Pages

Search This Blog

Saturday, December 22, 2018

சாமி 2 - அதிரூபனே அதிகாரனே

அதிரூபனே அதிகாரனே
அதிரூபனே அதிகாரனே

சூறை காற்றென வந்தாய்
என் சுதந்திரம் மீண்டும் தந்தாய்
மாமலையாகி நின்றாய்
மத யானை போலே வென்றாய்

அதிரூபனே அதிகாரனே

உன் பத்து விரலும்
ஆயுதம்
உன்னை பார்க்கும்போதே
பயம் வரும்

நீதான் ஆணின் இலக்கணம்
நீ துணையாய் நின்றால்
வருமே தலைக்கனம்

அதிரூபனே அதிகாரனே
அதிரூபனே அதிரூபனே
அதிரூபனே அதிகாரனே
அதிகாரனே அதிகாரனே

மழையை நீ வந்தாய்
நான் குடையோடு நின்றேன்
பனியாக நின்றாய்
நான் வெயிலாகி வந்தேன்

உரையாடா முன்பு
மொழி ஏதும் இல்லை
என் நிழல் கூட இன்று
கேட்கும் உன் சொல்லை

என் காற்றில் ஏதோ
கலந்தது
என் கண்ணில் ஏதோ
நுழைந்தது

உன்னால் நானும் குழம்பினேன்
இந்த குழப்பம் தீர
கூடாதென்றும் விரும்பினேன்

அதிரூபனே அதிகாரனே
அதிரூபனே அதிகாரனே

மனதோடு ஏதோ
மெலிதான மாற்றம்
திசை மாறும் நெஞ்சில்
உன் தெளிவான தோற்றம்

சிறுமூளை கூட
செயலின்றி வாட
தடுமாறி போனேன்
நான் தலை கீழாய் ஆனேன் ஏன்

நீ தூரம்
நின்றாள் மெல்லினம்
உன்னை தொட்டு
பார்த்தால் வல்லினம்

நீதான்
துணிவின் ரகசியம்
என் வாழ்வில் உன்னை
கண்டது தானே அதிசயம்

அதிரூபனே அதிகாரனே
அதிரூபனே அதிகாரனே





Saamy 2 - Adhiroobaney

சாமி 2 - மொளகாபொடியே மொளகாபொடியே

மொளகாபொடியே
மொளகாபொடியே என்
இனிப்பான மொளகா
பொடியே

நீ காதலிச்ச
போதும் கட்டிக்கிட்ட
போதும் காரம்
ஒன்னும் கொரயலையே
மொளகாபொடியே

உன் கை புடிச்ச
யோகம் ஏறுதடி வேகம்
ஆசை இன்னும்
மறையலையே
துளசி செடியே

அடி எப்பவுமே
நீதான் வேணும் அடி
உன்னுடைய நிழல்
தான் நானும் நீ கோவத்துல
கூட கோவ பழம் போல
என்னை சுண்டி இழுக்குறியே

மொளகாபொடியே மொளகாபொடியே

நீ காதலிச்ச
போதும் கட்டிகிட்ட
போதும் வீரம் ஒன்னும்
கொரயலையே ஆசை
வெடியே

உன் நெத்தியில
பூசும் சந்தனத்தின் வாசம்
என்னை விட்டு போகலையே
சொக்கு பொடியே ஹான்
ஹான் சொக்கு பொடியே

ஆ ஊருக்குள்ள
உன்ன விட பேரழகி
யாருமில்ல பூட்டி
வைப்பேன் என்
கண்ணுக்குள்ள

மீசையில
ஒத்த முடி கொண்டு
வந்து போட்டுக்கவா
மோதிரமா என் விரலுல

ஹான் கண்ணால
இழுத்து கையால அணைச்சு
மின்சார முத்தம் கொடுக்கவா

அட என்னோட
எலும்பும் உன்னோட
சதையும் ஒன்னாக்கி
உயிரா படைக்கவா

மொளகாபொடியே மொளகாபொடியே
மொளகாபொடியே மொளகாபொடியே

தூரலுல
தூரலுல
நீ நனைஞ்சா
நீ நனைஞ்சா
சேலையில
நான் துவட்டி சேர்த்து
உன்னை கட்டிக்கவா

சாலையில
சாலையில
நீ நடந்தா
நீ நடந்தா
ஜல்லி கல்லு
குத்துமுன்னு பூவ
வழியில் தூவிடவா

உன்னோட
உடுப்பும் என்னோட
உடுப்பும் ஒன்னாக
வச்சு ரசிக்கவா

உன்னோட
தனியா ஒன்னாக
அமர்ந்து தானான
தனனா சிரிக்கவா

மொளகாபொடியே மொளகாபொடியே
மொளகாபொடியே மொளகாபொடியே



Saamy 2 - Molagapodiye

சாமி 2 - ஏ பெண்ணே உன்னை பாத்தா

ஏ பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா ஃபேனு

நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம்ம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைல்லு
அது புது மெட்ரோ ரயிலு

