யோ நம்பவா நான் குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தன் பெருந்தொகை பின்னாளில் வாசிப்பான் இன்பத்து பால் கொஞ்சம் படித்த பின்னே பொருட் பாலை உன்னோடு யோசிப்பான் உன் மூளை கொண்டு பார்த்தால் அது கணிதம் ஆகுமே நீ நெஞ்சு கொண்டு காணும் போது நேசம் தோன்றுமே விழி மூடி கொண்டு காண என் நெஞ்சே போதுமே நீ மூடி வைத்த உண்மை காண மூளை வேணுமே கணித மேதை ராமானுஜம் பெத்த பொண்ணு நீ தானா கற்பனை பண்ணும் மஹா கவி கம்பன் மகன் நீ தானா அம்மெ தமிழில் எமை நம்பி வா வா குறுந்தொகை கொண்டாடும் காதல் மைந்தா பெருந்தொகை எப்போது ஈட்டுவாய் இன்பத்து பால் சொல்லும் இளய வேந்தே பொருட் பாலை எப்போது காட்டுவாய்