அழகை வளர்ப்போம் நிலவில் மயங்கி இரவை ரசிப்போம் கனவில் உலவி தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும் முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னால் தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும் முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னால் பட்டு முகம் கொஞ்சம் வெட்கத்துடன் சிவக்க முத்தம் அவள் தந்தாள் மெத்தையிடும் முன்னால் என் மேலாடை தாலாட்ட தேனோடு தேன் சேர இன்பம் எங்கும் பொங்கும் பொங்கும் தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும் முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னால் Heyy wots ur name baby Mala OHH how sweet name... really ya lovely name come lets dance baby.... எங்கேயோ பார்த்த ஞாபகம் ஞாபகம் ஞாபகம் ஞாபகம் என் மேலே சாய்ந்த ஓவியம் எங்கேயோ பார்த்த ஞாபகம் பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம் மலர் காவியம் எழில் ராணியின் இதழ் நாடகம் இதழ் நாடகம் தமிழ் காதலின் புகழ் கோபுரம் புகழ் கோபுரம் அகப் பாடலின் சுமை தாங்குமே சுமை தாங்கியும் இமை மூடியும் சுகம் காணலாம் அசல் இவ்விடம் நகல் அவ்விடம் அழகென்பதே விஷமாகுமோ எங்கேயோ பார்த்த ஞாபகம் என் மேலே சாய்ந்த ஓவியம் பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம் ஆடை கட்டி வந்து நிற்கும் மேடு பள்ளமானதொரு பாவை விழி ஜாடை முத்தம் போடுகின்ற ஆலவட்டம் மீறுகின்ற போதை வீணை மட்டும் பேசுகின்ற வாணி பெற்ற பேரை வெல்க வார்த்தை இவள் ஆணை வென்று வீழ்த்துகின்ற சேனை கொண்ட காதல் தேவன் கோட்டை காதல் தேவன் கோட்டை தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும் முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னால் தளிர் மேனியில் விரல் பட்டதும் குளிர் போனதே குளிர் போனதும் மழை கூந்தலின் புகழ் பாடினேன் புகழ் பாடியே தினந்தோறுமே முகம் தேடினேன் முகம் கண்டதும் புது காதலில் நடமாடினேன் சுகம் எவ்விடம் துயர் அவ்விடம் சுடர் என்பதே வெறுப்பாகுமோ எங்கேயோ பார்த்த ஞாபகம் என் மேலே செய்த ஓவியம் பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம்
புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது விண்ணளவு இரண்டு உலகில் கிடையாது
ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ மாற்று குறையாதோ பொன்னோ மயங்குது நெஞ்சம் தூங்குது கொஞ்சம் ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ வானில் தோன்றும் மாலை சிவப்பு வானில் தோன்றும் மாலை சிவப்பு விழிகளில் பாதி விரல்களில் பாதி விழிகளில் பாதி விரல்களில் பாதி மூன்று கனிகளின் சுவை கொண்டு நேர் வந்து நின்றது கொடிஒன்று ஒன்றும் அறியாத பெண்ணோ நிலவென்ன நெருப்பென்ன உலவும் பேரழகே உனக்குள்ளே முள்ளோ மலரோ என மயக்கம் பிறக்குதடி எனக்குள்ளே என்னென்று ஏதென்று இனங்கான வடிவத்தை பாலும் வெண்மை கள்ளும் வெண்மை பாலும் வெண்மை கள்ளும் வெண்மை பருகிடும் வேளை புரிந்திடும் உண்மை நாம் பருகி பார்க்கையில் மது போலே ஒன்றும் அறியாத பெண்ணோ
தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர் கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய் வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத் தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல் செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும் பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி எங்கள் இதயக் கனி இதயக் கனி நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள் அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள் அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள் நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாடெங்கும் இல்லாமை இல்லையென்றாக பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம் வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் நாம் பாடுபட்டு்ச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம் வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை அமைதி என்றும் இல்லை நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே அமைதி நிலவுமே நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும் கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும் வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும் வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும் விளங்கிட வேண்டும் நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும் இது போல் எல்லாம் வேண்டும் இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும் இது போல் எல்லாம் வேண்டும் இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி ஆரம்பமாகட்டும் அடுத்தபடி (ஹ்ம்ம்ம்ம் மெல்ல மெல்ல தொடுங்கள் ) தேன் அள்ளி பூ முத்தம் தெளித்தபடி என்னை தழுவட்டுமே தினம் இந்த பருவ கொடி இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும் இது போல் எல்லாம் வேண்டும் இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் (2) நீராடும் துறை என்று நீ இருக்க நீந்தாத குறை கொண்டு நான் இருக்க தீராத தாகங்கள் தீர்த்து விடு என்னை தேன் பாயும் ஓடையிலே சேர்த்து விடு இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும் இது போல் எல்லாம் வேண்டும் இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் (2) கல்யாண காலத்தில் பல கனவு கை கூடும் நேரம் தன் முதல் இரவு நாம் தேடும் சொர்கத்தின் மணி கதவு ஒரு நாள் கூட மூடாமல் நீ உதவு Please help me... இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும் இது போல் எல்லாம் வேண்டும் இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும் (2)
இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே உந்தன் பேர் வள்ளலோ.. உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே உந்தன் பேர் வள்ளலோ.. உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. சர்க்கரைப் பந்தல் நான் தேன்மழை சிந்த வா சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும் தேவதை போல் எழில் மேவிட நீ வர நாளும் என் மனம் ஏங்கும் இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே உந்தன் பேர் வள்ளலோ.. உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே கைவிரல் ஓவியம் காண காலையில் பூமுகம் நாண பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில் போரிடும் மேனிகள் துள்ள புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில் பேசும் மந்திரம் என்ன இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே உந்தன் பேர் வள்ளலோ.. உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ மாமலை மேல் விளையாடும் மார்பினில் பூந்துகிலாடும் மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில் மேகமும் வாழ்த்திசை பாடும் மாளிகை வாசலில் ஆடிய தோரணம் வான வீதியில் ஆடும் இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி.. இன்பமே உந்தன் பேர் வள்ளலோ.. உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
என்ன இந்த மாற்றமோ எம்மனசு வலிக்குதே கண்ணுரெண்டும் காந்தமோ என்னைக்கட்டி இழுக்குதே உன் பூ முகத்தில் என் தாய் முகத்தை நான் பார்த்தேனே உன் ஞாபகத்தை என் ஆயுள்வரை நான் சேர்ப்பேனே நீ வந்ததும் என்னானது என் வாழ்க்கையே வேறானதோ (என்ன)
ச்சின்னச்சின்னப் புன்னகையில் என்னைப்பரித்தாய் வண்ண வண்ண கனவுகள் கண்ணில் கொடுத்தாய் சிறிய இதயத்தில் பெரிய காதலை தந்தாயடி என் அன்பே
மெல்ல மெல்ல மனசுக்குள் இடம் பிடித்தாய் மின் மினிக்கும் மின்னலைப்போல் ஒளிக்கொடுத்தாய் உறங்கும் நேரத்தில் நினைவின் ஓரத்தில் வந்தாயடா என் அன்பே
ஒரு பார்வைப் பார்க்கும்போதிலே எந்தன் தாகம் வானம் ஏறுதே மறு பாதிப்பார்க்கும் போதிலே எந்தன் ஜென்ம சாபம் தீருமோ
என் கால் கொலுசில் உன் பேரைச்சொல்ல நான் கேட்டேனே நீ வந்ததும் என்னானது என் வாழ்க்கையே வேறானதோ (என்ன)
சுற்றி உந்தன் முகம் அன்றி ஏதும் இல்லையே மற்றபடி வேற ஒன்னும் தொல்லை இல்லையே உயிரை எடுக்கிறாய் திரும்பக்கொடுக்கிறாய் திண்டாடுதே என் நெஞ்சம்
நெற்றிப்பொட்டில் நேற்றுவரைக் காய்ச்சல் இல்லையே நட்சத்திரம் பார்த்து நான் பேசவில்லையே உயிரைக்குடிக்கிறாய் நீச்சல் அடிக்கிறாய் கொண்டாடுதே என் நெஞ்சம்
உனைப்பார்த்துக் கொஞ்சிப்பேசத்தான் எந்தன் ஆசைத்தாவி ஓடுதே உனைப்பார்த்துப் பேசும் நேரத்தில் எந்தன் வார்த்தை ஊமையாகுதே
கண் பார்வை ரெண்டும் சொல்லாததையா உன் இதழ்கள் சொல்லும் (நீ வந்ததும்