அடி யாரு உன்னை பெத்த ஆத்தா
கால தொடுவேன் அவங்களே பாத்தா

அடியே எங்கே உன்னோடியா அப்பா
கும்புடுவேன் கோயில் கட்டி
யப்பா யப்பா யப்பா யப்பா

பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா ஃபேனு

நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம்ம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைல்லு
அது புது மெட்ரோ ரயிலு

அடி சங்கு சக்கரம் போலெ
சும்மா சுத்த வெக்கிறே ஆள
உன் பின் அழகை காட்டி
ஓ மை ட்ரடிஷனல் பியூட்டி

ஐஸ் கட்டி போல உருகவெக்கிறே ஆளே
உன் குறும்புத்தனம் காட்டி
என்னை கொஞ்சுரியே நாட்டி

சரி யாரு உன்னோடியா டீச்சர்
போயடிக்க பேசி
பண்ணுறியே என்னை இப்போ
டார்ச்சர் டார்ச்சர்

பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா ஃபேனு

நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம்ம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைல்லு
அது புது மெட்ரோ ரயிலு

ஏ ஜல்லிக்கட்டு காலை
போலெ வந்து ஆள
மோதுரியே ஸ்ட்ரோங்கா
கொஞ்சம் சாப்ட்ஆ தொட்ட வ்ரோங்ஆ

கமர்கட்டு போல உன் உடைத்து நாளே
ஊறுதடி நாக்கு
அதான் நிக்கல என் பிரேக்கு

யாரு உன்னை செஞ்ச சாமி
நீ வந்தனாலே
சொர்க்கமா மாறிடுச்சு இந்த ப்தூமி

பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா ஃபேனு

நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம்ம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைல்லு
அது புது மெட்ரோ ரயிலு

ஏ பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா ஃபேனு
முஅஅஅ



Saamy 2 - Pudhu Metro Rail

சாமி - ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு

ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிடுருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு

துணிச்சல் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு
புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் திருடத்தான் தெரியல

ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிடுருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு

வள்ளுவரின் குரளாய் ரெண்டு வரி இருக்கும்
உதட்டை புடிச்சிருக்கு

காதல் மடம் அழகா உதடுகள் நடத்தும்
நாடகம் புடிச்சிருக்கு

உன் மடிசார் மடிப்புகள் புடிச்சிருக்கு
அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு

தினம் நீ கனவில் வருவதனால்
ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு

ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிடுருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு

காதல் வந்து நுழைந்தால்
போதி மர கிளையில் ஊஞ்சல்
கட்டி புத்தன் ஆடுவான்

காதலிலே விழுந்தால் கட்டபொம்மன் கூட
போர்க்களத்தில் பூக்கள் பறிப்பான்

காலையும் மாலையும் புடிக்கும்முன்னா
இன்று காதல் பாடங்கள் படிக்க வைப்பேன்

காவல்காரனாய் இருந்த உன்னை
இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்

அடடா அடடா
அடடா அடடா புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை தான் புடிச்சிருக்கு
துணிச்சல் கொஞ்சம் புடிச்சிருக்கு
உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு

புதியாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் புடிச்சிருக்கு
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு.. புடிச்சிருக்கு புடிச்சிருக்கு
.



Saamy - Pudichirukku

சாமி - இதுதானா இதுதானா எதிர்ப்பார்த்த அந்நாளும்

இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்

இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா

இன்மேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே

மாடியின் வலைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எண்ணங்களும் விட்டுபட்டு ஒளிந்திடுமே

இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா...

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பார் என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்

ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க

மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே

அஹ ஹாஹஹா.
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்




Saamy - Idhuthaanaa

சாமி - கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா

ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாங்கடியோ
ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாங்கடியோ

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

சாம்பிராணி வாசத்துல வளர்ந்த சிறுக்கி நீ
சகுணம் பார்த்து சடங்கு பார்த்து சிரிச்ச கிறுக்கி நீ

நீ சாக்கு போக்கு சொல்வதெல்லாம் நியாயம் இல்லையே
அடியே

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

ருசியா பேசுற ருசியா பார்க்கூற
ருசியா சமையலும் செய்வியா நீ

பசும்பால் நெய்யிலே துவரம் பருப்ப
கடைஞ்சு தாளிச்சு கொடுக்கட்டுமா

பத்திய சோறா நான் உன்னை கேட்டேன்
காரம் சாரமா உனக்கு சமைக்க தெரியுமா யம்மா

மிளகுல ரசமா மிளகை தூக்க
நல்ல செய்யுவேன் நீ சாப்பிட்டு பாரு

நண்டு வருக்க தெரியுமா கோழி பொறீக்க தெரியுமா
ஆட்டு காலு நசுக்கி போட்டு சூப்பு வைக்க தெரியுமா

என் இடுப்பு ஓரமா இருக்குதையா காஅமா
கண்டு நீயும் புடிச்சா எடுத்துக்கையா தாராளமா

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாங்கடியோ..
ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாங்கடியோ..

