Pages

Search This Blog

Tuesday, January 15, 2019

தெய்வ மகன் - கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ

கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ
ஹைய்யா....

கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ
ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா...

கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ
காட்டுப் பூவை கிள்ளி கிள்ளி கனிய வைப்பாரோ
காட்டுப் பூவை கிள்ளி கிள்ளி கனிய வைப்பாரோ
கண்ணாடி பார்த்துக் கொண்டே காதல் செய்வாரோ 
காதல் செய்வாரோ போதை கொள்வாரோ

கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ

செக்கச் சிவந்திருக்கும் செவ்வாழை பந்தலிலே
சித்தாடை மூடி வைத்த பல்லாக்கிலே
ஹல்லல்ல ஹல்லல்ல ஹல்லல்லல்லல்லா
ஹல்லல்ல ஹல்லல்ல ஹல்லல்லல்லல்லா
பூப்பந்து கை கொண்டு நீ வந்து ஆட
பொன் வாங்க நாள் பார்த்ததோ
பூப்பந்து கை கொண்டு நீ வந்து ஆட
பொன்னான நாள் பார்த்ததோ
பாலாடை மின்ன என் மேலாடை பின்ன
வாவென்று நான் கேட்பதோ
வாவென்று நான் கேட்பதோ

கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ

கள்ளுண்ட பொன் வண்டு தள்ளாடும் போது
கண்கொண்டு நீ காண பொன் வேண்டுமோ
ஹல்லல்ல ஹல்லல்ல ஹல்லல்லல்லல்லா
ஹல்லல்ல ஹல்லல்ல ஹல்லல்லல்லல்லா
முன்னாலும் பின்னாலும் முந்நூறு வண்ணம்
எவ்வண்ணம் உன் எண்ணமோ
முன்னாலும் பின்னாலும் முந்நூறு வண்ணம்
எவ்வண்ணம் உன் எண்ணமோ
மெய் வண்ணம் கண்டு உன் கை வண்ணம் காட்டு
கண் வண்ணம் பொய் சொல்லுமோ
கண் வண்ணம் பொய் சொல்லுமோ

கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ
ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா...

கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ



Deiva Magan - Kootatthile Yaar Thaan

தெய்வ மகன் - கண்களால் பேசுதம்மா

கண்களால் பேசுதம்மா... பாசத்தின் அழைப்பு...
பெண்ணோடு பேசுதம்மா 
பெற்றெடுத்த வயிறு 

இனம் பிரிந்த மான் குட்டி 
மறைந்திருந்து பார்க்குதம்மா 

தெய்வத்தின் முன்னிலையில் 
ஊமை மனம் பேசுதம்மா
தெய்வ மகன் திருக் கோலம் 
திரை மறைவில் துடிக்குதம்மா
திரை மறைவில் துடிக்குதம்மா 

அம்மா... ஆ... அம்மா...



Deiva Magan - Kangal Pesuthamma

தெய்வ மகன் - காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே

காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே... ஏ...

வைரம் போலும் நட்சத்திரங்கள்
வாரி வைத்த கன்னம் ரெண்டும்
கண்ணாடி போலாடுது

வட்டம் போடும் மொட்டுப் பூவை
திட்டம் போட்டு தொட்டுப் பார்த்தால்
ஏனென்று யார் கேட்பது

உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

என் அழகினிலே என் விழிகளிலே

காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே

வெட்கம் அங்கே வேகம் இங்கே
கட்டிக் கொண்டால் அச்சம் எங்கே
அறியாத முகமா இது

எங்கே எந்தன் நெஞ்சம் உண்டோ
அங்கே உந்தன் மஞ்சம் உண்டு
கனியாத உறவா இது

உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

என் அழகினிலே என் விழிகளிலே

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே

காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

ஓலலே ஓலலே ஓலலே ஓலலே ஓலலே.... 
ஓலலே ஓலலே ஓலலே ஓலலே ஓலலே...



Deiva Magan - Kaathalikka Katrukollungal

தெய்வ மகன் - அன்புள்ள நண்பரே

பெலபில பலபம் பெலபில பலபம்
பெலபில பலபம் பெலபில பலபம்
பெலபில பலபம் பெலபில பலபம்
பம்... பூம்... பம்...

அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே
அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே
கட்டிக் கட்டி தள்ளாட முத்தமிட்டு கொண்டாட 
பொன்னான நன்னாளிதே பொன்னான நன்னாளிதே

பெலபில பலபம் பெலபில பலபம்
பெலபில பலபம் பெலபில பலபம்
பம்... பூம்... பம்...

அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே

கட்டழகு வட்ட முகம் கட்டழகு வட்ட முகம்
என் கதையில் அவளே கதாநாயகி...
கல்லிருக்கும் முல்லை மலர்
கல்லிருக்கும் முல்லை மலர்
என் கனவில் மலர்ந்த ஒரே காதலி...
கண் மலரும் வண்ண உடல் பொன்னழகோ
கன்னியவள் புன்னகையில் வெண்ணிலவோ... ஓ... ஓ...

அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே

செவ்விதழில் பூவெடுத்து செவ்விதழில் பூவெடுத்து
என் மனதில் ஒரு நாள் மலர் தூவினாள்
நெஞ்சமெனும் பஞ்சணையில்
நெஞ்சமெனும் பஞ்சணையில்
என் மடியில் விழுந்து கதை பேசினாள்
அண்டி வரும் தென்றலையும் வென்றவளோ....
அள்ளி வரும் பிள்ளை முகம் கொண்டவளோ... ஓ... ஓ...

அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே

பந்தடிக்கும் நந்தவனம் 
என் பருவம் முழுதும் அவள் நெஞ்சிலே
பொன்னுலகம் என்னுலகம் 
என் பொழுதும் சுகமும் அவள் கையிலே
இன்று முதல் அன்னமவள் என்னிடமே....
என் உறவும் ராணி அவள் கண்ணிடமே... ஏ... ஏ...

அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே
கட்டிக் கட்டி தள்ளாட முத்தமிட்டு கொண்டாட 
பொன்னான நன்னாளிதே பொன்னான நன்னாளிதே
பொன்னான நன்னாளிதே பொன்னான நன்னாளிதே



Deiva Magan - Anbulla Nanbare

தெய்வ மகன் - கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை
ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா
ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா அதை
உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா
உலகத்தில் வாழ விடு

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

நீ உள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா
கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா
கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா.. கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

எண்ணெயில்லாதொரு தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கண்களைப் போலிமை காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா.. கிருஷ்ணா…

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா



Deiva Magan - Kettadhum Koduppavane

தெய்வ மகன் - தெய்வமே தெய்வமே

தெய்வமே தெய்வமே .. நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
தெய்வமே தெய்வமே
சந்தித்தேன் நேரிலே .. சந்தித்தேன் நேரிலே
பாசத்தின் தேரிலே
தெய்வமே தெய்வமே
முத்துபோல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன்
ஓடினேன் ஓடினேன் .. அட ராஜ என் தம்பி வாடா

(அண்ணா… அண்ணா…)

அண்ணா என சொல்வானென
பக்கம் பக்கம் சென்றேன்

அண்ணா என சொல்வானென பக்கம் பக்கம் சென்றேன்

(குழந்தை என் கையை கடித்து விட்டது ஹ ஹஹா..போடா போ..)

தெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே

அன்னையை பார்த்த பின் என்ன வேண்டும் நெஞ்சமே
இன்று நான் பிள்ளை போலே மாற வேண்டும் கொஞ்சமே

(வேரில்லாமல் மரமா? மரமில்லாமல் கிளையா?
கிளையில்லாமல் கனியா?எல்லாம் ஒன்று)

தெய்வமே தெய்வமே தெய்வமே தெய்வமே
கண்ணீரினில்… உண்டாவதே…
கண்ணீரினில் உண்டாவதே பாசம் என்னும் தோட்டம்
(விதி என்னும் நதி ஒரு பக்கமாகவே ஓடுகின்றது. போடா போ…)
தந்தையை பார்த்தபின் என்ன வேண்டும் நெஞ்சமே
தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே
தெய்வமே தெய்வமே
நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன் தேடினேன் .. கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை



Deiva Magan - Deivame Deivame

தெய்வ மகன் - காதல் மலர் கூட்டம் ஒன்று

காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

பாதம் முதல் கூந்தல் வரை
பால் வடியும் கிளிகள் என
பாதம் முதல் கூந்தல் வரை
பால் வடியும் கிளிகள் என
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

வக்கீல் ஆத்து வசந்தா உன்
மனதை எந்தன் வசந்தா
வக்கீல் ஆத்து வசந்தா உன்
மனதை எந்தன் வசந்தா
வட்ட கண்கள் சுழன்றாடிட
வாராய் எந்தன் விருந்தா
ஆடை கொஞ்சம் அசைந்தா
மாலா
ஆடை கொஞ்சம் அசைந்தா
உன் ஆசை கொஞ்சம் கலந்தா
நான் அணைப்பேன் கை கொடுப்பேன்
உன் விழியாலே வரந்தா

காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

ஜப்பான் ரிடர்ன் ஜயந்தி
உன் மேனி வண்ணம் செவந்தி
ஜப்பான் ரிடர்ன் ஜயந்தி
உன் மேனி வண்ணம் செவந்தி
மெல்லப்பேசும் இதழ் பூவிலே
தேனை கொஞ்சம் அருந்தி
கூந்தல் தன்னை திருத்தி
மீனா
கூந்தல் தன்னை திருத்தி
உன் கொஞ்சும் கண்ணை நடத்தி
நான் அழைப்பேன் என் மனத்தில்
ஒரு மணமேடை அமர்த்தி

காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

சொக்கத்தங்கம் ஒடம்பு
நீ சொல்லும் வார்த்தை கரும்பு
முத்துத் தேரும் பழத் தோட்டமும்
முன்னால் உண்டு திரும்பு
வெள்ளி தட்டில் அரும்பு
நீ அள்ளி கொஞ்சம் வழங்கு
நான் வளைப்பேன் கை பிடிப்பேன்
என் மடி மீது மயங்கு

காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்



Deiva Magan - Kadal Malar Kootam

Followers