Pages

Search This Blog

Friday, February 1, 2019

இது கதிர்வேலன் காதல் - விழியே விழியே திரை விரிகிறதே

விழியே விழியே திரை விரிகிறதே
உனைப் பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம் வரைகிறதே
மனம் சேர்ந்திடும் ஆசைகளே

கதிரவனாக பிரிந்த பகல்
நிலவென தேயவும் துணிந்ததடி
கருநிறமாக இருந்த நிழல்
உனதொரு பார்வையில் வெளுத்ததடி

அன்பே உனைப் பார்ப்பதும் அனுபவமே
உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே (2)

விழியே விழியே ....

சரணம் - 1

எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன் (2)

அடம் நீ செய்தாலும் பொறுப்பேன்
உன் குரலை செல் போனில் பதிப்பேன்
பொழுதும் உன்னோடு இருப்பேன்
உன் சிறப்பில் சோம்பல்கள் முறிப்பேன்

எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன்

சரணம் - 2

இலையும் தீண்டாத கனி நீ
நான் சுவைக்கும் நாள் கேட்கும் பொறு நீ
விரல்கள் மீட்டாத இசை நீ
மெல்லிசையாய் என் காதல் வசம் நீ
தவமே செய்யாத வரம் நீ
பெண் கடலே முத்தங்கள் இடு நீ

இலையும் தீண்டாத கனி நீ
நான் சுவைக்கும் நாள் கேட்கும் பொறு நீ

விழியே விழியே ....



Idhu Kathirvelan Kadhal - Vizhiyae Vizhiyae

Followers