ஊரு ஓரமா ஐயனார் போல நீ
மீசைய காட்டி மிரட்டுரியே

ஓ... குஞ்சு பொறிச்சிடும் கோழிய போல நீ
வேளியே தாண்ட அஞ்சுறியே

தேதிய வச்சுதான் பாற்கையு மாத்தினா
தேதிய வச்சுதான் பாற்கையு மாத்தினா
எல்லைய தாண்டுவேன் உன் இஷ்டம் போல தான்

பங்குனி வரட்டும் பரிசம் தாரேன்
அதுக்கு முன்னாலே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு நீ

மஞ்ச பூசி குளிச்சிட்ட மனசுக்குள்ள வேர்க்குது
உன்ன நானும் பார்துட்டா உடம்பு முழுக்க கூசுது

வேண்டியத அறைச்சு தான் தேச்சு விட வரட்டுமா
விடிய விடிய உனக்கு நான் தலையணையா இருக்கட்டுமா

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா

தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா

ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாங்கடியோ..
ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாங்கடியோ..
 ஏலாங்கடியோ..  ஏலாங்கடியோ...



Saamy - Kalyaanam Thaan Kattikittu

சாமி - திருநெல்வேலி அல்வாடா திருச்சி மலை கோட்டைடா

எடுத்து விடு மச்சி
திருநெல்வேலி அல்வாடா …
திருச்சி மலை கோட்டைடா …
என்னாது என்னாது …

திருநெல்வேலி அல்வாடா …
திருச்சி மலை கோட்டைடா …
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா
வெளிய காக்கும் அந்த நெல்லையப்பர் சாமி
வெளிய இருப்பன் நீ விரும்பி வந்தா சாமி
தேவையை தீர்க்கும் அந்த காந்திமதி சாமி
தேடியே தீர்ப்பான் இந்த பேட்டையிலே சாமி
பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும்

திருநெல்வேலி அல்வாடா …
திருச்சி மலை கோட்டைடா …
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா

கோழி முட்டைன்னு கோழி முட்டைன்னு
கிண்டல் பண்ண கூடாது
முட்டைக்கு மேல முட்டைய வச்சா
எட்டு ஆயிரம் கோபாலு

குடிக்கிரான்னு குடிக்கிரான்னு
கேவல படுத்த கூடாது
500 அடிச்சும் அவுட் ஆகல
டெண்டுல்கர் தான் நம்மாளு

காஞ்சிபுரம் பட்டுடா பழனி மலை மொட்டைடா
பாண்டிச்சேரி மில்ய்டா நம்ம மதுரையில மல்லிடா
கோயிலுக்கு நேந்து விட்ட காலை இந்த சாமிடா
கோவம்னு வந்து விட்டா கூட்டத்தோட காலிடா
கும்பகோணம் வெத்தலை அட கொஞ்சம் கூட பத்தலை
நாட்டு காலை சக்கரை என்னை செக்கு போல சுத்துற

திருநெல்வேலி அல்வாடா …
திருச்சி மலை கோட்டைடா …

திருநெல்வேலி அல்வாடா
திருச்சி மலை கோட்டைடா
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா

டுரின் டாக்கீஸ் மணலு மேல
வாத்தியார் படங்கள் பார்த்தவன்
ஸ்டீரிங்கை போல வழக்கை போகும்
ரூட்டை பார்த்து வலைஞ்சவன்
பூட்டு போட்ட லார்ரி செட்டுல
தூக்கம் போட்டு வாழ்ந்தவன்
லத்தியா வச்சு முட்டிய பேக்கும்
வித்தை எல்லாம் தெரிஞ்சவன்
ஊத்துகுழி வெண்ணை டா திருசெந்தூரில் வெள்ளம்டா
சென்னைல என்னடா தண்ணி கொஞ்சம் கூட இல்லைடா
ஆழம் பார்த்து காலை விடு சொல்லுறது சாமிடா
சாமி கிட்ட மல்லு கட்ட ஆள் இருந்தா காமிடா
தூத்துக்குடி உப்பு தன் நீ ஊதிகிட்டா மப்பு தான்
திண்டுகல்லு பூட்டுடா நான் சொல்லுறது ரைட் டா

திருநெல்வேலி அல்வாடா …
திருச்சி மலை கோட்டைடா
 திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா
வெளிய காக்கும் அந்த நெல்லையப்பர் சாமி
வெளிய இருப்பன் நீ விரும்பி வந்தா சாமி
தேவையை தீர்க்கும் அந்த காந்திமதி சாமி
தேடியே தீர்ப்பான் இந்த பேட்டையிலே சாமி
பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும்
கூவும் … கூவும் ....



Saamy - Aarumuga Saam

Followers