ஆண்: ஆழியிலே முக்குளிக்கும் அழகே ஆவியிலே தத்தளிக்கும் அழகே உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி எந்நாளும் சூடேறவா என் ஜென்மம் ஈடேறவா... (இசை...) ஆண்: ஆழியிலே முக்குளிக்கும் அழகே ஆவியிலே தத்தளிக்கும் அழகே உன் திம்மென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா இச்சைக்கோர் விலை வைக்கவா உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும் இப்போதே தடை வைக்கவா மவுனத்தை குடி வைக்கவா (இசை...) ஆண்: அகம் பாதி முகம் பாதி நகம் பாயும் சுகம் மீதி மறைத்தாலும் மறக்காது அழகே... அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும் உனைப் போல இருக்காது அழகே... அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும் உனைப் போல இருக்காது அழகே... அழகே... அழகே... வியக்கும் அழகே.... அழகே... அழகே... வியக்கும் அழகே....
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் ஆ..ஆ திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி ஆ.. வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி கூறுங்கள் ஆ திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள் சேவற்காவடிகள் சர்ப்பக் காவடிகள் சிற்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள் பால் கவடி பழக் காவடி புஷ்பக் காவடி சேவற்காவடி மச்சக் காவடி கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் தேடி வருவார் வடிவேல் முருகனுக்கு அரோகரா வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை திருத்தணி முருகனுக்கு அரோகரா வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை அணைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி அணைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே முருகனருள் கூட வருமே கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே முருகனருள் கூட வருமே கந்தனாருள் கூட வருமே குமரன் அருள் கூட வருமே
முருகா.... முருகா.... முருகா.... நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை கந்தன் ஒரு மந்திரத்தை கந்தன் ஒரு மந்திரத்தை கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஓம் ஓம் ஓம் என வருவோர்க்கு நாம் எனத் துணையாவான் ஓம் என வருவோர்க்கு நாம் எனத் துணையாவான் ஆவான்….. வா என அழைக்காமல் வா வா என அழைக்காமல் வா என அழைக்காமல் வருகின்ற மகனாவான் தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம் தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம் சொன்னது தமிழ் வேதம் தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை சொன்னது தமிழ் வேதம் சொன்னது தமிழ் வேதம் சொன்னதை அறிந்தவற்கு சொன்னதை அறிந்தவற்கு ஸ்வாமினாதன் சொன்னதை அறிந்தவற்கு முருகப்பன் சொன்னதை அறிந்தவற்கு சொன்னதை அறிந்தவற்கு நன்மைகள் உருவாகும் நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை நாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை ஸ்வாமி மலை
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை... – நீ இருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை இறைவா… இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை... – நீ இருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை... – நீ இருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை வசை வருமே பாண்டி நாட்டினிலே … இறைவா… வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே வசை வருமே பாண்டி நாட்டினிலே … குழலி மணவாளனே உனது வீட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ. இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை சிவலிங்கம் சாட்சி சொன்னக் கதையும் பொய்யோ..! சிவலிங்கம் சாட்சி சொன்னக் கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ..! பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை.. பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன..? பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ..! அன்னைத் தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ..! வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா… உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை
ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா பாட்டும் நானே பாவமும் நானே... பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாடவைத்தேனே பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாடவைத்தேனே பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ.. கூட்டும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ? கூட்டும் இசையும் கூத்தின் முறையும் காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ? (பாட்டும் நானே..) அசையும்..பொருளில்..இசையும் நானே அசையும் பொருளில் இசையும் நானே ஆடும் கலையின் நாயகன் நானே அசையும் பொருளில் இசையும் நானே ஆடும் கலையின் நாயகன் நானே எதிலும் இயங்கும் இயக்கம் நானே என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ.. நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே.. நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ? நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ? ஆலவாயனொடு பாடவந்தவனின் பாடும்வாயை இனி மூடவந்ததொரு (பாட்டும் நானே..)